இரா. திருநாவுக்கரசு IPS (R.Thirunavukkarasu IPS) எழுதிய போட்டித் தேர்வு - நூல் அறிமுகம் | Competitive Examination - Potti Thervu book review - https://bookday.in/

போட்டித் தேர்வு – நூல் அறிமுகம்

போட்டித் தேர்வு – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் :

நூல் : “போட்டித் தேர்வு” (பத்னைந்தும் புதிது)

நூலாசிரியர்: இரா. திருநாவுக்கரசு IPS

விலை : ரூபாய் 150/-

வெளியீடு: தமிழோடு நாம்

தொடர்பு எண்: 7598168854

“முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்”

தமிழ்நாட்டு மாணவர்கள் குடிமைப்பணி தேர்வுகளில் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட அற்புதமான நூல் இது.

சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளோடு தனது அனுபவத்தையும் இணைத்து இந்த நூலில் படைத்து இருப்பது சிறப்புக்குறியதாகும்.

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த நூல் ஊக்கமும் நம்பிக்கையும் அளிப்பதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்தால் அது வாழ்க்கை தோல்வி ஆகாது. தேர்ச்சி பெறாதவர்கள் பலர் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.

போட்டித் தேர்வில் பங்கு கொள்பவர்கள் களத்தில் நிற்பதற்கு தயங்க கூடாது கடும் உழைப்பை செலுத்த வேண்டும்.

போட்டித் தேர்வு எழுதுபவர்கள் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்க வேண்டும். அதுபோன்று போட்டியை எதிர்கொள்ளும் ஆர்வத்துடன் எப்போதும் இருக்க வேண்டும்.

இந்த நூல் வாசித்துவிட்டு செல்வதற்காக மட்டுமல்ல. உங்களைப் பக்குவப்படுத்தி, வாழ்க்கையில் அடுத்த இலக்கை அடைய தூண்டும் நூல் இது.

கற்றதை அவ்வப்போது மனதில் அசைபோடுதலும் எழுதிப் பார்க்கும் பழக்கமும் இருந்தால் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது மிக எளிது. இப்பழக்கம் கொண்டவர்களுக்கு வெற்றி தானாக தேடி வரும்.

போட்டியாளர்களுக்கு கீழ்கண்ட நான்கு தகுதிகள் பிரதானமானவை ஆகும்.
1. போட்டிக்கு எப்போதும் தன்னை தயார் நிலையில் வைத்திருப்பது.
2. தோல்வியிலும் மனம் தளராமல் இருப்பது.
3. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது.
4. வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவது
இந்த நான்கு பகுதிகளும் கொண்டவர்கள் எத்தகைய போட்டித் தேர்வுகளிலும் எளிதாக வெற்றி பெற இயலும்.

நூலாசிரியர் குறிப்பிட்டுள்ள பழக்கங்களை கையாண்டால் எவ்விதமான போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம்.

போட்டி தேர்வு எழுதுபவர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

தமிழ்நாடு அரசு, அரசு நூலகங்களில் அனைத்தும் இந்நூலை இடம்பெறச் செய்வது மிக அவசியமான ஒன்று.

நூல் அறிமுகம் எழுதியவர் : 

MJ. பிரபாகர்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *