கவிதையின் கருவிற்காக
அலைந்து திரிகையில்
சிந்தனை வெளியில்
வந்தமரும் நிழலவன்
நிலத்தின் அடியில் நீரும்
நீரின் அடியில் நிலமும் போல
என் சொற்களின் பெருவெளியில் நிறைந்தவன்
வரிசை கட்டி வந்த
வார்த்தைகள்
பந்தயத்திற்குச் செல்லும்
புறாக்களைப் போல
அவன் பின்னே பறந்துவிட
வெற்றுக் கூண்டாய் நான்
சொற்களற்ற புல்வெளியில்
இரையைத் தேடுபவளாய் நான்
முழு ஆட்டையும் விழுங்கிய
மலைப்பாம்பாய் அவன்.
எழுதியவர்
செ.ரா.கிருஷ்ணகுமாரி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

