srianuradhaKavithaikal ஶ்ரீ அனுராதா கவிதைகள்

ஶ்ரீ அனுராதா கவிதைகள்

 

1. கண்ணீர் துளிகள்!

நீ எனக்கு சொந்தம் இல்லை என்று தெரிந்தும்,
என் மனம் உன்னை மட்டும் தான் நினைக்கின்றது,
ஆயிரம் சொந்தம் என் அருகில் இருந்தாலும்,

அன்பாய் உன் நினைவு
ஆழமாய் என் மனதில்,
அழகாய்ப் பூ பூக்கின்றது

மனதில் பூத்த பூ
காதலாக மலர்ந்து
கண்ணில் ஒளி வீசுகின்றது

கற்பனையில் மட்டும்
என் கண்ணிர் துளிகளாக!

2. சந்தேக பார்வை!
உயிரில் கலந்த பாசம்
உணர்வில் வந்த நேசம்,
இதயத்தின் சுவாசம் நீ
அன்பின் வாசம் நீ
சுவாசத்தை பொய் என்று
நினைத்து விட்டாய்
வாசத்தில் பூத்த பூவை
பறித்து எரிந்து விட்டாய்.
சந்தேக பார்வையில்
ஆண்களில் பலரும்
அயோத்தி இராமன்தானோ?
எழுதியவர்
                     கோ.ஶ்ரீ அனுராதா




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 9 Comments

9 Comments

  1. எழுமலை.க

    உணர்வுபூர்வமான வரிகளில் மிக அற்புதமான கவிதைகள்.வாழ்த்துக்கள் அக்கா👏👏👏

  2. கண்ணீர் துளிகள் கவிதை வாசித்தேன்.

    //ஆயிரம் சொந்தங்கள்
    அருகில் இருந்தாலும்
    அன்பாய் உன் நினைவு
    ஆழமாய் என் மனதில்
    அன்பாய் பூ பூக்கிறது//

    என்ற வரிகள்,

    காதலில் வீழ்ந்தார் ஒவ்வொருவரும் அனுபவித்ததுதான். நமக்கென்று ஒருவன் / ஒருத்தி என்ற உணர்வே நம்மை ஆக்கிரமிக்கும் அந்தக் காலம் பசுமையானவை. காதல், கண்ணீர்த் துளிகளாக முடிவது கொடுமை.

    கவிஞர் கோ. ஸ்ரீ அனுராதா, தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். எழுத எழுத எழுத்து கூர்மைப்படும்.

    வாழ்த்துகள்.

    இளையராஜா
    9840961947
    சேலம்.

  3. ச.லிங்கராசு

    காதல் உணர்வுகளின் வடிகாலாய்
    பாய்கிறது கவிதை.காலத்தின் கட்டாயம் அயோத்தி ராமனை வரவழைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *