சென்னை புத்தகக்காட்சியில் 25.02.2021 வியாழன் அன்று நடைபெற்ற நிகழ்வின் செய்திக்குறிப்புநேற்று நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையை பபாசியின் பொருளாளர் திரு. ஆ. கோமதிநாயகம் – சங்கர்பதிப்பகம், அவர்கள் வழங்கினார்.
இன்றைய நிகழ்வில் திரு. இல.சொ.சத்தியமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்.

சிறப்புரையாக, ‘உன்னில் இருந்து தொடங்கு’ என்ற தலைப்பில் முனைவர் பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களும், ‘மனிதம் காத்த இராமானுஜர்’ என்ற தலைப்பில் திரு. மை.பா.நாராயணன் அவர்களும், ‘ஏடேறா இலக்கியங்கள்’ என்ற தலைப்பில் பேராசிரியர் திரு. இரா. காமராசு அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வின் நன்றியுரையை பபாசியின் செயற்குழு உறுப்பினர் திரு. முத்துக்கருப்பன் – ஸ்ரீ செல்வநிலையம் அவர்கள் வழங்கினார்.