இதுதான் வாழ்தலென புரியும் போது
—————————— —————————— —–
எதுவுமே இருக்காது……..
—————————— ——–
வாழ்தலென்பதை
ஒவ்வொரு நொடியும்
கடந்து கொண்டேயிருக்கிறோம்….
அதுதான் நிஜம்…
ஒரு இனத்தின் மீது
விச குண்டுகளைத் தூக்கி வீசி
மரண ஓலங்களை
பென் ட்ரைவில் காப்பி செய்ததைப் போல….
ஒரு மிருகமொன்றை
அகோரமாய்க் கொன்றுவிட்டீர்கள்

என்கிறேன்..
நீங்களோ வெகு இயல்பாய்
எறும்புதானே என்கிறீர்கள்….
பூக்களை
பிடுங்கி எடுத்து விட்டு…
பூக்கள் சிரிக்கிறதென
எப்படி
உங்களால் கூச்சமின்றி எழுத முடிகிறது…..
இன்னமும்
சில்லறை தேடுகிற பக்குவத்தில்தான்
உங்களின் தான தர்மம் இருக்கிறது
மறுக்க முடியாது உங்களால்……….
ஒவ்வொரு நொடியும்
கடந்து கொண்டிருக்கிறோம்
வாழ்தலை……
-பொள்ளாச்சி முருகானந்தம்……
சில்லறை தேடுகிற பக்குவத்தில் தான் தானமும் தர்மமும்..சாட்டையடிங்க