தனியார் போக்குவரத்து விமானங்கள் அதிகமான கார்பன் உமிழ்வை வெளியிடுகிறது….! (Private Jet transport planes emit more carbon emissions)

தனியார் போக்குவரத்து விமானங்கள் அதிகமான கார்பன் உமிழ்வை வெளியிடுகிறது….!

தனியார் போக்குவரத்து விமானங்கள்
அதிகமான கார்பன் உமிழ்வை வெளியிடுகிறது….!

– மோனிகா மொண்டல்
தமிழில்:மோசஸ் பிரபு

விமானப் போக்குவரத்துத் துறையினை மட்டும் ஒரு தனி நாடாக கருதினால், அது பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும். கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு உமிழ்வுகள் வளிமண்டலத்தில் படியும் நீராவியின் தடங்கள் மற்றும் வாயுக்கள் ஏற்படுத்தும் விளைவுகளால் விமானப் பயணம் சுற்றுச்சூழலை மிகவும் மாசுப்படுத்துகிறது. அதிலும் விமான பயணத்தில் அதிகளவு, தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் தனியார் பயனிகளின் விமானங்கள் அதிக கார்பன்களை வெளியிடுகிறது. போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஐரோப்பிய கூட்டமைப்பின் 2021 அறிக்கையின்படி, தனியார் ஜெட் விமானங்கள் பயனிகளின் விமானங்களை விட ஒரு பயணிக்கு ஐந்து முதல் 14 மடங்கு வரை அதிக கார்பன்களை வெளியிடுவதாக கூறப்படுகிறது. இது ரயில்களை விட 50 மடங்கு அதிகமாக உள்ளன.

“நேச்சர்” (NATURE-இயற்கை) என்ற பெயரில் வெளிவரும் மாத இதழ் நடத்திய சமீபத்திய ஆய்வில், 2019 மற்றும் 2023 க்கு இடையில் கார்பன் உமிழ்வுகள் 46% அதிகரித்துள்ளது, குறிப்பாக தனியார் விமான போக்குவரத்தால் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது எனவும். டிசம்பர் 2023 ஆம் ஆண்டு 25,993 ஆக இருந்த விமானங்களின் எண்ணிக்கை பிப்ரவரி 2024 இல் 26,454 ஆக அதிகரித்துள்ளது, மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வறிக்கையின்படி, “தனியார் விமானப் போக்குவரத்து குறைந்தபட்சம் ஒரு விமானத்திற்கு சுமார் 3.6 டன் கார்பன் டை ஆக்சைடை (CO2) வெளியிடுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்கள்,

மார்ச் 2024 நிலவரப்படி இந்தியாவில் 112 தனியார் விமானங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு (0.01) என்ற அளவில் இந்தியாவில் விமானங்கள் உள்ளன ஆனால். மால்டா (46.51), அமெரிக்கா (5.45), சுவிட்சர்லாந்து (3.76), இங்கிலாந்து (0.78), பிரேசில் (0.43), பிரான்ஸ் (0.36) மற்றும் ரஷ்யா (0.1) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது மிக குறைவான விமானங்கள் தான் இந்தியாவிடம் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சீனா 0.02 என்ற அளவில் உள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள தனியார் விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டால் உலகின் முதல் 20 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மிக அதிக எண்ணிக்கையில் தனியார் விமானங்கள் இந்தியாவில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

“இது ஆச்சரியமல்ல, ஏனென்றால் இந்தியா, இன்னும் வளரும் நாடு உலகில் மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான பில்லியனர்களைக் கொண்டுள்ளது, மேலும் வேகமாக வளர்ந்து வரும் மில்லியனர்களை கொண்ட நாடாகவும் திகழ்கிறது.” என பெங்களூருவில் உள்ள அறிவியல், தொழில்நுட்பக் கொள்கை ஆய்வு மையத்தின் (சி.எஸ்.டி.இ.பி) ஆராய்ச்சி விஞ்ஞானி ரம்யா நடராஜன் கூறுகிறார். விமான போக்குவரத்தில் கார்பனை குறைத்தலுக்கான புதிய முயற்சிகள் நடைபெறுகிறது, ஆனாலும் நிலையான விமான எரிபொருட்களுக்கு (SAFs), ஹைட்ரஜனை பயன்படுத்துவது மற்றும் மின்மயமாக்கல் போன்ற மாற்றுத் தீர்வுகள் பெரிய அளவில் செயல்படுத்த முடியாத சூழ்நிலையும் உள்ளதாக தெரிவித்தார்.

அர்த்தமற்ற தனியார் விமானப் பயணங்கள்:

ஸ்வீடன், ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் ஏடிஎஸ்-பி தனியார் அமைப்பின் பரிமாற்ற தளத்திலிருந்து விமான போக்குவரத்து தரவை பகுப்பாய்வு செய்தனர். சமீபத்தில் சர்வதேச அளவில் நடைபெற்ற ஐந்து முக்கிய நிகழ்வுகளில் கவனம் செலுத்தினர்.

  1. சுவிட்சர்லாந்தில் நடந்த உலகப் பொருளாதார மாநாடு,
  2. அமெரிக்காவில் நடந்த சூப்பர் பவுல்,
  3. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற COP28 காலநிலை உச்சி மாநாடு,
  4. பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழா, மற்றும்
  5. கத்தாரில் 2022 FIFA உலகக் கோப்பை.

மேற்கூறிய ஐந்து சர்வதேச நிகழ்வுகள் அனைத்தையும் ஆராய்ந்ததில் இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் போக்குவரத்திற்காக தனியார் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த விமானங்களில் 47% என்ற அளவில் சுமார் 500 கி.மீ.க்கும் குறைவான தொலைவுக்குள் தான் பயன்படுத்தப்ப்ட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் அதிகப்பட்சம் 200 கி.மீ.க்கும் குறைவான தூரங்களுக்கு உட்பட்டவைதான், அதிலும் சுமார் 5% விமானங்கள் 50 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவுகள் கொண்டவைதான். இவை சாலை வழியாகவும் அல்லது ரயில் மூலமாகவும் எளிதில் கடக்கக்கூடிய தொலைவுகள் தான் ஆனால் குறைந்த தொலைவில் உள்ள இது போன்ற இடங்களுக்கு. தனியார் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது இது அர்த்தமற்ற விரயமான சுற்றுச்சூழலுக்கு கெடுதலான பயனம் என கருதப்படுகிறது.

T&E on X: "CO2 emissions from private jets in Europe have increased by 31%, rising faster than commercial aviation emissions. 🛫 Find out more: https://t.co/Yl33IIxISy #PrivateJets #Aviation #carbonemissions #zerocarbon https://t.co/QoDOxCvxwh" / X

ஸ்பெயினில் உள்ள இபிசா என்ற இடத்திற்கும் மற்றும் பிரான்சில் உள்ள நைஸ் என்ற இடத்திற்கும் பல சுற்றுலாப்பயனிகள், வசதிப்படைத்தவர்கள் ஓய்வெடுக்கவும் பொழுதுபோக்கவும் தனியார் விமானங்களை பயன்படுத்தி சென்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது இதன் பயன்பாடு ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் உச்சத்தை எட்டியுள்ளது, கோடைக்காலத்தில், குறிப்பாக வார இறுதி நாட்களில் இது அதிகரிக்கிறது.

தனியார் விமானப் போக்குவரத்தின் எண்ணிக்கை சுமார் 69% அமெரிக்காவில்தான் குவிந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மேலும் 8,500 ஜெட் விமானங்கள் தனியாருக்கு வழங்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர், இந்தியாவில் எத்தனை அதிகரிக்கும் என்பது தெரியவில்லை. “இந்தியா ஒரு பணக்கார, வளர்ந்த நாடாக மாறும் போது ஒவ்வொரு ஆண்டும் எத்தனை கூடுதல் தனியார் விமானங்கள் சேர்க்கப்படலாம்? அமெரிக்க வழியில் இந்தியா செல்ல முடியுமா? இதுபோன்ற அதிகரிப்பால் சுற்றுப்புறச் சூழ்நிலையில் ஒட்டுமொத்தமாக அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? என்று ஆய்வாளர் நடராஜன் கேள்வி எழுப்புகிறார்.

விமானப் பயணமும் இந்தியாவின் கார்பன் உமிழ்வும்

கடந்த பத்தாண்டுகளில் இந்தியர்களின் விமானப்பயனங்களும், கார்பன் உமிழ்வுகளும் அதிகரித்துள்ளது, இந்திய அரசாங்கம் கிராமப்புறத்திற்கும் நகரத்திற்கும் உள்ள இணைப்பை மேம்படுத்த ‘உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்’ (UDAN) என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக விமான நிலைய திறனை ஐந்து மடங்கிற்கும் மேலாக அதிகரிக்க அடுத்த தலைமுறை விமான நிலையங்களுக்கான (NABH) கொள்கைகளையும் அறிமுகப்படுத்தியது. இந்திய விமானங்களை இயக்குபவர்கள் தொடர்ந்து குறைந்த கார்பன் எரிபொருளை பரிசோதித்து வருகின்றனர். உதாரணமாக, 2018 ஆம் ஆண்டில், ஸ்பைஸ்ஜெட் விமானத்தை உத்தரகண்டில் இருந்து புது டெல்லிக்கு ஜட்ரோபா தாவரத்தின் விதைகளிலிருந்த எண்ணெயை எடுத்து விமான எரிபொருளில் 25% என்ற அளவில் கலந்து விமானத்தை இயக்கினார்கள்.

2023 ஆம் ஆண்டில், இந்தியன் ஆயுள் கார்ப்ரேஷன் நிறுவனம் வழங்கிய ஏர் ஏசியா விமானத்தை புனேவிலிருந்து புதுடெல்லிக்கு உள்நாட்டு மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட உயிரி எரிப்பொருட்களை விமான எரிபொருளுடன் (ATF AVIATION TURBINE FUEL) கலக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த முயற்சிகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் SAF (SUSTIANABLE AVIATION FUEL) குறைவான இருப்பின் காரணமாகவும் மற்றும் அதன் செயல்திறன் வீரியம் குறைந்து இருப்பதாலும் அது பரவலாக வணிகமயமாகப்படவில்லை.

ஏப்ரல் 2024 மதிப்பீட்டின்படி, உமிழ்வை குறைந்தபட்சம் 27% என்ற அளவில் குறைப்பதற்கு வழக்கமாக ஜெட் விமானத்தில் பயன்படுத்தும் எரிபொருளின் செலவை விட “குறைந்தது 120%” அதிகமாக செலவிட்டால் மட்டுமே இதற்கான மாற்று எரிபொருட்களை பயன்படுத்த முடியும்.

மாற்று எரிபொருள் வல்லுநர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் ஆகியோர் ஹைட்ரஜன் மற்றும் மின்மயமாக்கலை மண்ணெண்ணெய்க்கு சாத்தியமான மாற்றாக பயன்படுத்த விவாதித்துள்ளனர், மண்ணெண்னெய் உயர் ஆற்றல் அடர்த்தியை ஈடுகட்ட விமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒரே அளவிலான நிறையில் மூன்று மடங்கு அதிக ஆற்றலைக் கொண்டுள்ள ஹைட்ரஜனையும் அதற்கு மாற்றாக பயன்படுத்தலாம் ஆனால் அதைக் கையாள்வது கடினமானது. விமானப் போக்குவரத்தில் ஹைட்ரஜன் அடிப்படையிலான எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டுமெனில் பொறியாளர்கள் விமானத்தின் வடிவங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு பகுதிகள், போக்குவரத்து தளங்கள் போன்றவற்றை ஒட்டுமொத்தமாக மறுவடிவமைக்க வேண்டும். அதேபோல், மின்மயமாக்கல்(ELECTRIFICATION) என்பது தவறான தீர்வாக உள்ளது. காரணம் அதற்காக பயன்படுத்தப்படும் பேட்டரியின் எடை, விமானத்தின் நிலைத்தன்மை மற்றும் அதை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் இருப்பு போன்ற பிரச்சினைகள் காரணமாக மின்மயமாக்கல் முறை கடினம் என தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

“இந்தியாவில், ஆல்கஹாலிருந்து-ஜெட் (ATJ-ALCOHOL TO JET) என்ற தொழில்நுட்ப முறையில் மாற்று எரிபொருட்களுக்கான சாத்தியம் உள்ளது. ஏனெனில் நம்மிடம் ஏற்கனவே ஒரு நல்ல எத்தனால் உற்பத்தி மற்றும் விநியோக தொடர்புகள் உள்ளன”. இதை பயன்படுத்துவதன் மூலமாக மட்டுமே மாற்று எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும். இதன் உற்பத்தி செயல்முறையில் சில தவறான நடவடிக்கைக்காகவும் நிலத்தை பாயன்படுத்த வாய்ப்புள்ளது , நிலத்தடி நீரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவே இது கவனமாக திட்டமிடப்பட வேண்டும். கரும்பு அல்லது மக்காச்சோளத்தின் சாகுபடியை அதிகரிக்க மாற்று எரிபொருளின் தேவையின் அடிப்படையில் இதனை ஊக்குவிக்கக்கூடாது. உபரி சர்க்கரையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இருப்பினும், சி.எஸ்.டி.இ.பி.யில்(CSTEP) அவரும் அவரது நண்பர்களும் இணைந்து செய்த பணிகள் இத்திட்டம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது என்று நடராஜன் கூறினார்.

உபரி சர்க்கரை மட்டுமே எத்தனாலாக மாற்றப்பட்டு, முழுமையாக விமான எரிபொருள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டால், பெட்ரோலை கலக்காமல் 2050 ஆண்டுக்குள் விமான எரிபொருள் தேவையில் சுமார் 15-20% என்ற அளவில் நாம் குறைக்க முடியும்.

இதுபோன்ற ஆக்கப்பூர்வமான மாற்று எரிபொருட்களை நோக்கி செல்வதோடு தனியார் போக்குவரத்து விமானங்களின் எண்ணிக்கையையும் குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

18-12-24 அன்று ஆங்கில இந்துவில் வெளியான கட்டுரை பத்திரிகையாளர் மோனிகா மொண்டல் அவர்களால் எழுதப்பட்டது.
தமிழில்:மோசஸ் பிரபு

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *