1.
தாமரை பூக்கும் பூக்கும் என்கிறார்கள்
அது குளத்தில் தான் பூக்கும்
யார் மனதிலும் பூக்காது.
2.
அமித்ஷா மோடி நண்பர்கள்
அம்பானி அதானி நண்பர்கள்
இவர்கள் கையில் இந்தியநாடு.
3.
டீ விற்றவர் இப்பொழுது
வடையும் விற்கிறார்
அதானி அம்பானி வாங்குகிறார்கள்
4.
நாக்பூர் கல்லூரியில்
பயில்கிறார்கள்
பொய் சொல்லும் கலை.
5.
கற்பழிப்புக் கதைகள் கேட்டு
கதறி கதறி அழுகிறாள்
தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதி.
6.
மசூதிகள் இடிப்பார்கள்
ராமனுக்குக் கோயில் கட்டுவார்கள்
பக்திக்குள் வன்முறைகள்.
7.
ஒரு மொழியை உயர்த்தி பேசுவார்கள்
இன்னொரு மொழியை இழிவுபடுத்துவார்கள்
மொழி வெறியாளர்கள்.
8.
நேரு என்ன செய்தார் என்று
கேள்வி கேட்கிறார்கள்
இவர்கள் என்ன செய்தார்கள்?
9.
வீதியில் நடந்து சென்றார்கள்
நிர்வாணமாய் இரு பெண்கள்
மணிப்பூரில் மானபங்கம்.
10.
ஊழல்வாதிகள் கட்சியில் சேர்ந்தவுடன்
தூய்மையாக்கி விடுகிறது
தாமரை வாஷிங் மெஷின்.
11.
குரு எவ்வழியோ அவ்வழிதான்
தொண்டர்கள் வழி
மன்னிப்பு கடிதம் எழுதி கொடுப்பது.
12.
அவர்கள் சாப்பிடாதப் பொருள்கள்
வெங்காயம் பூண்டுக்கு
ஜிஎஸ்டி வரி.
13.
வங்களில் ஏழைகளின்
மினிமம் பேலன்ஸ் பணம்
திருடும் கொள்ளையர்கள்.
14.
கேஸ் மான்யத்தைக் குறைத்து விட்டு
விலையை உயர்த்தினான்
ஏழைத்தாயின் மகன்.
15.
எத்தனை கோயில் குளம்
சுற்றி வந்தாலும் போகாது
மக்களுக்குச் செய்த பாவங்கள்.
16.
கருப்பு பணம் வெள்ளையாக்கி
பணக்காரர்களுக்கு உதவுகிறார்
தேர்தல் பத்திரங்கள் விற்று.
17.
மசூதி இடித்தவருக்கு
கௌரவப் பட்டம்
பாரத் ரத்னா.
18.
அவர்கள் போலி பக்தி நினைத்து
காரித் துப்புகிறார்கள் பெண்கள்
கற்பூத்திற்கு ஜிஎஸ்டி வரி.
19.
வெறுப்பு அரசியலுக்கு
முற்றுப்புள்ளி வைக்கிறார்கள்
வெறுத்துப் போன மக்கள்.
எழுதியவர்
ந க துறைவன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

