நடப்பதற்காகவே
—————————— –
சுதந்திரம் வாங்கினோம்…
—————————— ————–
மனிதர்களாய் இருந்து
விவவசாயிகளாகிக் கொண்டோம்…
இப்படி சொல்வது கூட
ஒரு மனசாட்சியற்ற வார்த்தைதான்..
நாங்களே விதையாகி
நாங்களே விதைந்து
நாங்களே புதைந்து
நாங்களே பூத்து
நாங்களே கருகி
நாங்களே
நாசமத்துப் போகும்போதும் கூட
எங்களை நீங்களே தீர்மானிக்கிறீர்கள்…….
சுதந்திர தேசத்தின்
ஒருநாள்
மிட்டாய்க்கு இருக்கும் பவுசு கூட
எங்களுக்கில்லை…..
எங்கள்
ஒற்றை நிம்மதி சுதந்திரம்…
ஆம்
நடப்பதற்காகவே
சுதந்திரம் வாங்கினோம்…….
அனாதைகளாய்
தெருக்களில் நடக்கவாவது விடுங்கள்……
— பொள்ளாச்சி முருகானந்தம்……