பொறுமை காத்தல்!
பாரம்பரியம் துறந்த
ஏதோவொன்றின்
பரந்த வெளியிலும்
கட்டுப்பாட்டில் கலவரமாக
நழுவுகிறது பயணம்!
மூழ்கியவைகளை
மறக்கவியலாது
உணர்வில் தோய்ந்து
உள்ளும் புறமும்
உறுத்தும்!
இனி புதிதாய்
தொடங்கலிலும்
சறுக்கல்களே பிரதானம்
நாட்கள் விரையும்
பலனில்லா
ஆரவாரங்களைக்கடந்தே!
தீராதவொன்றின்
நகலில் நாடகம்
அடுத்தடுத்துத்தொடரலாம்
துன்ப ஊற்றுக்களில்
நனைதலே
நகர்தலின் அடியென!
பாழானவைகளும்
பறிபோனவைகளும்
நிகழ்த்தும்
குமுறல் ஊஞ்சலாட்டம்
உள்ளுக்குள்!
சக்கரம் நிற்காது
சுழன்றே தீருமெனில்
புதுமைகளும்
களங்களில் வசப்படலாம்!
ஏதோ ஓர்
சிறு நம்பிக்கை
மொட்டொன்று
மலரக்காத்திருக்கலாம்
அதுவரை பொறுமைக்கென
ஏதுமில்லை எல்லை!
…….
S. மகேஷ்
9841708284
[email protected]
No. 59A1,
MC. Nagar 1st main road,
Near Saibaba temple,
Chitlapakkam,
Chennai-600064
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.