Pothikai Minnal Award for three books published by Bharathi Puthakalayam | பாரதி புத்தகாலயம் வெளியிட்ட மூன்று நூல்களுக்கு பொதிகை மின்னல் விருது

பாரதி புத்தகாலயம் வெளியிட்ட பெரணமல்லூர் சேகரனின் ‘வன்ம மேகம் கலையும் போது’, சரிதா ஜோவின் ‘சரஸ்வதிக்கு என்னாச்சு’ ஷர்மிளாவின் மகிழினி IPS ஆகிய மூன்று நூல்களுக்கு பொதிகை மின்னல் விருது

பொதிகை மின்னல் இலக்கிய மாத இதழ் மாநில அளவில் நூல் போட்டிகள் நடத்தியது. போட்டிகளில் வென்ற எழுத்தாளர்களுக்கு சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் விழா நடத்தி பொற்கிழியும் பரிசும் வழங்கப்பட்டன.

விழாவிற்கு டாக்டர் விஜயஸ்ரீ மகாதேவன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை இதழாசிரியர் வசீகரன் ஒருங்கிணைத்து நடத்தினார்.

பெரணமல்லூர் சேகரனின் ‘வன்ம மேகம் கலையும் போது’ என்னும் நாவல் மூன்றாவது முறையாக பொற்கிழியும் பரிசும் பெற்றது. இந்நூலுக்கு ஏற்கெனவே விதைகள் பதிப்பக விருது, களரி இலக்கிய விருது வழங்கப்பட்டன. தற்போது மூன்றாவது முறையாக பொதிகை மின்னல் இலக்கிய மாத இதழ் பொற்கிழி மற்றும் பரிசுத்தொகையை வழங்கி கௌரவித்தது.

மேலும் எழுத்தாளர் வசந்த நாயகனின் ‘பாண்டியனின் அக்னிபீடம்’ ஆதலையூர் சூரியக் குமாரின் கரிகாலன் சபதம் சரிதா ஜோவின் ‘சரஸ்வதிக்கு என்னாச்சு’ ஷர்மிளாவின் மகிழினி IPS ஆகிய நூல்களுக்கு பொற்கிழியும் பரிசுத் தொகையும் பெற்றன. பாரதி புத்தகாலயம் நாகராஜனும் கௌரவிக்கப்பட்டார். அனைத்து பரிசுகளையும் பொற்கிழிகளையும் வழங்கி முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் சிறப்புரையாற்றினார். திரளான எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *