பொன்ஓவன் எழுதிய “போதையின் பாதை” ஒரு பக்க கதை | Pon Ovan "Pothaiyin Pathai" Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

பொன்ஓவன் எழுதிய “போதையின் பாதை” ஒரு பக்க கதை

“போதையின் பாதை” ஒரு பக்க கதை

இரவு நாழிகை எட்டு
செங்கலடுக்கி
பொங்கலிட்டு எரியூட்டி
பணிமுடித்து மனை
திரும்பும் வேளை…அன்றொரு நாள் அந்திப்பகல் வீழ்ந்து
பூமியின் தலையில் திலகமாய் மதி…பணிமனை தேனியிலிருந்து “இனி”மனை சின்னமனூர் செல்ல, பழைய பேருந்து நிலையம் மக்களால் பெருத்து வீங்கியதால், மாறனும் அவர் துணைவி
யாழினியும், சிறு பிள்ளைகள்
அமுதனும்,செழியனும் நகர்ப்புற பேருந்தில் புதிய பேருந்து நிலையம் நோக்கி பயணித்தனர். புதிய பேருந்து நிலையமும் இருகல் தொலைவில் கடந்து வந்து நின்றது, இறங்கினார் மாறனும் அவர் குடும்பமும், பயணம் செய்ய பேருந்துகளை உற்று நோக்கியே கடந்தது.

நாழிகையோ இரவு எட்டு நாற்பது, வந்தது பேருந்து ஏறினர், இருவர் இருவராக இரு இருக்கையில் அமர்ந்தனர். ஒலி எழுப்பி நகர்ந்தது அரசு பேருந்து பல குறுகலான பாதைகளைக் கடந்து பழைய பேருந்து நிலையம் வந்தது. மக்கள் பெருத்திருந்ததால் பேருந்து படிகளிலும் நின்ற வண்ணம் பயணம் தொடங்கியது.

பேருந்து நடுவிலும் நின்றிருந்த மக்களில், அன்றைய சேர நாடு, இன்றைய கேரளா நாட்டிற்கு
செல்லும் இருவரில் ஒருவர் தந்தை, மற்றொருவர் மணமுடிக்கா இளமங்கையான மகள். செம்மொழி தமிழின் குழந்தையான மலையாளம்
மணக்கியது. அத்தோடு மங்கையின் தந்தை அருந்திய
மதுவும் மணக்கியது, மது போதையில் நிற்க முடியாமல்
அமுதனும்,செழியனும் அமர்ந்திருந்த இருக்கையில்
அதிகார மிரட்டலில் நெருங்கி அமர்ந்தார், இருவர் அமரும் இருக்கையில் மூவர், மிகவும் நெருக்கடி இருந்தாலும் அமரட்டும் என பிள்ளைகளுக்கு பணித்தார் மாறன்.
மதுவின் போதையால் தான் என்ன செய்கின்றோமென தெரியாமல், கற்றுக்கொண்ட
கொஞ்சு தமிழால் மிரட்டி அமுதனையும், செழியனையும் நெருக்கியபடியே தன் மலையாளத்தில் புழம்பியவாறு எழவும், அமரவுமாக பயணித்தார்.
மாறனும் பிள்ளைக்ளுக்கு இடையூறு செய்யும் அவரை மதுவருந்தியதால், மன்னிக்கும் போக்கில் துணைவி யாழினியோடு பயணித்தார்.

பேருந்து வீரபாண்டியில் நின்று பயணிகளை இறக்கிவிட்டும், ஏற்றிக் கொண்டும் உருண்டது. இடையில் மதுவருந்தியவரின் மகளிடம் மாறன், தனக்குத் தெரிந்த மலையாளத்தில் ” எவட போவோ…?” எனக் கேட்க மகளோ ” பெரும்பாவூர்…” என பதில் வந்தது. பின்பு மாறன், ” நிண்ட அச்சனா…? சேட்டனா…?எனக் கேட்க ” அச்சன்” என பதில். இதனிடயில் இரண்டாம் முறை அமுதனையும், செழியனையும் ” தள்ளி உட்காருடா…” என மது போதையில் மலையாளி மிரட்ட மிரண்டு போயினர் பிள்ளைகள். மலையாளியின் மகள் மட்டும் அச்சனை பொறுமை காக்க வேண்டினார். அவரும் தூங்கலானார். மகளும் நெருக்கடியில் நின்று கொண்டு பயணம்.

பேருந்து கோட்டூர் கிராமம் நின்றது. பயணிகள் இறங்கினர், ஏறினர், பேருந்து புறப்பட்டது. மலையாளி மது போதையில் மூன்றாம் முறை அமுதனையும் செழியனையும் துன்புறுத்த, வெகுண்டெழுந்த மாறன் மலையாளியிடம், மாறன் “இருவருக்கான இருக்கையில் மூவர் அமருவது தவறு , ஏதோ மதுவருந்தியதால் பொறுத்துக் கொண்டார் மாறன், “இனி முடியாது, நீங்கள் எழுந்து நில்லுங்கள்” எனக் கூறியதும், மலையாளி தன் மொழியில் இழிவான முறையில் பேசலானார். அது கண்டு நடத்துநரும், பொதுமக்களும் கண்டித்ததால் எழுந்து புழம்பியபடி நின்று கொண்டு வந்தார். அத்தோடு நன்றாக மலையாளம் தெரிந்த நபர் அவருக்கு அறிவுரை கூறினார். அறிவுரை கேட்காது
மிகுந்த ஒலியோடு இழிவாக பேசி வந்தார்.

பேருந்து சீலையம்பட்டி நின்றது. போதையின் மயக்கத்தில் இறங்க முற்பட்டார், நடத்துநரும் பலரும் அவருடைய மகளின் நிலையறிந்து இறங்க வேண்டாம் எனக் கூறியும் திடீரென கூட்டத்தை விலக்கிக் கொண்டு பேருந்திலிருந்து
இறங்கி, தெரியாத ஊரில் புழம்பியவாறு நடக்க ஆரம்பித்தார்.

பேருந்தும் புறப்பட்டது. பயணிகளோடு நடத்துநரும், மாறனும் மலையாளியின் இளம் மகளின் நிலை கண்டு கண் கலங்கினர். கலங்கிய மனதோடு ஊமையாய் இளம்பெண்…

கறையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல் பலபேர், புலிபோர்த்திய மானாக திரியும் நாட்டில், ஒரு இளம்பெண் எப்படி கேரளா பெரும்பாவூருக்குச் செல்வார் என மாறனின் மனம் பதறியது. பேருந்தும் சின்னமனூர் நின்றது. மாறனும்,அவரது துணைவி யாழினியும் அமுதனும் செழியனும் இறங்கினர்.

மாறனின் மனம் மட்டும் ” மதுவருந்தியவர் எனத் தெரிந்தும், அவர் செய்த செயலை சுட்டிக்காட்டியது தவறா…? தன்னுடைய தனயருக்காக பேசியது தவறா…? இல்லை இளம்பெண் தனியாகச் செல்வதற்கு தான் தான் காரணமா…? என நடந்து கொண்டே , மனவலியோடு
மாறன்… நித்திரை இல்லா இரவோடு…

📚 எழுதியவர்:

✍️நா.பொன்ஓவன் B.A., D.N.C.C., D.T.P.,
த/ பெ பெ.நாகன்(லேட்)
15வ/20, மதுரைவீரன் தெரு,
சின்னமனூர் – 625 515
தேனி மாவட்டம்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *