மருந்துத்துறையில் அரசியல் – சுகுமார் சௌரிராஜன் 

பல பத்தாண்டுகளாக லாபம் சம்பாதிப்பதில் மருந்துத்துறை முன்னிலை வகுத்து வருகிறது. இந்த துறையில் கடுமையான ஆராய்ச்சிக்கு பின் அதனைத் தயாரித்துப் பின்னர் விற்பனை செய்து நிறுனங்கள் லாபம் சம்பாதிக்கின்றன என்ற ஒரு கற்பனையான கருத்து பொதுவாக உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல.

முதலில் வரிகளெல்லாம் செலுத்திய பிறகு 1.3 விழுக்காடு ஆராய்ச்சிக்கு செலவிடப்படுகிறது.  இரண்டாவதாக பெரும்பாலான மருந்துகள் புதிதாக பெரிய அளவில் பயன் தருவதில்லை. 2005 முதல் 2014 காலகட்டத்தில் 1,032 மருந்துகள் பழைய மருந்துகளே பிரான்ஸ் நாட்டில் புதிய பயன்பாட்டிற்கு  சந்தையில் அறிமுகமாகியது. .அதில் பாதிக்கு மேல் எந்தப் பயனும் அளிக்கவில்லை. அறுபத்தியாறு மருந்துகள் சொற்ப அளவில் பயனளித்தன, 177 மருந்துகள் ஒன்று அதன் பக்க விளைவு அல்லது எந்தப் பயனும் இல்லை என்பதால் புறந்தள்ளப்பட்டன.

அதே சமயம் ஆராய்ச்சி என்பது பயன் தருமா இல்லையா என்பது தெரியாமல் அதில் முதலீடு செய்யப்படுவதால் இத்துறையில் அதிக லாபத்தினைப் பெறுவது நியாயப்படுத்தப்படுகிறது.  10,000 மூலக்கூறுகளில் ஒன்றுதான் பயனுள்ளதாக இருக்கும் என்று இத்துறையில் இருப்பவர்களே சொல்லுகிறார்கள். இது உண்மையானாலும் கூட,  பெரும்பாலான மூலக்கூறுகள் அடிப்படை நிலையிலேயே பயன்படாது என்று இடையிலேயே ஒதுக்கப்பட்டுவிடும். ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்க 2.6 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று ஆதாரப்பூர்வமாக சொல்லப்படுகிறது,  அதே சமயம் இந்த கூற்று மறுக்கப்படுகிறது.

உண்மையில் மருந்தினைக் கண்டுபிடிக்க இவ்வளவு சிக்கல் என்றால் நிறுவனங்களின் லாபம் ஏற்ற இறக்கத்தில் இருக்க வேண்டும். அதற்கு மாறாக எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் நிதி ஆதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளன. அமெரிக்காவில் மாசசூட்டஸ் தொழில்நுட்ப கழகத்தில் பணிபுரியும் மருத்துவர் ஸ்டான்லி பின்கெல்சஸ்டினும் பீட்டர் டெமின் என்கிற பொருளாதார நிபுணர்கள் கூறுகையில் ’காப்புரிமைக் காலம் முடியும் தருவாயில் உள்ளது அதனால் மருந்துதுறை பாதிப்படையும்’ என்று பங்கு வர்த்தகர்கள் எத்தனை முறை கூறினாலும் எந்த நிறுவனமும் அதனால் எந்த பாதிப்பினையும் அடையவில்லை என்கிறார்கள்

medical – Scope e-Knowledge Center

இத்தகைய நிலையில் தொடர்ந்து இத்துறையில் லாபம் அதிகரித்தாலும் இந்தத் துறை மூன்று காரணங்களால் சில நெருக்கடிகளை சந்திக்கிறது. முதலில் காப்புரிமை காலாவதி ஆவதால் 2010 முதல் 2015 வரை 75 பில்லியன் டாலர் நஷ்டமும் அடையும், இரண்டாவதாகப் புதிய மருந்துகள் வெளிவர வாய்ப்பில்லை,  மூன்றாவதாக அமெரிக்காவில் மருந்துக்கு முதன்முதலாக விலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.  இன்றுள்ள முதலாளித்துவ நிதிமூலதன ஆதிக்க நிலையில் உற்பத்தியிலிருந்து நிதிமூலதனத்திற்குப் பணம் ஓடுகிறது. இதனால் நிறுவனப் பங்குதாரர்கள், வங்கிகள், வர்த்தக ஆய்வாளர்கள் ஆகியோர்களுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு பற்றி ஒன்றும் தெரியாது. ஆகவே இவர்கள் நிறுவனத்தின் தலைவர்களுக்கு  உடனடி லாபத்திற்கு அதிக தொல்லை கொடுக்கின்றனர் என்று காலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருந்துகளை பற்றிய அறிவியல் ஆசிரியர் கூறுகிறார்.

மருந்துத் துறையில் இந்தச் சூழலை சந்திக்க பல உத்திகள் வகுக்கப்பட்டன. அதில் ஒன்று ஒரு மருந்து அதிகமாக விற்பதற்குப் பதிலாக சந்தையில் ஒரு தனி இடத்தைப் பெருவதற்குத் திட்டம் வகுக்கப்படுகிறது. அப்போதுதான் முதலீட்டாளர்களை ஈர்க்கமுடியும். சந்தையில் இடம் என்றால் விற்பதால்தான் முடியும். அப்படி விற்காத போது பல குறுக்கு வழிகளை நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். அதனால் இத்துறையிலுள்ள சட்ட விதிகளை மீற வேண்டியிருக்கும். இது அதற்கு ஏற்ப அரசுத் துறையில் ஊழலுக்கு இட்டுச் செல்லும்.

இதற்கு வழி ஒரு மருந்தினை அதிகம் விற்க அந்த நிறுவத்திற்கு ஏகபோக நிலை இருக்க வேண்டும். இதற்குக் காப்புரிமை காலத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டும். இரண்டாவது, மருந்து விலைகள் கட்டுப்படுத்தலை சமாளிக்க வேண்டும் என்றால் மருந்துகளுக்கு மருத்துவர்கள் அதிகமாக பரிந்துரை செய்ய வேண்டும்.

இதற்கு அந்த மருந்தைப் பற்றிய முழுத்  தகவல்கல்கள் வெளியாவதைக் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது எப்போது, எப்படி அந்த மருந்தினை பரிந்துரை செய்வது என்பது பற்றி நிறுவனங்கள் முடிவு செய்ய வேண்டும். சந்தையில் ஒரு மருந்தானது தனி இடத்தினைப் பிடிக்க வேண்டும் என்றால் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினை ஊழலாக்குவது, காப்புரிமையினை பலப்படுத்துவது, மருந்துகள் பற்றிய முழுத் தகவலை வெளியிடாமல் இருப்பது ஆகியவையாகும்

அதிகமாக விற்பதிலிருந்து தனி இடத்திற்கு

முன்னர் உலகம் முழுவதும் நிலவும் நோய்களுக்கான மருந்துகளை அறிவதற்குப் பதிலாக வளர்ந்த நாடுகளில் நிலவும் நோய்களுக்கு ஏற்ப மருந்துகளை அறிவதிலேயே, அதாவது இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்றதற்கு அதிகக் கவனம் செலுத்துகின்றன. இதன் மூலம் அந்த மருந்தானது ஆண்டிற்கு 100 பில்லியன் டாலர் விற்பனையாகும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வளரும் நாடுகளில் நிலவும் நோய்களுக்கான மருந்துகள் புறந்தள்ளப்படுகின்றன ஏனெனில் இவர்களிடம் வாங்கும் சக்தி இல்லை. 2000 முதல் 2011 கால கட்டங்களில் சந்தையில் கொண்டுவரப்பட்ட 850 புதிய மருந்துகளில் முப்பதிஏழு மட்டுமே அதாவது 4% மட்டுமே மேலை நாடுகளுக்கான மருந்துகளாகும்.

அண்மையில் மேலே சொன்ன அத்துனை வழிமுறைகளையும் அடைந்து விட்டபடியால் இந்துத் துறை வேறு வழியினைக் கண்டுபிடித்தது. அது சிறியபகுதி மக்களுக்கான மருந்தாக இருந்தாலும் அதில் கொள்ளை லாபம் அடிப்பதாகும். இந்த நிலை ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில் என்ன விளைவினை ஒரு சரக்கிற்கு அளிக்குமோ, அதே விளைவினைத்தான் மருந்துத் துறையிலும் அளிக்கிறது. அதாவது ஒரு மருந்துக்கான சந்தையானது நிறைவு அடைந்துவிட்டது. எனவே ஒரு சிறிய பகுதி மக்களுக்குத் தேவை என்றாலும் அதிக விலையில் விற்கக்கூடிய மருந்தானதுதான் ஒரு மாற்றாக உள்ளது.

Pharma group calls for ramping up of contingency plans, as vote ...

உதாரணமாக ஒரு சிலருக்கு உடலில்  உறுப்புகளில் அரிப்பு ஏற்படும். இது வெகு சிலருக்கே ஏற்படும். அதற்கான  மருந்தின் விலை அமெரிக்காவில்  8000 முதல் 11,000 டாலர் விலையில் இருந்தது. 1990 களில் 60,000 டாலராக உயர்ந்துவிட்டது.  2013 களில் 120 கான்சர் மருத்துவ நிபுணர்கள் கான்சருக்கான மருந்து விலையானது பதினைந்து நாடுகளில் ஒரு வருடத்தில் சுமார் 100,000 டாலர் வரை உயர்ந்ததை கண்டித்தனர்.

இவை அனைத்தும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் நிறுவனங்கள் நியாப்படுத்துகின்றன. இதனை ஏற்கக்கூடாது. என்று பைசர் என்ற பன்னாட்டு நிறுவன முன்னாள் தலைவர் ஹான்க் மெக்னெல் கூறுகிறார். அவர் கூறுகையில் “அது மருந்துத் துறை என்றாலும் அல்லது எந்தத் துறை என்றாலும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது ஒரு பொய் என்கிறார்.” விலை என்பது சந்தையில் எந்த விலையில் விற்க முடியும் என்பதைத் பொருத்தே  நிர்ணயிக்கப்படுகிறது. நோயாளிகளின் வாங்கும் சக்தியினைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது.

மருந்துக் கட்டுப்பட்டு முறை

இந்த மருந்து துறையில் கார்ப்பரேட்டுகள் மருந்தினை விற்கும் முன் அந்த மருந்தானது அந்தந்த நட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு துறையிடம் ஒரு மருந்தினை  சந்தையில் விற்கலாம் என்ற சான்றைப் பெறவேண்டும். இது வெறும் ஒரு கடமைக்கான செயல். உலகில் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் இந்த நிலை இல்லை. இந்தியாவிலும் இந்தச் சான்றிதழ் வாங்க வேண்டும். ஆனால் வரையறுக்கப்படாத கூட்டு மூல  மருந்து கலவை (Fixed Dose Combination) விற்க அனுமதிக்கப்படுவது இந்தியாவிலுள்ள ஒரு மோசடி. அதாவது ஒரு மருந்தில் இரண்டு அல்லது அதற்கு மேல் மருந்து மூலங்கள் இருக்கும். இதனை இந்திய மருந்து கட்டுப்பாட்டுப் பட்டியலைப் பார்த்தால் புரியும். இதில் பல மருந்துகள் தடைகள் செய்யப்பட்டும், வரையறுக்கப்பட்டது மீறப்பட்டும் அல்லது மற்ற  நாடுகளில்   தடை செய்யப்பட்டிருந்தாலும் அவைகள் இங்கு  விற்கப்படுகின்றன.

Politics & Pharmaceutical Industry • BigBizTrends

இவைகளெல்லாம் பல விளைவுகளை உண்டாக்குகின்றன. அதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. அதே போன்று அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இந்த மருந்துக் கட்டுப்பாட்டு துறை ஊழல்மயமாகியுள்ளது. இங்கிலாந்தில் கிங்ஸ் கல்லூரியில் கடந்த 30 ஆண்டுகளாக மருந்துக் கொள்கைத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் சோர்ட்னி டேவிட் ஆப்ரஹாம் கூறுகையில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையில் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பதை ஊக்குவிக்கவும், நிறுவனங்களின் வியாபார நலத்திற்காக இல்லாமல் மக்கள் உடல்நலத்திற்காக இருக்கவேண்டும் என்னும் குறிக்கோள் தாராளமயத்தால் தடம்புரண்டுள்ளது  என்கிறார்.

கார்ப்பரேட் சார்பான தத்துவம் என்பது பலமான கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக இருக்க வேண்டுமென மாற்றுகிறது. இதற்காக கட்டுப்பாடுகள் நிறுவனங்களுக்குச் சாதகமாகத் திருத்தப்படுகின்றன. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுப்பாட்டுத் துறையின் செயலை மட்டும் மாற்றவில்லை, ஒரு அரசின் போக்கினையே கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக நிதி நன்கொடை மூலமாகவும், முதலாளிகளின் கூட்டமைப்புகள் மூலமாகவும் மாற்றுகின்றன என்று ஆப்ரஹாம் கூறுகிறார். இதற்கு உதாரணமாக மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் அரசின் மந்திரிசபையில் பங்குகொள்ள அனுமதிக்கப்பட்ட கொள்கைகள் மாற்றப்படுகின்றன. இதனால் இந்த மருந்துத் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக் கட்டுப்பாடுகள் இயற்றப்படுகின்றன.

இதற்குச் சிறந்த உதாரணம் இந்தக் கட்டுப்பாட்டுத் துறைக்கான நிதியினை இந்தக் கார்ப்பரேட்டுகள் ஒதுக்குவதாகும். அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஆணையம் (US FDA Food and Drug Administration), ஐரோப்பிய மருந்துத் துறை European Medicines Agency (EMA), மற்றும் இங்கிலாந்தின் உடல்நல மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை Healthcare Products Regulatory Agency in the United Kingdom (UKMHRA). இவைகளின் செயல்பாட்டிற்கு நிதி ஆதாரத்தை அரசுகள் குறைத்து விட்டதால் முன்பு இந்தத் துறைகளெல்லாம் இந்த நிறுவனங்கள் செய்யும் சேவைகளுக்கு சேவை கட்டணம் இல்லாமல் செயல்பட்டன  என்ற கொள்கக்கு மாறாக இன்று செயல்படுகின்றன, ஏனெனில் இந்தத் துறைக்கான நிதியை இந்த நிறுவனங்கள் கொடுக்கின்றன.

அமெரிக்கக் காங்கிரஸ் இந்தத் துறைக்கான நிதியினை மறுத்துவிட்டது. முன்பு அமெரிக்க காங்கிரசுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையிலிருந்து மாறாக இன்று உடனடியாக மருந்துகள் விற்கச் சான்றிதழ்கள் தரப்படுகின்றன. 1992 அமெரிக்கச் சட்டத்தினை மாற்றி இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. 2007ல் இது வெறும் ஒரு புதிய பயனுக்கு ஒரு மருந்து பாதுகாப்பானதுதானா என்பதை சோதிப்பதற்கு மட்டும் இது தரப்படுகிறது. இதனால் பல மருந்துகள் உடனடியான லாபத்திற்கு சந்தையில் விற்கப்படும் நிலை எழுந்துள்ளது.

1989க்கு முன்பு இங்கிலாந்தில்  மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்கு 35% அரசின் வரிமூலமும் 65% சேவை வரியாகவும் நிதி கிடைத்தது. ஆனால் தாட்சர் பதவி ஏற்ற பின்பு விஞ்ஞானம் என்பது தொழில் துறைக்கு ஏற்ப நுட்பத்துடன் செயல்பட வேண்டும் என்றார். எனவே விஞ்ஞானம் தொழில் துறையின் நலனுக்கா அல்லது மக்களின் நலனுக்கா என்பது தெளிவாகிறது.

இந்தச் சேவை வரி என்பது சமுதாயத்தில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை அடுக்கிக் கொண்டே செல்லலாம். முன்பு அமெரிக்காவில் ஒரு மருந்துக்குச் சான்றிதழ் வழங்கப்பட  300 நாட்கள் ஆகும். இதற்கு மேலும் அது எடுத்துக்கொண்டால் அதற்கான சேவை கட்டணத்தை நிறுவனங்கள் கொடுக்க மறுக்கும். இதனால் சட்டங்கள் தளர்த்தப்பட்டன. ஆனால் தற்போது இரண்டு மாதங்களில் சான்றிதழ் வழங்கப்பட்டு அது விற்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே மருந்தின் பாதுகாப்பின்மை காரணமாக சந்தையிலிருந்து வெளியேற்றப்படுவதும் 4.5 மடங்கு அதிகரித்துள்ளது.

Big Pharma Companies to Raise Drug Prices in January

ஐரோப்பிய ஒன்றியத்தில் அரசு மருந்துக் கட்டுப்பாட்டு சட்டத்துறை, துணை சட்டத்துறையிடம் அனுமதி பெறவேண்டும். இதற்குச் சேவை கட்டணங்கள் கட்ட வேண்டும். இதில் மருந்துக்கான சான்றிதழ் பெருவதில் போட்டி பெருகுகின்றது. இது இந்தத் துறையின் மீது சுமையினை ஏற்றுகிறது. இங்கு சான்றிதழ் பெற 210 நாட்கள் காத்திருக்க வேண்டும். இது மிக அதிகமான காலம் என்று குறை கூறுவதாக பல ஜெர்மன், ஸ்வீடன் மற்றும் பிரிட்டிஷ் நிறுவனங்களை அணுகியதில் யார்க்‌ஷையர் பல்கலைகழக ஆப்ரஹாம் மற்றும் கிரஹாம் லூயிஸ் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூழல் மக்களின் உடல்நலத்தினைப் பாதுகாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கும் இந்த மருந்துக் கட்டுப்பாட்டு சட்ட துறை தனது செயல்பாட்டிற்கு நிறுவனங்களின் சேவைக் கட்டணத்தையே நம்பி இருக்கிறது

அறிவுசார் சொத்துரிமை ஒரு உரிமையா?

மருந்துத் துறையினைப் பொருத்தவரை அறிவுசார் சொத்துரிமை ஒரு லாபம் ஈட்டும் வழிமுறையாகவே உள்ளது. இந்தக் காப்புரிமையில், ஒரு மருந்திற்கும் அந்த மருந்து சந்தையில் விற்பதற்கு முன் அந்த மருந்தினைப் பரிசோதனை செய்து அதன் நம்பகத்தன்மை, பயன்பாடு, பாதுகாப்பு ஆகியவை சோதிக்கப்படுகிறது. ஒரு நாட்டில் எந்த அளவு இந்தக் காப்புரிமைக் காலம்  அதிகமாகவும் நிறுவத்திற்கு சாதகமாகவும் இருக்கிறதோ அந்த அளவு ஒரு மருந்து நிறுவனத்திற்கு சந்தையில் ஏகபோக உரிமை இருக்கும். எனவே மருந்து நிறுவனங்கள் இந்தக் கால அளவை அதிகரிக்கவும் வலுச் சேர்க்கவும் முயலுவதில் ஆச்சரியமில்லை.

அமெரிக்க நிறுவனங்கள் இதில் முன் நிற்கின்றன. கனடாவில் 1987 க்கு முன்பு ஒரு மருந்துக்கான காப்புரிமையின் காலம் இன்னும் நிலுவையில் இருந்தாலும் அந்த மருந்தானது அதன் நாட்டு மக்களுக்குத் தேவை என்றால் அதனை கட்டாய லைச்ன்ஸ் முறை மூலம் உள் நாட்டில் தயாரித்துக் கொள்ளச் சட்டம் இருந்தது. இதனால் கனடா தன் மருந்துச் செலவில் 15 % குறைக்க முடிந்தது.  இதனை 1987ல் கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தம், வட அமெரிக்க வர்த்த ஒப்பந்தம் 1994 ஆகியவை மூலம் அமெரிக்கா கனடாவை ரத்து செய்ய வைத்தது. இதனால் கனடா நாட்டு மக்கள் இன்று மருந்தினை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.

Anti-dumping duty imposed on Chinese chemical, aluminium foil

அமெரிக்க நிறுவனங்களின் மிகப்பெரிய வெற்றி என்பது உயிர்ப் பொருள்களின் மூலம், அமைப்பு, வளர்ச்சி ஆகியவைகளை பற்றிய அறிவியல் காப்புரிமை. இதற்கான காப்புரிமை குறைந்தது பன்னிரண்டு வருடங்கள். இதில் நான்கு வருடங்கள் அந்தப் பொருளைப் பற்றிய தகவல் காப்புரிமை மற்றும் அதனை பயன்படுத்துவதற்கான காப்புரிமை எட்டு வருடங்கள் என்பதாகும். இதன் அர்த்தம் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு துறையால் இதே போன்று வேறு உயிர் பொருளுக்கோ அல்லது அதற்கு சமமான வேறு ஒன்றிற்கோ வேறொரு நிறுவனம் காப்புரிமை கேட்டால் அது மறுக்கப்படும். இந்த உயிர்ப் பொருளைப் பற்றிய தகவலானது காப்புரிமையை விட முக்கியமானது. ஏனெனில் இந்தத் தகவலை எதிர்த்து நீதி மன்றத்தில் வாதிட முடியாது.

இதனை வைத்துத் தயாரிக்கப்படும் மருந்து விற்பனையானது மொத்த மருந்து விற்பனையில் அமெரிக்காவில் வெறும் 1%தான் என்றாலும் அது அந்த நாட்டின் மொத்த விற்பனையில் 28%கும். வருங்காலங்களில் இதன் பயன் அதிகரிக்கும்.  உதாரணமாக செரிசைம் என்ற மருந்தானது கான்சர் நோய்க்கான மருந்தாகும். இது உடலில் மண்ணீரலில் ஏற்படும் நோயால் கொழுப்பு செரிமானம் சரியாக இருக்காது என்பதற்குப் பயன்படும். இதற்கு ஒரு நோயாளி ஆண்டிற்கு இரண்டு லட்சம் டாலர்கள் செலவிட நேரிடும்.

இந்த அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் தங்கள் நாட்டிலுள்ளது போன்ற வலுவான காப்புரிமை சட்டங்களுக்காக உலக வர்த்தக சபையில் அதிக அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால் பல நாடுகளின் அனுபவங்கள் வேறு விதமாக உள்ளது. அது எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளை இந்த நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்பதால் தாய்வான் போன்ற நாடுகள் கட்டாய லைசன்ஸ் உரிமை மூலம் தான் தன்னுடைய தேவையினைப் பூர்த்தி செய்தது மட்டுமில்லாமல் அதன் மருந்துக்கான செலவினையும் குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. இதே போன்றுதான் தென் ஆப்ரிக்கா நாடுகளும் பல பிரச்சனைகளைச் சந்தித்தன. அவைகள் குறைந்த விலையில் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான சட்டத்தினை இயற்றி அதன் தேவையினை பூர்த்தி செய்துள்ளன.

அமெரிக்காவைத் தலைமை இடமாக கொண்டு செயல்படும்   எல்லே லில்லி என்ற நிறுவனத்தின் காப்புரிமையினை கனடா ரத்து செய்தது. இதனால் ஆத்திரமடைந்த நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் கனடாவிற்கு எதிராக வடஅமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தினை மீறியதற்கு 500மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டது.  இதில் இன்றும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிடையே முரண்பாடுகளும் நீதிமன்ற வழக்குகளும் தொடர் கதையாக இருக்கின்றன.

அறிவினை முடக்குவது

மருந்துகள் உற்பத்தியாகும் முன்னர் அது பரிசோதிக்கப்பட வேண்டும். அது முதல் படியாக சோதனை சாலையில் நடக்கும். அடுத்தது எலி,  போன்ற மிருகங்களில் வைத்து பரிசோதிக்கப்படும். மூன்றாவதாக மனிதர்களிடம் பரிசோதிக்கப்படும். இதற்கு பிறகுதான் காப்புரிமை விலை என்பதெல்லாம்.

இந்தச் சோதனையில் ஒரு மருந்தானது அதன் பயனையும், அதன் பாதுகாப்பானது என்பதையும் நிரூபிக்கவில்லை என்றால் அது விற்கப்பட வாய்ப்பில்லை. இந்தப் பிரச்சனை இன்று நேற்றல்ல, முதலாளித்துவத்தில் நவீன மருத்துவ ஆரம்ப காலத்திலிருந்து தொடர்கிறது.

800 vacancies in Flemish chemical and pharma sector | Flanders Today

அண்மையில் 2002ல் உடலிலுள்ள சுரப்பிகளான ஈஸ்ட்ரோஜன் மற்றும்  ப்ரொஜஸ்ட்ரோஜன் இணைந்த மருத்துவ சோதனை என்பதில் உலகளாவிய பெண்களுக்கான சோதனையில் 40 வயதிற்கு மேற்பட்ட மகளிருக்கு இருதயக் குழாய் மற்றும் மார்பக புற்று நோய்  ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது என்று அறியப்பட்டது. இதனை அடுத்து அமெரிக்காவில் பிரெம்ப்ரோ என்ற இந்த மருந்தின் விற்பனை 66% குறைந்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு காட்சிகள் மாறத்தொடங்கின. பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் வருமானம் குறையாமல் இருக்க தங்களின் புதிய மருந்துகளின் முழுத் தகவல்களை மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் அளிப்பதை முறைப்படுத்தின. மருந்து நிறுவனங்கள் இந்த மாதிரியான சந்தையில்  விற்பனைக்கு  வரும்  முன் நடத்தப்படும்  சோதனைகளுக்குச் செலவழிக்கின்றன. இவை புது மருந்துகளாக இருந்தாலும் அல்லது பழைய மருந்தானது புதிய பயன்பாட்டிற்கு என்றாலும் இந்தப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். இதுதான் ஒரு மருந்தின் அடிப்படைத் தகவல். எனவே இது மிகவும் முக்கியமானதாகும். இதெற்கெல்லாம் பணத்தை நிறுவனங்கள் செலவிடுவதால் அந்த மருந்தினைப் பற்றி அந்த நிறுவனங்கள் எப்படி மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்கு விளக்குகின்றன என்பதைப் பொருத்து அதன் விற்பனைக்கான அனுமதி அமைகிறது. மேலும் ஒரு மருந்தைப் பற்றிய தகவலை மருத்துவர்களுக்கு எப்படி அளிக்கிறது என்பதைப் பொருத்து விற்பனை ஆகும்.

ஒரு நோய்க்கான மருந்து ஏற்கனவே சந்தையில் இருக்கலாம். அதே நேரத்தில் அதே நோய்க்குப் புதிய மருந்தானது கண்டுபிடிக்கப்படலாம்.. அப்போது இந்த புதிய மருந்தானது எந்த விதத்தில் பழைய மருந்தினை விட மேலானது, பயனுள்ளது, வீரியமுள்ளது குறைந்த பக்க விளைவுகளைக் கொண்டது என்ற தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்.

1980களில் இருதயக் குழாய்ப் பிரச்சனை, புற்று நோய், குழந்தைகளுக்கு வரும் இரத்த நச்சுக்கான மருந்துகளின் சோதனைகள் நிதி செலவினை குறைப்பதற்காக 43%காகவும், பயன்பாடு 31% தான் என்றிருக்கும்போதும் பாதுகாப்பு என்பது 21%தான் எனும் போது அந்தச் சோதனைகள் பாதியிலேயே கைவிடப்பட்டன.

அந்த மருந்து விற்பனையால் அதிக லாபம் கிடைக்காது என்பதாலும் இரு நிறுவனங்கள் இணைவதாலும் சோதனை கைவிடப்பட்டது. இவ்வாறு சோதனை கைவிடப்படுவது என்பது சர்வதேசத் தரம் என்ற ஹெல்சிங்கி பிரகடணத்தின் அடிப்படையில் அதன் 6 வது சட்ட அம்சத்தினை மீறுவதாகும். மனித நலனே நிதி அம்சத்தினை விடப் பிரதானமனது என்று இந்த 6 வது அம்சம் கூறுகிறது. எனவே நேர்மை, சமூகப் பொறுப்பு என்பதெல்லாம் முதலாளித்துவத்தில் வெறும் வறட்டுப் பேச்சுதான்.

மெர்க் என்ற நிறுவனம் அல்சமிர் அல்லது இதர அறிவாற்றல் பிரச்சனைக்கான மருந்தாகிய ரோபிகாக்சிப் என்பதற்கும் கிளாக்சோ நிறுவனம் சால்மீடெரால் என்ற ஆஸ்த்மா நோய்க்கான மருந்திலும் முழுத் தகவல்களை மறைத்துவிட்டன

அதே போன்று  பைசர் என்ற நிறுவனம் 6 மாத சோதனையினை 12 மாத சோதனை என்று சொல்லி செலிகாக்சிப் என்ற உடல் மற்றும் முட்டி வலிக்கான மருந்த்திற்கான. தகவலைத் தவறாக அளித்தது. இதனால் வயிற்றுப் பிரச்சனை வராது என்று சொன்னது பொய்யானது.

இதற்கு மாற்று என்ன?.

இதற்கெல்லாம் பல்வேறு பொருளாதார நிபுணர்களும், விஞ்ஞானிகளும், அறிவியல் வல்லுனர்களும் என்ன கூறினாலும் தற்போதைய முதலாளித்துவ உற்பத்தி முறையில் இதற்குத் தீர்வுகாணமுடியாது. இந்த தாராளமயத்தால் உலகத்தில் எல்லாமே முதலாளிகளுக்கு தாராளம். மக்களுக்கு நெருக்கடி.

எனவே சோசலிசமே தீர்வாகும்.

எஸ்.சுகுமார்

முன்னாள் துணைத் தலைவர்

அகில இந்திய மருந்து மற்றும் சேவை பிரதிநிதிகள் சம்மேளனம்