1
மொழி தெரியா ஊரில்
முகமறியா குழந்தை
புன்னகைத்து கடப்பதும்
ஒரு உவகை தான்….
இயற்கை அனைவரது மடியிலும்
தவழ்ந்து விளையாடுகிறது
நம் தேசத்துக்காரர்களென்று…..
தெரியாது மொழி சத்தத்திற்கு காதுகள் செவி மடுக்கவில்லை….
யெனினும் அம்மாவென அழைக்கும் குழந்தைகளுக்கு யார்
கற்றுக் கொடுத்தது அன்பின் மொழியது அனைத்து கடந்து
மொழி அறியா ஊரிலும்
முகமறியச் செய்கிறது…
சில மணி நேரங்கள் உற்று
நோக்கியும் புரியவில்லை
முகவரியின் முழுவரிகள்
எண் கோடுகள்
என்னவோ எண்ணத்தோடு
ஒட்டியே பயணிக்கிறது….
வல இடப்புறமாக புரியாது
நிற்கும் மனிதர்களுடன்
கோடிட்டப்படி உடன் செல்கிறது
கை அசைவுகள்….
அடிக்கடி உதைக்கும் மழைக்கும் தெரியவில்லை
பணமும் அதிகமில்லை தங்கும் இடமுமில்லை…..
இறங்கிய நொடியிலிருந்து
தேடி அலைகிறது நம் பெயருடைய மனித முகங்களை
இருந்தும் புன்னகைக்காக மறுக்கிறது இரும்புத்திரையின் இதங்களாய்….
2
தூரத்தி செல்லும் நாட்களில் ஒளிந்திருக்கும்
நாளைய கனவுகளுக்காக
தேடல்களில் பதுங்கிக்
கொள்கிறது
பழைய தேடல்களில் சில
கலைந்த கனவுகள்….
வானில் வெளிப்படாத சில நட்சத்திரகளாய்
ஆழ்மனதின் ஓரத்தில் பூத்திருந்த ஆசைகளைத் திரையிட்டு மறைக்கிறது
சில அர்த்தமற்ற கனவுகள்…
பழங்கால கதைகளாய் கனத்துக் கொண்டே போகின்றன
சில பால்ய கனவுகள்.
முந்திய கனவுகளுக்குள் சிக்கிக் கொண்டது தவிக்கிறது
சில நிகழ்கால கனவுகள்
நம் ஆசைகளை எல்லாம் ஒளித்து நினைவலைகளுக்குள் புதைத்து
என்றாவது ஒருநாள் நடந்து விடும் என்பதென் எதிர்கால கனவுகள்.
எழுதியவர்
ச. சத்தியபானு

