கவிதை: பயண சிநேகம் – மதுரா

பயண  சிநேகம்
************************ 
வினாவுதலும் விசாரிப்பதுமாய்
உயிர்ப்புடன் ஆரம்பமாகிறது.
ஒரு உரையாடல்..
முகமறியாதவர்களையும்
நலம் கேட்டு
நட்பாக்க விழைகிறது..
ஒரு கோட்டின் பயணத்தில்
ஏதோ ஒரு சொல்
திறக்கிறது
மனத்தின் கதவுகளை..
ஏதோ ஒரு சமிக்ஞை
இழுத்துத் தாளிட்டு
இறுக மூடுகிறது இதழ்களை..
ஒத்த அலைவரிசைக்குள்
ஊடுருவ
காத்துக் கிடக்கின்றன
சில சொற்கள்..
எப்படியோ
பயணங்கள் எப்போதும்
ஒரு சிநேகத்தை
இறங்கும் நிறுத்தத்தில்
விட்டுப் போகிறது.
சிலவற்றை
மறுத்தும் போகிறது..
மதுரா