கவிதை: தும்பியின் சிறகு — பொள்ளாச்சி முருகானந்தம்

கவிதை: தும்பியின் சிறகு — பொள்ளாச்சி முருகானந்தம்

தும்பியின் சிறகு…
—————————-
நானு
டவுசர்  கிழிஞ்ச
தன்னாசியப்பங் கோயிலு வீதி
பரமான்…….
கோழி மூட்டி சின்ராசு
மூக்கு நோண்டி ஏரிமேடு பொன்னி….
அப்புறமேளு
சவுரி முடி எம்சிஆரு நகரு காளீஸ்வரி
வெரலு சூம்பி கட்டையன்
சூளேஸ்வரன்பட்டி சோத்துமூட்டை
ரங்கநாயகி…..
சின்ன நெல்லிக்கா கொண்டு வார
ஒல்லி டீ.இன்சியலு பரமேசு..
ஓடாத வாட்ச்சா கொண்டாந்து
சீனு போட்ட வாட்ச்சு கடை சேட்டுப்பைய…
குண்டு டிபன்பாக்ஸ்ல
லெமன் சோறு தேங்கா சோறா
கொண்டாந்த கிறிஸ்டோபரு……..
மாங்காச் செடிய குடுத்துப்புட்டு
அடுத்த புதங்கிழமை மாங்கா வரும்டானு சொல்லி
சிலேட்டுக்குச்சி புடுங்குன சோதி…
இன்னுங் கொஞ்சப்பேரு
எங்க ஒன்னாங்கோப்பு வள்ளி டீச்சர்
கத்த கத்த
இன்ட்ரோல் விட்ற கேப்புல
வெசப்பூண்டு செடிய
வாசக்கூட்ற வெளக்குமாரு கணக்கா
கையில தூக்கி
முட்டி தரையில மோத
நாயா கேது கேதுனு தெகத்தி ஓடி..
கடேசியா…
ஒரு மாறி நெனைக்கப்படாது
ஒன்னாங்கோப்புலயே
காளீஸ்வரின்னா அவ்ளோ புடிக்கும்..
சரியா
அந்த புள்ள கையிலயே
அந்த ஒத்த தும்பி சிக்க……..
ஓ…ன்னு கத்தி
டவுசர் சோப்புல கொண்டாந்த
நூல கட்டி
சொய்ய்ய்யின்னு….பறக்க விட
பெல்லடிக்க…….
மரப்பலகை மேல
லூசு டீச்சரு வள்ளிக் கொரங்கு
கண்ணாம்முழிய உருட்டி
அல்லாரையும் முட்டி போட வச்சுரும்..
சத்தியமா
அப்போ வால்ல நூலுகட்டுன தும்பி
என்னாயிருக்கும்னு நெனக்காம…..
இன்ட்ரோலு போயி
மத்தியானமும்
இன்னோரு தும்பியத்தேடி
ஒடிருக்கோம்…..
எல்லாஞ் சரிதேன்
இவ்ளோ வருஷம் போயி
இப்ப நோகுது மனசு
தும்பி சிறகு எப்பிடி அடிச்சு நொந்திருக்கும்….
போடா..லூசுப்பயலேனு
மனசு கெடந்து அடிக்குது……….
— பொள்ளாச்சி முருகானந்தம்
Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *