Porukkum Appal போருக்கு அப்பால்

ஈழதேசத்து இலக்கியங்களில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வலிகளைப் பேசும் காட்சிப்படுத்தும் படைப்புகளைத் திரட்டி தனது வாச்சிய அனுபவத்தைப் பகிர முனைந்துள்ளார் எழுத்தாளர் மணிமாறன். சொ ந்த நிலத்தில் அன்னியப்படுத்தப்பட்டும் ஒதுக்கப்பட்டும் துரத்தப்பட்டும் ஒவ்வோரு நிலத்தின் நிலை வாசலில் பரிதாபத்தின் சின்னங்களாக கையே ந்தி நிற்கும் ஈழஅகதி மக்களின் பாடுகள் ஒருபுறம், அடைக்கலம் என்கிற பெயரில் முகாம்களில் அடைப்பட்ட அடிமை வாழ்வில் கலவரப்படுத்தும் மனிதர்களை அடையாளப் படுத்தியும் , முகாமில் இ ந்த சனங்கள் எதிர்கொள்ளும் அவஸ்தைகளை துயர் சூல் வாழ்க்கையை கண்ணீர் காயாமல் வழங்குகிறது எழுத்தாளர்மணிமாறன் அவர்களின்”போருக்கு அப்பால்” கட்டுரைத்தொகுப்பு. 24 படைப்புகளின் வாச்சியங்களை உள்ளடக்கிய தொகுப்பாக இதுவரை இலக்கியப்புலத்தில் அறியப்படுத்தாத ஈழ எழுத்தாளர்களின் தேர் ந்த படைப்புகளை தனது நூற்பார்வையின் வழியாக அறிமுகப்படுத்தியுள்ளார் மணிமாறன்.

எழுத்தாளர் மணிமாறன்

முதல் கட்டுரை எழுத்தாளர் டேனியல் அவர்களின் பஞ்சமர் நாவலின் வாசிப்பு அனுபத்தைத் திறக்கிறது. கடல் கட ந்து பிற ந்தாலும் தமிழனின் சாதிய மனோபாவம் அவனது குருதியை சுவைத்துக் கடக்கும் என்பதற்கு தொகுப்பின் பல கதைகள் சாட்சியாக நிற்கின்றன. சாதிஅரசியலையும் அதிகார அரசின் ஆதிக்க மேம்போக்கையும் கொஞ்சமும் தயக்கமின்றி பஞ்சமர் நாவலில் உரத்துப் பேசுகிறார் டேனியல். ஈழத்தின் பொது இலக்கிய விவாதங்களில் எழுத்தாளர் டேனியல் எனும் பெயர் இடம்பெறவில்லை மிக காத்திரமான பங்களிப்பை ஈழ இலக்கியத்திற்கு வழங்கி இருக்கும் டேனியலை புறக்கணித்திருப்பது அரசியல் புலம் அன்றி வேறு எதுவும் இல்லை. உள்ளதை உள்ளபடி ஒளிவு மறைவின்றி படைப்பாக்கும் எழுத்துப்போராளியால் இந்தியாவை மட்டுமல்ல ஈழத்தையும் இறுகிப் பிடித்திருக்கும் சாதிய வேரை கதை புலனாகி நில உடைமைதாரர்களையும் சாதிய ஆதிக்கர்களையும் அடையாளம் காட்டி விட முடியும் என்பதை தனது நாவலில் நிரூபித்துள்ளார் தோழர் டேனியல் என்பது கட்டுரையாளரின் வாச்சியம் புலப்படுத்துகிறது.

துவக்குகளின் சத்தத்தில்குண்டுகளின் புகை மண்டலத்தில் மனிதர்களின் மரண ஓலம் மிஞ்சி நிற்பதை நாவலின் தொனியில் கட்டுரை உணர்த்துகிறது. சாதியின் ஆணவத்தைத் திறந்து காட்டும் படைப்பாகவே அறிமுகமாகிறது பஞ்சமர். ஒரு புறம் சாதி சாதியத்தின் சுருக்கு முடிச்சுகளை சிக்கல் இன்றி பிரித்து மேய்கிறார் டேனியல் மறுபுறம் பஞ்சமர் நாவலை கொண்டு மணிமாறன் அவர்கள் ஈழத்தின் குலக்குறிகள் துவங்கி சாதியத்தில் இறுதி புள்ளி வரை வாச்சிய மொழிக்குள் வசியப்படுத்தியுள்ளார்.

தங்களின் குல குறிகளை அகற்றிட பஞ்சமர்கள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டங்களை நாவல் காட்சிப்படுத்தியதையும் தனது விமர்சனத்தின் ஊடாகக் கடத்தியுள்ளார் கட்டுரையாளர். சாதிக் குடிகளை சேவைக்குடி குலமாக மாற்றிய ஆதிக்கக் குடிகளின் மேலாதிக்கத்தைத் துல்லியப்படுத்தியும் அவர்கள் தாங்களே முன்வந்து அடிமை இனமாகத் தாழ் ந்து பிறப்பின் பெரும் பாவச் சுமையாகத் தங்களை நியாயப்படுத்திக் கொண்டு வாழப் பழகிய குடியேறிகளாக வளர் ந்து நிற்கின்றனர்.

சாதி ஒடுக்குமுறை மட்டுமின்றி நிலமற்றவர்களின் மீதான நில உடைமைதாரிகளின் ஆக்கிரமிப்பு கூட அழுத்திப் பேசிட தயங்கவில்லை டேனியல் என்பதே நூலின் வாச்சியம் வெட்ட வெளியாக்குகிறது. 40 வருடங்களுக்கு முன்பே ஈழத்தில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க புரட்சி நடத்திய விவசாய போராளிகளின் வரலாறுகளை பதிவிட்ட நாவலின் குறிப்புகளை அறியப்படுத்துகிறது அத்தியாயம்.

”நீங்கள் எங்களை நிர்பந்திக்க முடியாது நாங்கள் நிலத்தில் இறங்க மாட்டோம் குடிமைப் பணிகளை செய்ய மாட்டோம்.”நாவலின் உச்சபட்ச வரிகளைத் திரட்டி அதிகார வர்க்கத்திற்கு எதிராக குடிமை சமூகம் நிகழ்த்திய எதிர்ப்புப் போராட்டத்தை பதிவிடுகிறார் கட்டுரையாளர். சொந்த நிலங்களில் வாழ்ந்த மனிதர்கள் வாழ்வாதாரத்திற்காகவும் அடிப்படை உரிமைக்காகவும் பிரிவினைகளைக் கடந்த அமைதியான வாழ்க்கையைத் தேடி அயல் நிலத்திற்கு குடியேறிகளாக புலம்பெயர மொழியும் அடையாளமும் கருவிகளாகின்றன என்பதையே எழுத்தாளர் ஜீவகுமார் அவர்களின் ”கடவுச்சீட்டு” நாவல் மையப்படுத்துவதை பகிர்கிறார் கட்டுரையாளர். நால்வகை வர்ணங்கள் தான் எப்போதும் தமிழனின் மனதில் ஒட்டி கிடக்கும் சிவப்புக் கோணங்கள் கடல் தாண்டி கடத்திக்கொண்டு ஓடினாலும் மலையில் தூக்கி எறிந்தாலும் இந்த பாகுபாடு அவனை விட்டு தூரம் போகாது என்பதையே நாவலின் பார்வையாக தனது வாசிப்பில் காற்புள்ளி வைத்துள்ளார் மணிமாறன்.

தமிழனுக்கு நிலம் ஒருகாலும் முதன்மைப் படுவதில்லை சாதியும் மதமும் இன வேறுபாடும் தான் செல்லும் இடமெல்லாம் அவனுக்குள் தலை தூக்கி நிற்கிறது என்று
“என்றைக்கு வேலிகளைத் திறக்க இயல்பாயிருக்க என்னும் பதட்டம் இன்றுவரையிலும் கூட தீர்ந்த பாடில்லை.” விமர்சிக்கிறார் மணிமாறன்.

எழுதுகிறவனும் வாசிக்கிறவனும் சேர்ந்து தன் வசதிக்காக உருவாக்கி வைத்திருப்பவை இலக்கிய வகைமைகள் என்கிற நூலாசிரியர் விஜிதரன் அவர்களின் வரிகள் சுட்டிக்காட்டும் படைப்பாகவே ஏதிலி நாவலை வாசகருக்கு அடையாளப்படுத்துகிறார் கட்டுரையாளர். சொந்த காணியிலிரு ந்து துரத்திவிடப்பட்டும் மீதமுள்ள வாழ்க்கைக்கான அல்லாட்டத்தில் பரதேசம் போல அமைக்கிறது அவர்களுக்கு விதிக்கப்பட்ட முகாம் வாழ்க்கை. அ ந்த துயர்சூழலிலிரு ந்து தான் அகதி என்னும் ஏதிலிகள் பெயரோடு பிறக்கின்றனர் என்கிற ஏதிலி படைப்பாளியின பார்வையிலிருந்து தன்னுடைய பார்வையை இன்னும் அகலப்படுத்துகிறார் மணிமாறன். “எந்த கேள்வியால் தன் சொந்த நிலத்தில் அவமானப்பட்டு கிடந்தாளோ அதே கேள்வி இங்கும் கேட்கப்படுகிறது நீ என்ன சாதி?” கட்டுரை பக்கத்தில் கோடிட்ட நாவலின் இ ந்த வரிகள் தான் வந்தோரை வாழ வைத்த தமிழகத்தில் அடைக்கலத்திற்காக நமது தேசம் நாடிவ ந்த அகதிகளிடம் எழும்பும் முதல் கேள்வியாய் இருக்கிறது. “வன்முறைகள் எழுதிக் கடக்க முடியா வலி நிறைந்தவை. இயல்பான மனிதர்கள் அல்ல நீங்கள் அண்டிப் பிழைக்க வந்த அகதிகள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறது.” என்பதே இங்கு எழுதப்படாத விதியாகிப் போனது. எத்திசையிலும் மனிதர்களின் ஈவு தொலை ந்துப் போனதை அடையாளம் கொள்ளச் செய்கிறது நம்மின மக்கள் மீது தொடுக்கப்படும் சொல்லம்புகள்.

ஆயிரம் ரூபாய் தான்.. அதில என்ன தெரியுது பாரு. யானை மட்டுந்தான் தெரியுதா. அது பக்கத்தில ஒரு மனிதன் நிக்கிறது தெரியலியா.”மணிமாறன் மட்டும் வியக்க வில்லை நானும் கூட ஒரு முறை ஈழத்து ரூபாய் தாளை கண்முன் காட்சிப்படுத்தித் தான் திகைத்து நின்றேன். எழுத்தும் நடையும் வெற்று வாச்சியமாக மட்டுமே இரு ந்து விடக் கூடாது என்பதில் அதிகவனமாய் மணிமாறன் இரு ந்ததை அவரின் கட்டுரை தொகுப்பிற்காகத் தேர்வு செய்த படைப்புகள் சான்றுகளாக நிற்கின்றன. மணிமாறனின் நூல் நமக்கு வெறும் நூல் அறிமுகக் கடத்தலாக மட்டுமே இருந்து விடக்கூடாது அதன் சம்பவங்களையும் நிகழ்வுகளையும் வாசகனை புனைவு கட்டமைப்பிற்குள் நிறுத்தி வைக்க வேண்டும் என்பதையே எழுத்தாளர் சர்மிளா ஜெய்யித் அவர்களால் படைக்கப்பட்ட பணிக்கர் பேத்தி நாவல் வாச்சியத்தில் விமரிசகர் தனது சொந்த அனுபவத்தையும் கருத்தையும் சேர்த்து பகர்ந்துள்ளதை கவனிக்க முடிகிறது.

”நாவலுக்கு எப்போது வரலாற்றில் உறைந்திருக்கும் துன்பங்களை கட்டுடைக்கும் பேராற்றல் உண்டு” என்கிற மணிமாறன் அவர்களின் நாவல் மீதான உள்ளாழ்ந்த வரிகள் காலாதீகாலங்களாக ஒடுக்கப்பட்ட விளிம்பு மனிதர்களின் கண்ணீரை கதைக்கும் படைப்புகள் உணர்த்துகின்றன. காலத்தைக் கலந்த வரலாறுகளை பதிவிடும் படைப்புகளையே தேர்வு செய்து வாசித்து அதன் அனுபவத்தை வாசகருக்கு பகிர்ந்த கட்டுரையாளர், இதன் ஊடாக தனது சொந்த வாச்சியத்தை நுகருபவரும் வரலாற்று குறிப்புகளை அறிந்து கொள்ளும் காலத்தின் குரலாகவே ஒவ்வொரு நூலையும் தனது தொகுப்பில் விளித்துள்ளார். ‌

இந்நாவல் இரண்டு தளங்களைத் தனக்குள் பதிவு செய்திருப்பதை வாச்சியம் பகிர்கிறது. ஒன்று இஸ்லாமிய மத மாச்சரியத்தை முன்னிறுத்தும் படைப்பாகவும் அரசியல் ஏகடியும் பேசும் புனைவாகவும் பிரிகிறது. ஈழத்தின் தமிழ் மண்ணில் எப்போதும் துவக்குகளின் சத்தமும் குண்டுகளின் காதை பிளக்கும் நாராச ஒலியும் அன்றாடங்கள் ஆகிப் போவதை தொகுப்பின் அனேக நூல்கள் பதிவு செய்ததை கட்டுரையாளர் நமக்கு அறிய படுத்துகிறார்.

”மிதந்தலையும் பகைகள்” கட்டுரை சொந்த நிலத்தில் வாழ வக்கற்று துரத்தி விடப்பட்ட திரளான அகதிகளின் குடிபெயர்தலில் எதிர்கொள்ளும் பாடுகளை புடமிடுகிறது இந்தியக் கடற்கரை முனைகள், அயல்நாடுகளில் செம்மையேறிய பழுப்பு நிலங்களில் கால் பாவ நடுங்கி நிற்கும் காட்சிகளை ”துவந்த விதி” நாவலை வாசித்து உண்டான மன கசப்புகளை அனுபவமாகி தந்துள்ளார் மணிமாறன். ஆயிரமாயிரம் போர்களுக்கு அப்பால் தான் எத்தனை எத்தனை துயர துவேசங்கள் பட்டியலிடுகின்றன என்பதை அவரது கட்டுரை அறியப்படுத்துகிறது.

“தன் ஊர் என்றும் எதுவும் இல்லை எந்த நாடும் சொந்த நாடில்லை நிற்க நிழலுமின்றி நின்றடைய கொப்புமின்றி பசியைத் துரத்தும் ஒரு வாழ்க்கையை வாழ்கிறோம் என புகலிடத்திலிருந்து ஈழத்திற்கு வரும் கடிதங்களின் சொற்கள் வலி மிகுந்தவை.” வலிகளை பரிமாறும் வரிகள்.

”தூரியாடும் உயிர்கள்” என்கிற கட்டுரை தலையகம் தேயிலைத் தோட்டத்து அரசியலைப் பேசுகிறது.. கண் ரப்பைக்குள் கட்டிப் போடப்பட்ட அவலங்கள் இன்றும் வரலாறுகளாக ஒவ்வொரு ஈழ மனிதக் கல்லறையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. மானமும் மரியாதையும் உயிருக்கு முன் தலைக்கவிழ்ந்து ஒதுங்கிப் போனதை நாவல் வழி நின்று மணிமாறன் அவர்களின் தெறிப்பு வாசகனை சிதைத்துப் போட்டது “தலைமுறை தலைமுறையாக வாழ்ந்திருந்த நிலத்தை விட்டு அகல்வதும் புதிய இடங்களில் தங்களை பொருத்திக் கொள்வதும் எத்தனை வலியானது கண்டிக்கு வருவதற்கான சம்மதத்தை பெரும் வரையிலும் நயந்து நைச்சியம் பேசிக் கொண்டிருந்த கங்காணியின் குரல் முதன்முதலாக அதிகாரத்தின் கொடூரத்தை வெளிப்படுத்துகிறது.” இது அன்று மட்டும் அல்ல என்றுமே அதிகார உடைமைதாரிகளின் அடிமைக்குடியேறிகளின் மீது நிலைகுத்தி நிற்கும் கசப்பு சாட்சியங்கள் என்பதை காத்திரமாகச் சூடு போடுகிறார் மணிமாறன்.

தேயிலைத் தோட்டத்து இடம் பெயர்தலை கதைக்கும் மற்றொரு தொடு நிகழான படைப்பாக “ குறு நதிக்கரையில்” நாவலை அவதானப்படுத்துகிறது ”அந்தரத்தில் சுழலும் சொற்கள்” கட்டுரை. மனித வாழ்வில் தற்செயல் நிகழ்வுகளுக்கு இருக்கும் பங்கை நாவல் காட்சிப்படுத்துவதாகத் தனது அனுபவத்தைப் பகிர்கிறார் நூலாசிரியர் மணிமாறன். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சுயலாபத்திற்கு தேயிலைத் தோட்டத்தில் அடிமைகளாக்கப்பட்ட ஈழத்து மலையக மக்களின் கண்ணீர் குளத்தையும் இ ந்திய பறங்கியரின் அ ந்தரங்க அரசியலை ராமுவின் கேள்விகள் துளைத்து விழுகின்றன. “வெள்ளையர் அதிகாரம் பஞ்சத்தையும் பட்டினியையும் உருவாக்கிய காலத்தில் கால்நடைகளைப் போல் இந்த மண்ணிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டோம். அந்த மண்ணில் வேர் விட்டதும் வெள்ளையர் வெளியேறியதும் அகதிகள் ஆக்கப்பட்டோம்.இலங்கையும் இந்தியாவும் போட்ட சாஸ்திரி – பண்டார நாயகா ஒப்பந்தம் மலையக மக்களை நாடற்றவர்களாகவும் குடியுரிமையற்றவர்களாகவும் ஆக்கியிருக்கிறதே,எப்போது தொலையும் இந்த பாதரவு?”

சேவை ஜாதி மக்களை மேட்டுக்குடி மனிதர்கள் இழிவுபடுத்தும் அடிமை வாழ்க்கையைத் திரையிடுகிறது விமல குழந்தை வேலு அவர்களின் ”வெள்ளாவி” நாவல் வாச்சியம் ”சொந்த மண்ணில் அகதிகள்” கட்டுரை. அடிமை மக்களின் முதுகெலும்புக்குத் தான் நிமிர நாதியில்லை என்றால் அவர்களின் உடலும் உதிரமும் கூட தொண்டு செய்து வந்ததை கட்டுரை புலப்படுத்துகிறது. சொந்த மண்ணிலும் கூட காலம் தொட்டு சேவகம் செய்ய பிறந்த அடுத்தத் தலைமுறையும் தங்களை முழுமைக்குமாக ஒப்புக் கொடுக்கத் தயாரான தமிழனின் தலைகுனிவு தொடர்கதையாகி வருவதே நமது மண்ணின் பின்னடைவு என்று கூடச் சொல்லலாம் .ஆதிக்க இனத்தின் மேம்போக்கு தனத்தை கட்டுரை ஒன்றிலும் வெட்ட வெளியாக்குகிறது கட்டுரையாளரின் ஆதங்கம். “ஆண் என்றால் உழைப்பைச் சுரண்டி கொழுக்கவும் பெண் என்றால் வகை தொகை இல்லாமல் பாலின வன்புணர்வை இயல்பைப் போலவும் நடத்துகிறார்கள்.”

இருபதாம் நூற்றாண்டிலும் தொடரும் ஈழ தேசத்தின் வர்க்க பேதத்தை ”ஊருக்கு நாலு பேர்” நாவல் கைபற்றி தனது அடுக்கு அடுக்கான வாசிப்பிற்குள் நிறுத்தி வைக்கிறார் மணிமாறன். சொந்த ஊரில் இஸ்லாமிய பெண்களின் பல செயல்பாடுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆணின் ஆதிக்க ஆணவம் தனது சாணக்கிய த ந்திரத்தால் களப்பணி செயல்பாட்டில் தீவிரமாக இயங்கும் முக்கியமான நான்கு பெண்களை பொதுவாழ்வில் இருந்து நீக்கும் அத்தனை பிரயாசைகளையும் செய்து ஆண் மேலாண்மை தனத்தை சாதித்து விடுகிறது. நாவலின் மையம் நகர்ந்து விடாமல் வாசகனுக்கு ஒரு மொத்த நாவல் பக்கங்களைத் தனது கட்டுரையில் சுருக்கித் தந்துள்ளார் மணிமாறன்.

“அகதி என்னும் சொல்லை விட ஏதிலி என்றுரைப்பதில் ஒரு உளவியல் சிகிச்சை நிகழவே செய்கிறது. அந்தச் சொல்லை உச்சரிக்கும் போது ‘நான் அகதி இல்லை’ என தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.” சிங்கள தேசத்தில் தனித்து விடப்பட்ட ஒவ்வொரு தமிழ் மகனின் குணமாக்கும் கலையாக இந்த ஒற்றை சொல் ஆற்றுப்படுத்துகிறது. நொடிந்து வீழ் ந்த மனித மனத்தின் நாள்பட்ட ரணங்களுக்கான ஆறுதலாகவும் கூட இந்த பிரயோகம் அமைந்து விடுகிறது அ நேக நேரங்களில். விளிம்பு மனிதர்களின் குரூர வாழ்வின் வேறுபட்ட படிநிலைகளை களமிறக்கும் தளமாகவும் இருந்து வருகின்றன. இலக்கிய வரலாறுகள் காலம் அழியாமல் பார்த்துக் கொள்ள படைப்பின் விதவிதமான அவதாரங்களாகப் பரிணமிக்கின்றன. தேவைக்கும் சூழலுக்கும் ஏற்றார் போல சொந்த நிலத்திலிருந்து வேரறுத்து வெளியேற்றுவதன் உளவியல் உளைச்சலையும் அன்னியர்களாகப் பிரித்து முகம்சுளிக்கும் வெறுப்பு மனோபாவத்தையும், ஒரே இனம் ஒரே மொழி ஒரே கூறு ஒரு சில பிளவு கோடு இடையில் விழுந்ததால் வேற்று மனிதர்களாகத் தள்ளி பார்க்கும் அந்நிய பார்வையையும் முகாம் வாழ்க்கை ஈழ குடிகளுக்கு இட்டுக் கொடுத்ததை “போரின் மறுபக்கம்” நாவல் ஈழவாழ்வை அப்பட்டமாகக் காட்சிப்படுத்தியதை கட்டுரையின் வாசிப்பில் உணர முடிகிறது. எழுதி ஆற்றிக் கொள்ள மட்டுமே முடியும் வேறு வழியில்லை என்கிற படைப்பாளியின் கையறு நிலை இருண்ட இலக்கியங்களின் வரலாற்றை வாசகனுக்கு முடி ந்தவரை வெளிச்சப்படுத்தும் முனைப்பிலும், நம்மின் தள்ளி நிற்கும் சனங்களை வாசித்துத் தீர்த்து விமர்சிக்கும் உன்னதமான தொழிலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் என இரண்டிற்குமான இணைப்பு பாலமாகவே இந்நூல் நமக்கு கைவர பெற்றது.

ஈழதேசத்துக்கு போர்,அதன் வலிகள், மக்கள் விழித்துக் கொண்டு உறங்குவதும், உண்ண இளைப்பாற நேரமின்றி தவிப்பதும், எத்திசையிலிருந்து குண்டு விழும் துவக்கம் பாயும் என்ற எந்தவித பிரக்ஞையுமின்றி உயிர்வாழ்தலில் மட்டுமே தமது எள்ளார்ந்த தீவிரத்தைக் காட்டி, துரத்தப்படும் ஒவ்வொரு நொடியும் தூக்கிக் கொண்டு நடக்கவும் துரத்தி வீசப்படும் நிலையில் ஏதோ ஒரு கொப்பை பத்திரமாகப் பிடித்துக் கொண்டு எழு ந்து நடப்பதும், ஒவ்வொரு தேசத்தின் வாசலில் கையேந்துவதும், முகாம் என்கின்ற அரசியல் அடைப்பிற்குள் ஒதுங்கிக் கிடப்பதும், சொந்த தேசத்தின் உருவங்களை விட முகாமின் அந்நியப் பட்ட புறக்கணிப்புகளும் நிராகரிப்பும் உதாசீனங்களும் போக்கிடமற்ற மனிதர்களை நசுக்கிப் போடுவதும், காண சகிக்கா துயரங்களும் மனித குல வரலாற்றின் கசப்பான பகுதிகள். நிம்மதிக்கான வாழ்வின் மறுகரையில் தயங்கி நிற்கும் மக்கள் நம்மின் இனத்தவர் என நினைவு படுத்தவும் அவர்களின் மன வேதனைகளை காது கொடுக்க என்னுள் ஒரு வழியைத் திறந்து விடுகிறது கட்டுரை.

மனித புலன்அவஸ்தைகளின் அடர்த்தியானப் பகுதிகளைப் பேசும் எழுத்தாளர் எஸ்.பொன்னுசாமியின் “தீ” நாவலை தனது வாச்சியத்தின் மிக முக்கியமானப் பகுதியாக காலத்தை அவதானப்படுத்தும் படைப்பாக அறிமுகப்படுத்தி குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் கட்டுரைக்காரர் தனது தொகுப்பில். பாலியல் குறித்த பிரக்ஞையும் புலன்கள் திறந்துக் கொள்வதும் மனித வாழ்வில் இணையும் ஒரு கோட்டு புள்ளிகள் என்கிற மனித உடல் சார்ந்த உளவியலை கோடிட்டு நாவலின் மைய கருத்தாழத்தை வாசகர் விளங்கிக் கொள்ள எளிமைப்படுத்தித் தந்துள்ளார் தோழர் மணிமாறன். பல தமிழ் எழுத்தாளர்கள் எழுதத் தயங்கிய பிரதிகளைக் கைப்பற்றி தனது பாணியில் ஒவ்வொன்றையும் தீர ஆய்வு செய்து படைப்பாக்கமாக நமக்கு அறிமுகப்படுத்தி வாசக மனதில் வாசிப்பு ஆர்வத்தை முகிழச் செய்துள்ளார் .ஒரு தேர்ந்த விமரிசிகரின் அறிவார்ந்த வாச்சியமும் பார்வையும் அடைத்து வைத்துள்ள வாசகரின் வாசிப்பு மனத்தை அகலமாகத் திறந்து விடுவதும் வாசிக்கும் ஆர்வக் கிளர்ச்சியை அகழ்ந்து தூண்டச் செய்வதும் ஒருவித ஆர்வ மேலாண்மையை ஒவ்வொரு நூலில் பெருக்கெடுக்கச் செய்வதும் நூல் பற்றிய பிரதி பிம்பத்தை மனதிற்குள் படிமமாக்குவதும் அதே கற்பனை படிமங்களுடன் நூலாகக் கை வரப்படுத்துவதும், கொஞ்சமும் காரம் குறையாது வாசிப்பிற்குள் நிறுத்தி வைப்பதும் என பலதரப்பட்ட வாசிப்பு மனோலயத்தை உருவாக்குவதில் அமைந்துள்ளது வாச்சியத்தின் திறப்பு. இந்த ஆழமான மிக அற்புதமான தளத்தை மணிமாறன் போருக்கு அப்பால் கட்டுரை வழியாக கைப்பற்றியுள்ளார் என்று கூறினால் மிகையாகாது. ஈழ இலக்கியத்தை நாவல்கள் மட்டும் பேசி மாளவில்லை திரண்ட தளத்தின் கதைகளும் கூட இப்படியான அகதிவாழ்வ்விலிருந்தே பிற ந்தன.

சாதியத் துயரில் புறக்கணிக்கப்பட்டகளின் வரலாறுகள் தமிழ் நிலத்தைக் காட்டிலும் ஈழ மண்ணில் அகண்ட பாதையை மனிதர்க்குள் விரிவுபடுத்தியுள்ளதை ”தீண்டத்தகாதவன்” சிறுகதைத் தொகுப்பின் வாச்சிய அனுபவம் உணர்த்துகிறது. இலக்கியங்களுக்குள் தனிப்பெரும் இடத்தைப் பிடித்த படைப்பாகவே சுகன் அவர்களின் இந்த தொகுப்பு திகழ்வதை புறக்கணிக்கப்பட்ட ஈழக் கீழ் குடிகளின் வலிகளை நூல் வாசிக்காமலேயே வாச்சியத்தின் வழியாக கடத்தியுள்ளார் மணிமாறன். ஆழ்மனதில் சீழ் பிடித்திருக்கும் சாதிய துவேசங்களை பேசும் தொகுப்பாகவே இந்த தொகுப்பு நமக்கு பரிச்சயமாகிறது.

“வந்ததே அவருக்கு அப்போதொரு சினம்! ஏன்ரா நிற்கிறாய். வந்தால் ஒண்டிலையும் தொடக்கூடாது. தொட்டால் முதுகுத்தோலை உரிச்சுப் போடுவேன்.” பிறகு மகனிடம் அனோடை நீ பேசக்கூடாது அன்ரை மேலிலே தொடவும் கூடாது.”

சிறுகதை தொகுப்பின் தலைப்பை மையப்படுத்தும் வரிகளை தேர்ந்தெடுத்து தனது பக்கங்களில் பதிவிட்டுள்ளது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்குச் சான்றாக நிற்கிறது கட்டுரையாளின் வாசிப்பு அனுபவம். மணிமாறனின் கட்டுரை ஒன்றும் வெறும் சாதாரணமாக வாசித்து பதிவு செய்ததல்ல தனது நுட்பமான வாசிப்பின் நுணுக்கப் பார்வையில் படைப்புக்கவிஞனின் நோக்கத்தை அணுக்கமாக உணர்ந்து அவற்றையெல்லாம் வாசகருக்கு வாச்சியமாகக் கடத்தி மகத்தான வாசிப்பில் மெருகு தீட்டியுள்ளார் என்று பாராட்ட கீழ்கண்ட வாசகங்கள் மிகப்பொருந்தும்.

”மதம் மாறிய பிறகு கூட சாதியம் குரூரமாக வினையாற்றிடும்.இங்கே கிறிஸ்துவிற்குள் ஐக்கியமான பிறகும் கூட தமிழ் சாதியினராகவே வாழ்கிற பலரின் இரட்டைத்தன்மையை கதை கட்டுடைக்கிறது.”

”ஒரு 100 பிரதிகள் போல விதைத்த அச்சத்தை கொடூரத்தை ஊடிழையாகக் கொண்டு கட்டித் தரப்பட்டுள்ளன. எழுதப்பட்ட எல்லா கதைத் தொகுப்புகளும் யாழ்ப்பாணத்தைமட்டுமே மையம் கொள்கின்றனவே ஏன்? யாழ்பாணத்திற்கு வெளியே தமிழ் வாழ்க்கை இல்லையா? இரு ந்தால் ஏன் அவை யாவும் படைப்பாகவில்லை..”. என்கிற மணிமாறனின் அதே கேள்விதான் எனக்குள்ளும் இந்த வாச்சியத்தின் வாசிப்பிற்கு பின்பாக பொங்கி அழுத்தின. யாழ்ப்பாணத்து போர்களிலேயே பெரும்பாலும் ஈழ இலக்கியம் ஒடுங்கியுள்ளது என்பதை இந்தக் கட்டுரை நூல் நமக்கு விளங்கச் செய்கிறது.

எந்த தேசத்து தமிழ் இலக்கியமாக இருந்தாலும் அவற்றின் அனைத்து உணர்வுத் தளங்களும் உல்லாசப்பட வேண்டும் என்பதே படைப்பின் நிறை. ஆனால் இலங்கைத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை வலிகளையும் வாதைகளையும் அரசியலையும், பெயர்தலின் அன்னியத்தையும், சொ ந்த நிலத்தின் புறகணிப்பையும் சாதிய பகிர்மானங்களையும் இன அரசியலையும், மதமாச்சரியங்களையும், பெண்ணுடல் மீதான ஆதிக்கத்தையும் மட்டுமே வளமையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள துயர் இலக்கியம் என்று அழைக்கலாம். பிற உணர்வுகள் அனைத்தும் இலக்கியத்தில் புறந்தள்ளப்பட்டுள்ளனவா என்கிற ஆதங்கக் குரல் தொகுப்பின் வாசிப்பிற்குப் பின் ஒலித்தது.இந்த வேதனைக்கு மத்தியில் தான் அன்பும் காதலும் வாழ்க்கை பாடுகளும் சிறு பகிர்வுகளும் துணிந்து அடங்கியுள்ளதையே கதைப் புலன்கள் கட்டவிழ்ப்பதை ஈழத் தமிழர்களின் போருக்கு அப்பால் உள்ள இறுகிய வாழ்வின் துளி வெளிச்சத்தை காண முடிகிறது.
‌ ஹாராங்குட்டி தொகுப்பின் வழியாக முஸ்டின் இஸ்லாமியர்களின் நடைமுறை பிறழ்வுகளை ஈழதேசத்தில் முஸ்லிம் இனத்தவருக்கு உரிமை எப்போதும் மறுத்தலிக்கப்பட்டுள்ளதை இந்த கட்டுரைத் தொகுப்பு நமக்கு காட்டிக்கொடுக்கிறது. சொந்த அனுபவமே துயர்மிகு வதைகளை ஆழமாக வெளிப்படுத்தும் என்பதற்கு முஸ்டின் அவர்களின் தொகுப்பின் சாரங்கள் கட்டுரை வழியாக கடத்தப்படுகிறது. தமிழ் பேசினாலும் இலங்கை ஈழத் தமிழர்களுடன் கூடித் திரி ந்தாலும் மதம் எப்போதும் இரு தரப்பிற்குள் சிவ ந்த கீற்றை கோடிட்டு வைக்கும். இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் போன்ற பிம்பத்தை மக்கள் மனதில் உருவாக்கி உலகத்தையே இஸ்லாமியர் புறம் எதிர்ப்புக் குரலை உயர்த்திய அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தூவிச் சென்ற கருவேல விதைகள் இந்திய மண்ணில் மட்டுமில்லாமல் இலங்கையிலும் வேரூன்றி உள்ளதை கட்டுரைத் தொகுப்பில் பேசப்பட்ட அநேக ஈழத்தின் நூல்கள் வழியாக அறிய முடிகிறது.

எழுத்தளர் ஜே,கே. அவர்களின் ”சமாதானத்தின் கதை” சிறுகதைத் தொகுப்பிலிரு ந்து சில கதைகளை முத்திரையிட்ட மணிமாறன் மிக முக்கியமான ஒரு கதையை வாசகனுக்கு கவனப்படுத்தியுள்ளார். ”உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம்”கதை பாலியல் வல்லுறவுப் படுகொலைகளை, உணர்வுத் தாக்குதல்களில் காணாப் பிணமாக்கப்பட்டவர்களை, அவமானத்திலும் அசிங்கத்திலும் புறக்கணிப்பிலும் தொலைந்துப் போனவர்களை இந்தக் கதை எழுதி சேர்த்ததை பகிர்ந்துள்ளார் நூலாசிரியர். கதையின் தலைப்பு வாசகனை மனக்கட்டமைப்பிற்குள் ஒரு கற்பனையை நிறுவி விடும்படியாக அமைந்துள்ளது. நிச்சயம் இந்தத் தலைப்பின் பின்புலமாக ஒரு குழுவின் இனத்தின் ஆற்ற முடியாத தேடித் தேற்ற இயலாத வேதனைகளை நுகர முடிகிறது.

”சமாதானத்தின் கதை” என்கிற கதை மாறுபட்ட படைப்பாக மணிமாறன் தனது வாச்சிய அனுபவத்திற்குள் புகுத்தி வாசகரை ஆர்வப்படுத்தியுள்ளார். இரு வேறு புத்தகங்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாகவே நூல் களமாடுவதை கட்டுரைத் தொகுப்பு மையப்படுத்துகிறது. இரண்டு புத்தகங்களையும் தமது தனித்த பாணியில் பிரித்து விமர்சித்துள்ளார் விமரிசிகர். இதில் தைக்கப்பட்ட இரண்டாவது புத்தகத்தில் ’விசையறு பத்து’ கதையின் வாசிப்பனுபவம் எனக்குள் இப்போதும் படி ந்துள்ளது.

”புகலிடத்தில் ஆயினும் கூட பெண் எப்போதும் இச்சையுடன் தான் பார்க்கப்படுகிறார்கள். ஆண் தடித்தனம் எப்போதும் வெறி விழிப்புடனே இருக்கிறது.”
”எதுவுமற்ற இந்த வாழ்க்கையை எப்படியாவது வாழ்வதைத் தவிர என்னதான் செய்து விட முடியும் அவர்களால்.”

ஈழ தமிழர்கள் முகாம் வாழ்வில் சகித்துக் கொள்ளும் கொடூரங்களை யதார்த்தனின் “மெடூசாவின் கண்களின் முன்” கதைத் தொகுப்பு வெவ்வேறு வரிகளில் தோலுரிக்கிறது. தொகுப்பு முகாம் வாழ்வை மையப்படுத்திய பல படைப்புகள் சுமந்திருந்தாலும் ஒவ்வொரு படைப்பாளியின் முகாம் இட்டுத் த ந்த அனுபவம் வெவ்வேறாக வித்யாசப்படுகிறது. யதார்த்தனும் தனது வேதனை அமிழ்த்திய அனுபவச் சாயையை நூல் வழியாகக் கடத்தியுள்ளதை மணிமாறன் கட்டுரை நமக்கு அறியப்படுத்துகிறது.

தொகுப்பில் குறிப்பிடும்படியாக ”மக்ரலீனின் அறுபதாயிரம் புறாக்கள்” கதை கணவன்மார்களின் சந்தேக அகோரங்கள் மனைவி என்கிற பெண் இனத்தின் தாம்பத்திய உறவின் வெளிப்பாட்டின் மீது விழுகிற போது சிவந்த கண்கள் கொண்டு அருவருப்பை ஊற்றுகிறது. வாச்சிய கலைஞன் மக்லீனா போன்ற துய்ப்பின் உணர்வில் அவமதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுவலிகள் சும ந்த படைப்புகளையும் தேடிப்பிடித்து வாசகப் பதிவாக்குவது விசேஷம்.

“பெண் உடலின்மீது புனிதம் தேடும் ஆண்மைய ஆட்கள் காலாதீ காலமாக இருந்திருக்கிறார்கள் இன்னும் இருப்பார்கள்.”
சமகாலத்தின் நிகழ்வு ஒன்றில் தனது கருத்தைப் பொருத்திக் கதையாக்கியுள்ளார் ”யதார்த்தன்” என்கிற பெண்ணுடல் சார்ந்த அரசியலை ஆண்களின் பெண்ணுடல் மீதான புனிதத்தைக் கட்டவிழ்க்கும் வரிகளை நூலிலிருந்து தேர்வு செய்து சமூக பார்வைக்கு விரியப்படுத்தியுள்ளார் மணிமாறன்.

இலக்கியத்தளத்தில் பஞ்சமர் நாவலில் உலகத்தின் தலைசிறந்த தலித் இலக்கிய நாவல் ஒன்றாகக் கருதப்படுவது போல எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் ”பாதுகை” கதைத் தொகுப்பும் மக்களின் அதிக கவனம் பெற்ற ஒன்றாகவே ”தெருவோர சித்திரங்கள்” கட்டுரை வாயிலாக வாசகவெளிக்கு அறிமுகமாகிறது. பாதுகையின் நாயகனாக வாசகனாக வாச்சியக் கலைஞர் தனது கட்டுரையில் அடையாளப்படுத்திய விதம் வாசகரை கதைத் தொகுப்பின் கரங்களில் ஒப்படைக்கிறது. ஒவ்வொரு கதையையும் தனது வாச்சியத்தில் உயர்த்திப் பிடிக்கும் மணிமாறன் இந்தத் தொகுப்பில் முத்தாய்ப்பான சில கதைகளை கொஞ்சம் அழுத்தமாகவே விமரிசிக்கிறார்.

உலகப் பிரசித்தி தலித் இலக்கியங்களில் டொமினிக் ஜீவாவின் பங்கு அளப்பரியது என்பதை தனது கட்டுரையில் இரண்டு இடங்களில் தீவிரமாகவே பதிவு செய்துள்ளதைக் காணலாம்.

“டொமினிக் ஜீவா ஒரு இலக்கிய இயக்கம் என்பதற்கான சாட்சியமாகத் தன்னைப் பற்றி எழுதப்பட்ட கதைத் தொகுப்பிற்குத் தானே முன்னுரை எழுத வாய்ப்புப் பெற்ற கதாமாந்திரர்கள் அதுவரையிலும் இருந்திருக்க மாட்டார்கள் இது ஒரு மிக முக்கியமான அரசியல் செயல்பாடு” போன்ற வரிகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
”தமிழ் சிறுகதைகளில் தலித் இலக்கியம் எனும் சொற்பதம் விவாதத்திற்கு உள்ளாகியிருக்காத நாட்களிலேயே அவற்றில் மகத்தான சாதனை நிகழ்த்தியவர் டோமினிக் ஜீவா.” இப்படியாக டேனியல் டோமினிக் ஜீவா போன்ற ஈழத்தின் இருட்டடைத்து வைக்கப்பட்டுள்ள தலித் இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளைத் தேடிப்பிடித்து வாசித்து அவற்றின் முக்கியப் புள்ளிகளை வாச்சியத்தின் வழியாக சமூகவெளியில் வெளிச்சப்படுத்தியுள்ளது ஆசிரியரின் உன்னதம். ஒரு படித்தான இயக்கமாகவே முஸ்லிம்கள் இணைந்து செயல்பட்ட காலத்தின் கதைகளைப் பதிவு செய்த ”மக்கத்து சால்வை” சிறு கதைத் தொகுப்பு இஸ்லாமிய ஈழ எழுத்தாளர் ஹனிபா அவர்களின் கவனப்பட வேண்டிய படைப்பு என்பதை கட்டுரையாளரின் வாசிப்பனுபவம் இஸ்லாமியரைப் பற்றிய அனேக விஷயங்களைத் திற ந்து விடுகிறது. சொந்த மண்ணில் அந்நியப்பட்டுக் கிடப்பது என்பது ஒருவித வெறுமையையையும் கையறு நிலையையும் தோற்றுவிக்கும். எந்த மதமானாலும் பெண் உடலின் மீதான ஆண்களின் தடித்தனம் பெண் உடலைப் பண்டமாக்கி நுகரும் குரூர செயலை ஒரு இஸ்லாமியராக தனது மதத்துக்காரர்களின் வக்கர செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது மணிமாறன் அவர்களின் வாசிப்பு மதிப்பீட்டின் வழியாக அறிய முடிகிறது. மக்கத்து சால்வை தொகுப்பின் ’சலனம்,’ பிறவிகள்’ என்ற இரு கதைகள் கோடிட்டுப் பகிர்ந்துள்ளது மணிமாறன் அவர்களின் நூல் ஒவ்வொன்றின் அணுக்கமான பார்வையை வெளிப்படுத்துகிறது. ஒரு கதையில் நின்று கொண்டு மற்றொரு கதையை கோர்த்து அணுகும் அவரது நுட்பமான பார்வை நாவலாகட்டும் சிறுகதை தொகுப்பாகட்டும் இரண்டையும் ஒருமித்த நூலாக மாற்றி விடுகின்றன. ஒவ்வொரு நூலும் ஆசிரியரின் அக மனதிலிருந்து விலக்கி தன்வயப்படுத்தி அணுகும் ஆய்வு நுட்பம் கொண்ட கருத்தாழத்தையே தனது வாச்சிய நடையாகக் கொண்டுள்ளார் மணிமாறன் என்பதை கட்டுரைத் தொகுப்பு தரிசிக்கத் தருகிறது. சலனம் கதையின் ஆமினாவை பிறவி கதையில் சுபைதாவாக உருமாற்றி இரண்டு கதைகளையும் ஒரு தொடர் அத்தியாயமாக்கி அடுத்து வாசிக்கவிருக்கும் வாசகனுக்கு ஒரு புதிய கோணத்தை அறிமுகப்படுத்தி அவனது பார்வைக்குள் நிறுத்திவிட்டு நகர்கிறார் மணிமாறன்.

வெடிச் சத்தத்திற்கும் துவக்குகளின் துளைப்பிற்கும் அஞ்சியோடி நாடு விட்டு நாடும் கண்டமிட்டு கண்டமும் தாவித் திரியும் உத்தரவாதமற்ற இருண்மையான வாழ்வில் கொஞ்ச காலம் உயிரையும் உடலையும் சக மனிதர் மீதான உணர்வையும் கடத்திச் செல்ல கடல் நாடி பயணப்படும் அகதி வாழ்க்கையைக் கொண்டு எழுத்தாளர் சக்கரவர்த்தி அவர்களால் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பாக ”யுத்தத்தின் இரண்டாம் பாகம்” கதைத் தொகுப்பின் காட்சி அனுபவத்தை எழுத்தாளர் மணிமாறன் தனது பாந்தமான நடையில் வாசகருக்குப் பரிச்சயப்படுத்தியுள்ளார். ‌ வலிகளையும் அவஸ்தைகளையும் சிந்தாமல் வரியொன்றிலும் காட்சிப்படுத்தியுள்ளார். தனது விஸ்தாரமான வாசிப்பையும் அகண்ட பார்வையையும் தொகுப்பின் கதைகள் மீது படரவிட்டிருக்கும் மணிமாறன் முதிர்கன்னி என்னும் கதையின் அனுபவத்தை கதைக் கலைஞரின் மனவோட்டத்தில் நீந்தித் தத்ரூபமாக்கித் தந்துள்ளார்.

காதல் வீரம் வேட்கை பிரியம் துரோகம் யுத்தம் என அனைத்தையும் பூனைகளில் காணொளியில் கதையாக்கிய ஹசினாவின்” பூனை அனைத்தும் உண்ணும்” சிறுகதைத் தொகுப்பிற்கான தனது பார்வையை மிக அபூர்வமான வாசிப்பு அனுபவத்தில் வாசகரை தொகுப்பிற்குள் அழைத்துச் சென்றுள்ளார் நூலாசிரியர். ஊழிக்கு சில நாட்கள் முன்பாக, யாரும் உறங்கவில்லை போன்ற தொகுப்பின் முத்தாய்ப்பான கதைகளை கோடிட்டு தனது கட்டுரையில் விரிவாகப் பேசியுள்ளார். தொகுப்பின் தலையகக் கதையான ”பூனை அனைத்தும் உண்ணும்” கதையைப் பற்றிய தனது ஆழமான விமர்சனத்தை கட்டுரை அத்தியாயத்தில் பதிவு செய்து இண்டு இடுக்குகளையெல்லாம் அதிக நுட்பமாக அலசிய விமரிசகர் தனது புரிதலை கதையின் முக்கியமான இரண்டு குறிப்புகளின் வழியாக வாசகனின் மூலையில் வெளிச்சம் பாய்ச்சியுள்ளார்.

”நீர் இயக்கத்துக்குப் போனதற்குக் காரணம் இன அரசியலா அல்லது துவக்குகளின் மீதான கவர்ச்சியா? ஏற்கனவே உமக்குத் தத்துவத் தெளிவிருந்ததா அல்லது இயக்கத்தின் பக்கம் போன பிறகு உருவானதா..” இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கத்தின் புறம் தங்களையும் தங்களின் வாழ்க்கையையும் திருத்திக் கொண்ட வரலாறுகளை ஈழ தேசத்து இலக்கியங்களைக் கொண்டு பதிவு செய்கிறார் நூலாசிரியர்.

வரலாறுகள் சுமந்த இலக்கியங்களைத் தெளிவு செய்த விமர்சனமாகவே அடுத்தடுத்த தோழரின் வாச்சியங்கள் அமைந்துள்ளன. எழுத்தாளர் ஒட்டமாவடி அறாபத் அவர்களின் ”புத்தரின் நிழல்” சிறுகதைத் தொகுப்பை அடுக்கு அடுக்கான படிகளில் அலசுகிறார் மணிமாறன். சிங்களத்தின் சிறு பான்மையினர்களான தமிழர்கள், இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஆதிக்க வல்லாண்மையை இலக்கியங்கள் அப்பட்டமாகப் பேசியுள்ளதை கட்டுரைத் தொகுப்பு வாயிலாக அறிய முடிகிறது. குறிப்பாக சிங்கள தமிழ் பேரினவாதத்தால் இறுக்கப்பட்ட இஸ்லாமிய சிறுபான்மையினரின் அடிமை வாழ்க்கை உலக வரலாறுகளின் மற்றொரு இருண்ட பக்கங்களைத் திறந்து காட்டுகிறது. ஸ்டீபனின் வாக்குமூலம், ஒரு மாலையும் சில காகங்களும், ஊர்க்காவல் படை, புத்தரின் நிழல் போன்ற கதைகளையும் நூதனமான தனது பார்வையில் அலசி தொகுத்துள்ளார் கட்டுரை ஆசிரியர்.

தன் கூட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேட பரதேசம் சென்ற மனிதர்களின், கண்களை கட்டி காட்டில் விட்டது போல் விதிக்கப்பட்ட வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட அகதி மக்களின் துயர்திசைகள் பதிவு செய்த செல்வம் அருளானந்தன் அவர்களின் ”எழுதித் தீராப் பக்கங்கள்” நூல் குறித்த வாச்சியம் ஈழத் தமிழர் வரலாற்று ஆவணம் என்றே சொல்லலாம்.

ஏடறிந்த வரலாறுகள் யாவும் வர்க்கங்களின் வரலாறு என்கிற மார்க்ஸின் வாச்சியத்தை பரிசோதித்த காலங்களே ஈழ இனத்து மக்களின் வதைக்காலங்கள் என்பதை மலையக அரசியல் அறிக்கை பேசுகிறது. நாவல் சிறுகதை என ஈழ இலக்கியங்களை ஆய்வு செய்த விமர்சகர் தேர்ந்த இலக்கிய கட்டுரைகளில் சிலவற்றைத் தொட்டு அகதி வாழ்க்கையை வெளிச்சப்படுத்தி நிறுத்தியுள்ளார். அவர்களின் வலிமிகுந்த வாழ்க்கைக்குப் பின்பு உள்ள அரசியல் சூதுகளையும் கட்டுரை பதிவு செய்கிறது. இடதுசாரிகள் தமிழ் பேசும் எல்லா நிலங்களிலும் தமிழருக்காக போராட்டக் களத்தை இலக்கியத்தின் வழியாகத் துவக்கியிருப்பதை தனது வாச்சியத்தில் வாசகருக்கு அறியப்படுத்துகிறார் மணிமாறன்.

ஆதாரமற்ற போலித் தரவுகளால் கட்டப்பட்டதாகவே ஐரோப்பியர்கள் எழுதிய வரலாறுகள் இருந்திருக்கின்றன என்கின்ற பல நூற்றாண்டு முன்பான வரலாறுகளை பதிவு செய்த படைப்பாக சதீஸ் செல்வராஜ் அவர்களின் ”குளிரும் தேசத்து கம்பளிகள்” கட்டுரை. நூற்றாண்டுகளாக நம்பப்பட்ட கட்டுக்கதைகளை உடைத்து வரலாற்றுத் தரவுகளுடன் வாசகருக்குப் பரிச்சயப்படுத்துகிறது. உலகளாவிய போலித் தரவுகளால் கட்டமைக்கப் பட்ட வரலாற்றுப் பின்புலத்தை அலசி ஆய்ந்து தெளியப்படுத்திய முக்கியமான புத்தகமாக இந்நூல் இருப்பதை தோழர் தனது வாச்சியத்தின் வழியாகக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். காலத்தால் கரைத்திட முடியாத சுவடுகளை எழுத்தாளர்களின் கரங்கள் மட்டும் செதுக்கும் என்பதை நிரூபிக்கிறது எழுத்தாளர் மு. நித்தியானந்தன் அவர்கள் எழுதிய ”கூலித்தமிழ்” ஆவண கட்டுரையின் வாச்சியம். ஆதிலட்சுமி என்னும் கப்பலில் தோட்ட கூலிகளை அழைத்துச் சென்றபோது புயல் காற்றின் ஆதிக்கத்தால் பெரும் திரளாக மக்கள் தூக்கி வீசப்பட்டு மூழ்கிப் போன கோர சம்பவம் மலையகத்தின் முதல் பெண் ஆளுமையாக அஞ்சுகம் அம்மையாரின் நூல் திரட்டுகள் பதிவிடுகின்றன. ஆ.பால் எழுதிய ”சுந்தர மீனாள் அல்லது காதலின் வெற்றி” என்னும் மலையகத்து மக்கள் பற்றி பேசும் முதல் நாவல் பிறந்த வரலாறும் ஈழ இலக்கியத்தின் மிக முக்கிய ஆவண ஆதாரம். கிறிஸ்தவர்களாக மதம் மாறிய மலையகத் தமிழர்கள் எழுதிய நாவல்கள் பற்றிய குறிப்புகள், தோட்டக் கூலியில் மலையக மக்கள் கண்டியில் பட்ட அவஸ்தைகள் பாடுகள், தங்கள் உள்ளத்தில் ஆற்ற முடியாத கொதிப்புகளைப் பதிவு செய்த தொழில் இடத்து பாடல்கள் என கூலித்தமிழ் கட்டுரைத் தொகுப்பின் அம்சங்களை நுணுக்கமாக அணுகி மணிமாறன் தனது வாச்சிய கட்டுரையில் பதிவு செய்தது காலாதீகாலங்களாக நிலைத்து நிற்கப் போகும் வரலாற்றுத் தரவுகள். எழுத்திலக்கிய ஆதாரம்.

அசலில் சாரல் நாடன் அவர்களின் மலையக மக்களின் வாழ்க்கைப் பாடுகளை வளங்களை அவர்களின் வாய்மொழிப் பாடல்களை தொழில்படுத்திய இலக்கியமாக ஈழ ஆய்வாளர் சாரல் நாடன் அவர்களின் மலையக வாய்மொழி இலக்கியம் மக்கள் மொழியில் பெரிதிலும் பெரிதாகப் பேசப்பட்ட படைப்பு. இப்படி ஒரு பிரசித்தி பெற்ற படைப்பை கைப்பற்றி வாச்சியமாகத் தொகுப்பில் பதிவிட்டது இலக்கியத்தின் மீதும் காலங்களாக மனித சமுதாயத்தை நிலைத்து வைக்கும் வரலாறுகளின் மீதும் கட்டுரையாளர் கொண்ட ஆர்வமும் அக்கறையும் கவனப்படவேண்டியவை. மணிமாறன் அவர்களின் ஒவ்வொரு கட்டுரையும் வாசகனை இலக்கியத்தின் வெவ்வேறு தளங்களுக்குக் கைமாற்றிக் கொண்டே வாழும் நிலங்களையும் கடக்கும் மனிதர்களையும் அவர்களின் மாற்றத்திற்குட்படும் முகங்களையும் நினைவை விட்டு அகலாதவாறு மொழிப் படிவமாக்கி மனதில் செதுக்கி வைக்கிறார்.

மக்கள் வெளி கவனப்படாத இருண்டு போன ஒரு இனத்தின் வரலாற்று வேரை அறி ந்துக் கொள்ள வேண்டி தேடிப்பிடித்து கண்டெடுத்த அவர் தம் படைப்புகளின் வாச்சிய கட்டுரைகளை இலக்கிய புலத்தில் ஈட்பட்டு வரும் அனைத்து வாசகரும் அவசியம் வாசித்து அறி ந்திட வேண்டும் என்பதே எழுத்துத் தளத்தின் மாறுப்பட்ட படைப்பொன்றை நூலாகக் கட்டுரை கவிஞர் அறிமுகம் செய்துள்ளார். ஆசிரியரின் இ ந்நூல் அகதி குடிகளின் வாழ்வில் ஒரு பொழுதேனும் வெளிச்சம் பாய்ச்சிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில்…..

 

         நூலின் தகவல்கள் 

நூல் : “போருக்கு அப்பால்”

ஆசிரியர் : எழுத்தாளர் மணிமாறன்

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் 

புத்தகம் பெற : 44 2433 2924 thamizhbooks.com

பக்கங்கள் : 216

விலை : 210

     அறிமுகம் எழுதியவர் 

     து.பா.பரமேஸ்வரி

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *