கவிதை: காண வேண்டும் – தேன்மொழி தாஸ்

கவிதை: காண வேண்டும் – தேன்மொழி தாஸ்

தாய்மொழி தொழும் நாட்டை
மதம் முதுகெலும்பாக்கப்படாத தேசத்தை
ஒற்றைக் கரிகாடு கொண்ட கிராமங்களை
கருணையே கடவுள் என்று ஏகமனதுடன் துதிக்கும் மக்களை
தூய சிந்தனைகளை விதைக்கத் தெரிந்த ஞானிகளை
சாதிப்பெயரற்ற சான்றிதழ் வழங்கும் பள்ளிக்கூடங்களை
அறிவை ஞாயிறு என்று பாடும் குழந்தைகளை
ஆன்மநேயத்தை தாய்பாலாக ஊட்டும் தாய்களை
காற்றைப் போன்று எங்கும் செல்லத் தகுதிவாய்ந்த உயிர்க் கவிதைகளை
பசி என்ற கூக்குரல் இல்லாத நாட்களை
நீதி சொல்லும் அதிகார பீடத்தில் நீதிமான்களை
சமத்துவத்தை ஆழ்மனதாகக் கொண்ட அரசை
பழங்குடிக் காட்டுப் பாடலை தேசியகீதமாக பாடும் காலத்தை
பூமி எனும் ஒற்றைச் சுழல்மீது இயங்கும் யாவருக்குமான ஆதிமுதல் வார்த்தையைக்
காண வேண்டும்
– தேன்மொழி தாஸ்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *