மருத்துவர் மயிலன் எழுதிய” பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்” நாவல் வாசித்தேன்.
எந்திரதனமான நவீன மருத்துவ துறையின் நிலையை
தோலுறித்து காட்டியிருக்கிறார்.
சாயத்தாலான அவனது வேஷத்தின் மீது எக்கணத்திலும் கொட்டித் தீர்த்துவிட கருமேகங்கள் காத்திருந்தன; அவை கரைத்தொழுகி கலைந்து போக நான் காத்துக்கொண்டிருந்தேன்.
சுற்றியிருக்கும் கண்களனைத்தும் பனிப்புகைபடிந்த கண்காணிப்பு கேமிராக்கள்..
கைபேசியை அணைத்துவைப்பதை, உறவு சிக்கல்களின் குறியீடாக இன்றைய நூற்றாண்டின் போக்கு…
நுழைவுதேர்வு ஒர் சூதாட்டம், முடிவை ஏற்றுக்கொண்டு நகர்ந்துவிட வேண்டும்…
கைபேசி திரையில் அவள் பெயரைப்பார்த்ததும், அத்தனை போதையும் அப்படியே வடிந்து போனது..
சுயகட்டுப்பாடும் ஒருகட்டத்தி்ல காலவதிஆகித்தானே போகும் … போன்று யதார்தங்களை திரையில் பார்ப்பது போன்ற உணர்வு வாசிக்கும் போது.
பிறப்பு, இறப்பு இரண்டையும் ஒரே நாளில் பார்க்க வாய்ப்புக் கிடைக்கிற மனிதர்களின் மனவார்ப்பு எப்படியிருக்கும்?
எல்லா அமைப்புகளைப் போலவே இன்று மருத்துவத் துறையில் சீரழிவின் உச்சத்திலேயே இருக்கிறது. உடலையும் மனதையும் தனித்தனியே பிரித்து நிறுத்து அவை குறித்து அறிவியல் பூர்வமாக உணரத் திராணியிருப்பவர்களும்கூட, இருப்பின்மையின் எல்லையில் நிற்கிறார்கள். என நாவல் சித்தரிக்கிற உண்மை முகத்தில் அறைகிறது.
ஒரு தற்கொலையை முன்னிறுத்தி விரியும் இந்நாவல் வழியாக, சீரழிந்த அந்த அமைப்பின் அத்தனை சாம்பல் நிறப் பக்ககங்களையும் சொல்லிச் செல்கிறார் மயிலன்.
படிக்கப் போகிற பையனோ, பெண்ணோ எதற்காகத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? எங்கோ சிக்கல் இருப்பது உறுத்தவில்லையா? அந்தச் சிக்கலைத்தான் இந்நாவல் வேறுவேறு மனிதர்களின் கதைகள் வழியாக அணுகிப் பார்த்து முன்வைக்கிறது.
நண்பர்களே படித்து பாருங்கள் மீண்டும் ஒருமுறை கல்லூரியில் வாழ்ந்து பார்க்கலாம்.
எழுத்தாளர் மயிலன் ஜீ சின்னப்பன்
புத்தகம்: பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
பதிப்பகம்: உயிர்மை
துரை. நீலகண்டன்..