கவிதை: பட்டியல் – இரா.இரமணன்.

கவிதை: பட்டியல் – இரா.இரமணன்.

 

 

முன்னாள் முதல்வர் வீட்டில்

நாலு கிலோ தங்கம்

அறுநூறு கிலோ வெள்ளி

ஆறாயிரம் பாத்திரங்கள்

பத்தாயிரம் அணிமணிகள்

என்ற பட்டியலில்

எட்டாயிரம் புத்தகங்கள்

இருநூற்றைம்பது எழுது பொருட்கள்

கண்டு துள்ளிக் குதித்தபோது

இறுதியாக வந்தது

அறுபத்தைந்து சூட்கேஸ்.

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *