இதய நாளங்களில்
எங்கிருந்தோ பூத்த மனிதத்தின் பயனாக..
யன்னலில் இருந்த
சிலந்தி வலையை ஒட்டடை அடிக்க
மனம் வரவில்லை.
அன்றைய நாளில்
அம்மா சொன்னது போலவே..
இன்று இவனுக்கும் கிடைத்தது
புதுவீடும் சில உறவுகளும்.
நீங்கள் சொல்லக்கூடும்
அதன் பெயர்
முதியோர் இல்லமென்று.
உணருங்கள்
உலக வாழ்க்கையில்
மனிதனும் சிலந்தியும்
வெவ்வேறல்ல
எழுதியவர்
ஜேபி நீக்கிழார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

