வாழ்வில் எத்துணையோ இடங்களில் மனிதன் போதும், மனம் நிறைவாகி விட்டது என்றது ஒரு போதும் சொன்னதில்லை…
அப்படி ஒருவன் சொல்கிறான் என்றால் அவன் மனம் விரும்பி, வயிறு நிரம்பி அதற்கு மேல் உண்டால் வெடித்துவிட கூடுமோ என்ற சிறு அச்சத்திலும், பெரும் நிறைவிலும் கூறும் இடம் உணவாகத்தான் இருக்க கூடும் என்பது அனைவரும் அறிந்த விடயமே…
ஆனால் அது மட்டும் முடிவல்ல….
தம்பி தங்கைக்காக போதும் எனலாம்… அம்மாப்பா வின் அன்பை போதும் எனலாம்…
ஏதோ ஒரு கையேந்திபவனில் உனக்கு வரவிருக்கும் இட்டலியின் பெயரில் ஊர்ந்துவரும் பிச்சைகாரன் பெயர் உள்ளதென்றால் அங்கு போதும் எனலாம்…..
மற்றவனின் பணம் உன்னிடம் வந்தால் உனக்கானது இல்லை என்று போதும் எனலாம்…
அடுத்த குடம் ஊற்றினால் நிறைந்துவிடும் தொட்டியில் அளவாக ஊற்றிட போதும் எனலாம்….
அடுத்தநாள் வேண்டி அளவாக இரை தூவி விட்டு அடுத்த கோழிகளுக்கு வேண்டுமென அந்த இடத்தில் போதும் எனலாம்…..
அதீத கஸ்டத்தில் ரணத்தை மறைத்து சிரித்துகொண்டே போதுமென சொல்லிவிடலாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கடவுளிடம்…..
ஆயாவின் வெத்தலையில் வெந்துவிடாது இருக்க சுண்ணாம்பு போதும் எனலாம்….
சுற்றாத்தார் வத்தி வைப்பில் சுருக்கென கண்படுமே கண்டதெலாம் போதும் எனக்கும் காலம் உண்டு என போதும் எனலாம்…
இருபது வயதினில் வரும் கோவத்தினை போதும் எனலாம்….
கொஞ்சிடும் சேவலை கோழி முட்டையிடும் வரை போதும் எனலாம்…
எட்டாவது பிரசவத்திலும் பெண் என்றால் இதற்குமேல் வேண்டாம் என பெண்ணே போதும் எனலாம்….
போதும் என்பதற்கு உணவு மட்டும் அல்ல… உறவுகளையும் பல நேரங்களில் போதும் எனலாம்…
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.