இரா. தங்கப்பாண்டியன் கவிதை

இரா. தங்கப்பாண்டியன் கவிதை

என் இனிய
உயிர்வாங்கியே….
உனக்கு நினைவிருக்கிறதா….?
கொதிக்கும் காய்ச்சலால்
நான்வாடிக்கிடந்த போது
நீயென் நெற்றிதொட்டு
காய்ச்சலைக் குறைத்தாய்..
தகிக்கும் கோடைவெப்பநாளொன்றில்
பீச்சியோடிய வயிற்றாலையால்
சரிந்து கிடந்த என்னில்
இதழோடு இதழ்பதித்து
வயிற்றோட்டம் நிறுத்தினாய்…
கால மாற்றங்களில்
கணவன் மனைவியாய்
பல கொள்ளை நோய்களைச் செரித்தே
வளர்ந்து வருகிறோம்….
எனோ தெரியவில்லை
இந்த மூன்று மாதங்களாய்
ஒதுங்கியே நிற்கிறாய்…..
என்ன ஆச்சு உனக்கு?
நெருங்கி வா…
சமூக இடைவெளி
சக மனிதர்களுக்கு இடையில்தான்.
சரிபாதிகளுக்கு இடையிலல்ல….
வா….
எதுவானாலும்
ஒன்றாவோம்.
-இரா. தங்கப்பாண்டியன்.
Show 1 Comment

1 Comment

  1. முருகன்

    அருமை காலத்தின் தேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *