கவிஞர் பழனிபாரதியின்
“பூரண பொற்குட”த்தை கையில் ஏந்திய கணம்….
இதயக்குளத்தில் காதலெறிந்த அத்தனை பாவையரும் நினைவுலா கிளம்பிவிட்டனர்.
பொற்குடம் நிறைய கவித்துவ பூரணத்துவம்.
கவிதையாய் முகப்போவியம்; உள்ளே ஓவியங்களாய் கவிதைகள்.
நூறு கிளைநீட்டி
ஆயிரம் பூப்பூத்து
இலட்சம் இலையசைக்கும்
கவியழகை
சில வார்த்தைகளில்
எங்ஙனம்
எடுத்துரைப்பேன்.
படிக்கப் படிக்கக் குறையாத பருகப் பருகத் தெவிட்டாத காதலின் அமுதசுரபி பூரண பொற்குடம்.
“சொற்களற்ற பாடல் “பறவையின் குரல்”
“மனக்கடிகாரத்தில் இப்போது மணியென்ன தெரியவில்லை”
ஆழ்ந்த படிமங்களால், புதிய சொல்லாடல்களால் நெகிழ்ந்த கவியாடல் நிகழ்த்தியிருக்கிறார்.
பருவத்தே காதலித்திருந்தால் பழைய காதலியுடன்…
காதலிக்காதவர் காதலிக்க நினைத்தவருடன்… கனவிலும் காதலிக்காதவர் மனையாளுடன் காதல் நடனம் புரிந்த / புரியும் களிப்பைக் கொண்டாட வைக்கிறது பொற்குடம்.
காதலை முழுமையாய் உணர… காதலியைப் பாதுகாப்பாக தங்க வைக்க கவிதையைவிட வேறொன்றா உதவிடப்போகிறது.
கவிஞர் ஒரு ஆகச்சிறந்த (role model) காதலியைக் கவிதையாக்கி இருக்கிறார்.
மரு.அ.சீனிவாசன்
நூலின் பெயர் : பூரண பொற்குடம் {கவிதைகள் }
ஆசிரியர் : பழனிபாரதி
பதிப்பகம் : தமிழ்வெளி பதிப்பகம்
விலை : ரூ 140/
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.இப்பதி