கவிதை : மறுசுழற்சி
உதிர்ந்த இலைகளை
தூக்கிப் பறந்தன
குருவிகள்…
மரத்தில்
பலமுறை
ஒட்டிப் பார்த்தும்
இலைகள்
கீழே விழவே…
செய்வதறியாது
மரத்தடியில்
சேர்த்தன…
சிறது நாட்களில்
அவை மக்கிப்போக
குருவிகள் துக்கித்தன…
மக்கிய இலைகளின்
நினைவுகளுடன்
காலம் நகர்ந்தது…
கூச்சலிட்டு
ஆர்ப்பரித்தன குருவிகள்,
மரத்தின் புதுத் தளிர்கள் கண்டு…
இப்போது
இலைகள் உதிர…
சற்றும் சிந்திக்காது
நேரே சேர்த்தன மரத்தடியில்…
ஏற்றுக்கொள்ள…
காத்திருக்க…
பழகிவிட்ட
குருவிகளுக்குப் புரிந்தது
இயற்கையின்
மறுசுழற்சி…
எழுதியவர் :
சு. இளவரசி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

