யார் முட்டாள்?
கேள்வி புதிதல்ல
புதிருமல்ல,
பதிலே இங்குப் புதிராகவும்
புதிதாகவும் உள்ளது.
செங்கோலே சொல் ,
வினா இட்டவனை
வினை செய்தவனாக்கி
வீண் பழிக்குள்ளிட்டு
வீழ்த்தியதாய்ப் பெருமிதம் கொள்கிறாயே
யார் முட்டாள்?
மண்ணைத் தாயாகவும்
மழைநீரைத் தாய்ப்ப்பாலாகவும்
மரத்தைத் தாய்மடியாகவும்
மதிப்பவர்களை
மதியிழந்து மட்கச் செய்கிறீரே
யார் முட்டாள்?
காவிரிக்கோ மணல் பேழை
தாமிரபரணிக்கோ செப்புத் தொழிற்சாலை
ஆவணப் படுத்தியவனுக்கோ சிறைச்சாலை
நேற்று அவன்
இன்று இவன்
நாளை ஒருவனிலன்
இக்கோட்ப்பாட்டிற்கா
இப்படியொரு கிலியாட்டம்,
இது யாரை அடக்க?
யாரைப் பயமுறுத்த?
யாரை முட்டாளாக்க?
விடை உணர்ந்த
மனப்போரளிகளுக்குச் சொல்கிறேன்
இக்கேள்விகளைக்
கேட்பினும் கேளாத்தகையவே!
(சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாக்கப்பட்டபோது எழுதியது )
..யாழினி


வாழ்த்துக்கள் தந்தையை போலவே மகளும்..