கவிதை: பிரசவமே ஆகாமல்- Dr ஜலீலா முஸம்மில்

கவிதை: பிரசவமே ஆகாமல்- Dr ஜலீலா முஸம்மில்

எனது நேசம்
காற்றில் கலந்த
வாசனை போலானதுஎனது நேசம்
நதியில் கரைந்த
ஈரம் போலானது

பெருமரம் தாங்கும்
நிலம் போலவே
எனது நேசம்

அலை கடலின்
ஆழமாய்
எனது நேசம்

பெருவனத்தில்
வசந்தகால
அரும்புதலானது
எனது நேசம்

தீக்குள்ளிருக்கும்
மஞ்சளின் தேடலாய்
எனது நேசம்

ஆகாயம்
பூசிக் கொள்ளும்
நீலமாய் என் நேசம்

மழையின் துளிகளில்
ஒளிந்திருக்கும் பிரளயமாய்
எனது நேசம்

நேசத்தில்
நீயும் நானும்
ஒன்றே அல்ல

ஆயினும் என்ன?
பிரசவமே ஆகாத
கர்ப்பமாய்
அது
வளர்ந்துகொண்டே
இருக்கும்
காலத்தின் கனிதலை
எதிர்பார்த்து!

-Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *