ரா.சண்முகவள்ளியின் கவிதைகள்
1
யாரும் தேடாத
யாருக்காகவும் வாடாத
வாழவென்பதோ
அவளின் அதிகபட்ச கனவானது
2
அன்று வீட்டுச் சுவரை
அலங்கரித்த புகைப்படங்கள்
இன்று கைபேசியில் கைதாகின!
3
தடுமாறும் சமயங்களில்
தட்டிக்கொடுக்க ஆள்தேடாதே
உன் இருகைகளே போதும்
துவளும் போதெல்லாம் தலைகோத
இரவல் கைகளை
நம்ப முடிவதில்லை !
4
பூ விற்கும் பாட்டி
கூடுதலாகவே வழங்குகிறாள்
சில முழப் புன்னகைகளை.
5
பிரியமானவளாய்
இருந்த நான் என்று
பிழையானவளாய்
ஆனேன் என்று
எண்ணியே கழிகின்றன
எந்தன் பொழுதுகள்
6
கைப்பாவையாக இருந்தவரை
கிடைத்த காதலிப் பட்டம்
காற்றில் கரைந்தது
ஏன் என்ற வினாவால்…
7
என்னைக் குறித்து
நீ வாசிக்கும்
குற்றப்பத்திரிக்கையில்
உன் இயலாமையை
என் அறியாமை என்று
விளம்புகிறாயே
ஓ இதுதான்
உன்னில் என்னை
கலப்பதோ?
8
சண்டையிடும் போதெல்லாம்
என் குழந்தை என வாதிடும் நீ
கழிவறைப் பணிவிடைகள் செய்ய
கண்டுகொள்ளாததும் ஏனோ?
9
உனக்கான தேவைகளுக்கு
வெள்ளைக் கொடியுடன்
வலம் வரும் நீ
என் தேவைகளின் போது
நீதி தேவதையாக
நியாய தராசு ஏந்துவதும்
ஏனோ!
அதுவும் கண்ணில் ஒரு கறுப்புத் துணி
கட்டியபடி!
எழுதியவர் :
ரா. சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.