பூங்குழலி தனசேகரன் எழுதிய "இளைஞர்களை விழுங்கும் மேனோஸ்பியர்" புத்தகம் | Poongkuzhali Dhanasekaran's Ilaignargalai Vizhunugum Manosphere Tamil Book Review | எஸ். பாலா | www.bookday.in

பூங்குழலி தனசேகரன் எழுதிய “இளைஞர்களை விழுங்கும் மேனோஸ்பியர்” – நூல் அறிமுகம்

“இளைஞர்களை விழுங்கும் மேனோஸ்பியர்” – நூல் அறிமுகம்

இணையப் பிற்போக்குத்தனத்தை உடைத்து மனிதம் பேசும் நூல்!

யார் கற்பிக்கிறார்? எதைக் கற்பிக்கிறார்? அறிவதும் தெளிவதும் சம காலத்தில் மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. ‘மேனோஸ்பியர்’ (Manosphere) என்பது ஆண்களின் பிரச்சனைகள், ஆண்மையின் பெருமைகள் மற்றும் பெண் வெறுப்பு (Misogyny) ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் ஆன்லைன் வலையமைப்பாகும்.

இன்றைய Gen-Z இளைஞர்களின் சிந்தனையை இந்த இணைய உலகம் எவ்வாறு வடிவமைக்கிறது? பெண்ணியம் மற்றும் சமூகச் சமத்துவம் குறித்த அவர்களின் பார்வையை எப்படிப் பிற்போக்குத்தனமாக மாற்றுகிறது? என்பதை ஆழமாக ஆய்வு செய்கிறது பூங்குழலி தனசேகரன் எழுதிய ‘இளைஞர்களை விழுங்கும் மேனோஸ்பியர்’ என்னும் நூல். 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களே இந்த மேனோஸ்பியர் வலைத்தளங்களை அதிகம் பின்தொடர்கின்றனர்.

இளைஞர்களின் உண்மையான வாழ்வாதாரப் பிரச்சனைகளான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதைத் திசைதிருப்பி, ஆண்-பெண் முரணாக மாற்றுவதையே ஆதிக்க சக்திகள் திட்டமிட்டுச் செய்கின்றன. அறிவியல் தொழில்நுட்பத்தையும் ஏஐ (AI) மென்பொருள்களையும் வர்க்க ஆதிக்கத்திலிருக்கும் நிறுவனங்கள் எவ்வாறு தங்கள் லாப வேட்டைக்குப் பயன்படுத்துகின்றன என்பதை ஆதாரங்களுடன் இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

நியூயார்க் டைம்ஸ் இதழில் 13 வயது சிறுவன் ஜோஷ் சார்ஜன்ட் எழுதிய பதிவை மேற்கோள் காட்டி, TikTok போன்ற சமூக வலைத்தளங்கள் வெறும் 9 நிமிடங்களுக்குள் ஒரு சிறுவனுக்குப் பிரச்சனைக்குரிய ஆணாதிக்க உள்ளடக்கங்களை பரிந்துரைக்கத் தொடங்குவதைச் சுட்டிக்காட்டுகிறது இந்நூல். “ஆண்கள் தங்கள் பெருமையை இழந்துவிட்டார்கள்; அதற்கு பெண்ணியமே காரணம்” என்ற நஞ்சை விதைக்கும் காணொலிகள், அடுத்த 2-3 மணி நேரத்திற்குள் தீவிர வலதுசாரி அரசியல் கருத்துகளாக உருவெடுக்கின்றன. தமிழ் உட்பட இந்திய மொழிகளிலும் இந்த அபாயம் அதிவேகமாகப் பரவி வருகிறது. “முந்தைய தலைமுறையினர் சமூகத்தில் இருந்து தகவல்களைக் கற்றனர்; இந்தத் தலைமுறையோ சமூக வலைத்தளங்களில் இருந்து கற்றுக் கொள்கிறது” என்ற ரோசி கேம்பலின் வரிகள் இதன் தீவிரத்தை உணர்த்துகின்றன.

பெண்ணியம், கூண்டுக்கிளிகள், சமூக சமத்துவமின்மை, ஆண்மை என்பது எனப் பல கோணங்களில் ஆய்வு செய்யும் ஆசிரியர், இதற்கான மாற்று வழிகளையும் முன்வைக்கிறார். ஆன்லைன் விரதம் (Digital Detox), வாசிப்புப் பழக்கம் மற்றும் முக்கியமாக இளம் தலைமுறையினருடன் திறந்த மனதுடன் உரையாடுவது ஆகிய வற்றின் மூலமே மேனோஸ்பியரில் வீழ்ந்து கிடக்கும் இளைஞர்களை ‘ஹியூமனோஸ்பியர்’ (Humanosphere – மனிதம் பேசும் உலகம்) நோக்கி மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார்.

இணைய உலகம் இளைஞர்கள் மீது செலுத்தும் பண்பாட்டுத் தாக்குதலைப் புரிந்து கொள்ளவும், அதை எதிர்கொள்ளவும் விரும்பும் அனைவரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான காலத்தின் தேவை இந்நூல்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:இளைஞர்களை விழுங்கும் மேனோஸ்பியர்
ஆசிரியர்:பூங்குழலி தனசேகரன்
வெளியீடு:
விலை:₹110.00 (10% Discount price was: ₹.99)
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 எஸ். பாலா

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
தொடர்புக்கு: 9444960935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *