பொன்.தெய்வா எழுதிய "முத்தத்தின் பாடல்" கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

முத்தத்தின் பாடல் – பொன்.தெய்வா

முத்தத்தின் பாடல்

*
பேரன்பின் உன்னைச்
சந்தித்திருக்காவிட்டால்
இவ்வளவு இளமையில்
மகிழ்ந்து புசித்திருக்காது
மரணம் என்னை !

*
மனமுவந்து நீயளித்த
ஏமாற்றத்தின் துயரத்தை
எளிதில் ஆறுதல் செய்ய
ஒரு தூக்குக் கயிறே
போதுமானதாய் இருந்தது
பிரிய எனக்கு!

*
முதன் முதலாய்
நீயளித்த முத்தத்தின் சுவை
தேனில் ஊறிய
நெல்லிக்காயின்
துவர்ப்பாய் இருந்தது
நான் உன்னிடம் பகிராதது.

*
உன் வீட்டிற்கு
வந்த எனக்குத்
தண்ணீர் அளித்து
உபசரித்தாய்
இதயத்தின் தாகம்
பன்மடங்கானது.

*
நீ எதைக்கேட்டும்
மறுத்ததில்லை நான்
அதற்காக
உன்னை விலகிடும்
வன்மத்தையுமா
கேட்கத் துணிந்தாய் நீ!

*
நீ கூந்தலை ஒதுக்கும்
அழகில் மயங்கி
குடிகாரனாய்த்
தள்ளாடி மகிழ்கிறது
உன் காதணி.

*
சில நாட்கள் முன்
நீ விலகிய
ஆறா இரணங்களைக்
கடலிடம் ஒப்புவிக்கிறேன்
பேரலையால் அணைத்து
ஆழ்மடியில் உறங்கிட
பேரன்புடன் அழைக்கிறது
நானும் சம்மதித்து
உள்நுழைகிறேன்
அங்கும் ஓயாமல் ஒலிக்கிறது
உன் முத்தத்தின் பாடல்.

*********************************

எழுதியவர்:

பொன்.தெய்வா
ஐவேலி
விழுப்புரம் மாவட்டம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *