கவிதை: ஒடுக்கப்பட்டவன் – வசந்ததீபன் 

கவிதை: ஒடுக்கப்பட்டவன் – வசந்ததீபன் 

ஒடுக்கப்பட்டவன்
_______________________

 

அவனது கண்ணீர் வழிந்தோடுகிறது..
அவனை பசி எரிக்கிறது..
அவன் —
எந்த சாதிக்கும் சொந்தமில்லை
எந்த மதத்திற்கும் கட்டுபடாதவன்
எந்த இனத்திற்கும் உடைமையில்லை
எந்த கட்சிக்கும் உட்பட்டவன் இல்லை
வேதங்களைத் தெரியாது
பைபிளை வாசித்ததில்லை
குர்ரானைக் கற்றதில்லை
புராணங்களைப் படித்ததில்லை
இதிகாசங்களைக் கேள்வியுற்றதில்லை
மொழியற்றவன்
குரலற்றவன்
நிலமற்றவன்
வீடுபேறு பெறாதவன
நாட்டுப்பற்று அறியாதவன்
கனவுகள் அவனிடம் இல்லை
கடவுள் சாத்தான் பாகுபாடு புரியாதவன்
கருணையை அவன் நுகர்ந்ததில்லை
இரக்கத்தை  அவன் ருசித்ததில்லை
இலட்சியத்தை அவன் ஏந்தியதில்லை
மிருகமாய் உழைப்பான்
புழுவாய் செத்துப் போவான்
அடையாளங்கள் அவனுக்கு ஏதுமில்லை
தடையங்களை அவன் விட்டுச் செல்வதும் இல்லை.
வசந்ததீபன் 
போடிநாயக்கனூர்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *