பிரியா ஜெயகாந்த் ஹைக்கூ கவிதைகள்பசியாறிய குழந்தை
உறங்கியது நிரந்தரமாக
கள்ளிப்பாலின் உபயம் 

போராட்டம் முடிந்தது
ஏமாற்றத்துடன்
இறப்பில்முழங்கியது சங்கு
மௌனமாக
அரசியல்வாதியின் காதுகளில்

ஆறியது நாவினால் சுட்டவடு
ஆறாதது
உன் மௌனம்உயரப் பறந்தாலும்
கடிவாளத்தின் பிடியில்
காத்தாடியும் பெண்ணினமோ

விடிந்ததும்
இருண்டன
பசி மயக்கத்தில் கண்கள்இரவிலும் பிரகாசித்தது
நிலவொளியால்
கூறையில்லா வீடு

மறைந்தன
மனக்கவலைகள்
பொய்யான புன்னகைக்குள்

கண்ணீரும்
இனித்திடும்
துடைக்கும் கரங்களிருப்பின்

பிரியா ஜெயகாந்த்
சென்னை
மின்னஞ்சல்: [email protected]