பொய்கள்
கேள்வியாளர்
வாழ்நாளில் சொன்ன
ஒரு உண்மையைக் கேட்டார்
விக்கித்து நின்ற பதில்களற்ற
அரசியல்வாதி
ஒரு கணம் நிதானித்து
பொய்களின் கயிற்றிலேறி
கற்பனை முலாம் பூசத் துவங்கினார்
வந்து விழுந்த
பொய்கள் யாவும்
உண்மைகள் போலவே
மின்னத் துவங்கின
சாயம் பூசிய உதடுகளில் இருந்து ஒரு போதும்
ஒப்பனையற்ற வார்த்தைகளை
உற்பத்தி செய்ய முடியாதென்பதை
பத்திரிகையாளர் குறித்துக் கொண்டார்
காகிதமெங்கும்
வழிந்தோடிய பொய்களை வாசகர்களிடம் விற்கத் துவங்கினார்
குவிந்து கொண்டிருந்த
காகிதக் குப்பைகளில் இருந்து அவமானம் தாளாது
காந்தியார் அழுது கொண்டிருந்தார் …
எழுதியவர்:
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
9965802089
ctamilraj@gmail.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

