கவிதை: ஓடையின்  கண்ணீர் – முத்துராமன் முத்துமாணிக்கம்

ஓடையின்  கண்ணீர்

****************************

பருகப் பருக பதனீர் தோற்கும்,

ஆடும் மாடும் மக்களும் பருகும்,

பால்நிறத்தில் பாய்ந்தோடிய

எங்களூர் ஓடை,

மண் வாசனை மணக்கும்

மூலிகை வாசம் வீசும்,

எந்நோயும் தீண்டியதில்லை,

எவ்விடரும் நேர்ந்ததில்லை.

காலம் உருண்டோட

காய்ந்துபோச்சு எம்

கனவுகள் போல

ஓடையும் இல்லை

கால்கள் நனைக்க

தண்ணீரும் இல்லை,

தாகம் தீர்க்க

மறை நீர் பற்றி

மேலை தேசம் பேச,

விலை நீரானது

எம் தேசத்தில்.

 — முத்துராமன் முத்துமாணிக்கம் , திருமங்கலம் .