அந்தய்யனுக்கு மூனேக்கரு பூமி
இருவதுக்கு பதினாலடி
வாயி பொழந்த கெணறு….
ஏக்கருக்கு எழுவது தென்னையினு
விழுந்த மரம்போக
இரநூறு தென்னை……….
நடுவால கொய்யா
அல்லையில மா
கெழக்கால மூலையில பாதானிக்கா
கெணத்த ஒட்டி எலந்தமரம்.,,
வரப்பச்சுத்தி பனை
லொட்டு லொசுக்குன்னு
மகராசனுக்கு நிறைய சொத்து கெடக்கு
ஆனா இத்துக்கெடக்கு…..
பாவம்
கெணறு வத்திப்போயி வருசமாச்சு.,……
அதா கூப்பங்கடை வரிசையில நிக்காரு
பாத்துப்போடு சாமி
அவரு திங்கத்தான் அரிசி கேக்காரு……..
பொள்ளாச்சி முருகானந்தம்..

