பிரியங்கா மோகனின் "மேட் இன் கொரியா" திரை விமர்சனம் | Priyanka Mohan's Made in Korea Tamil Movie Review - www.bookday.in

திரை விமர்சனம்: மேட் இன் கொரியா (Made in Korea) – இரா.இரமணன்

மேட் இன் கொரியா (Made in Korea)  – 2026 மார்ச் மாதம் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படம். ரா.கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், பார்க் ஹை- ஜின், ஸி ஹன் பேக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஒரு சிறிய உணவு விடுதி நடத்துபவரின் மகள் செண்பகம். சிறிய வயதிலிருந்தே அவளுக்கு கொரியா செல்ல வேண்டும் என்று ஆசை. கொரியாவில் அரச பரம்பரையை சேர்ந்த பெண் ஒருவர் வெகு காலத்திற்கு முன் தென்னித்தியாவிலிருந்து சென்றவர் என்கிற கதையையும் கேள்விப்படுகிறாள். படிப்பு முடிந்து அவளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார் தந்தை. அவளோ பார் ஒன்றில் வேலை செய்யும் மணி என்பவனை காதலிக்கிறாள். அவனை நம்பி அவனுடன் சென்னைக்கு வருகிறாள். அவன் அவளை ஏமாற்றி, அவளுடைய தந்தை கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு அவளை  தனியாக கொரியாவிற்கு அனுப்பிவிடுகிறான்.

கொரியாவில் ஒரு இளைஞனுடைய உதவியால் முதியவள் ஒருவரை பேணும் வேலை கிடைக்கிறது. அந்த முதியவளின்  ஆசைப்படி சிறிய உணவு விடுதி ஒன்றை தொடங்கி நடத்துகிறார்கள். இசைக்குழு ஒன்றும் உருவாகிறது. தந்தையிடம் கொடுப்பதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை அந்த இசைக்குழுவிற்கே கொடுத்து விடுகிறாள். அவளுடைய ஊரில் நிலச்சரிவு ஏற்பட்டதை அறிந்து இந்தியா திரும்புகிறாள். தாய் தந்தையுடன் சேருகிறாள். அவளுடைய பழைய காதலன் மணி தான் மாறிவிட்டதாகவும் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி அவளிடம் கேட்கிறாள். அவள் அவனை நிராகரித்து தந்தையின் சம்மதத்துடன் கொரிய இளைஞனை ஏற்றுக்கொள்கிறாள்.

Made in Korea OTT Release: Date, Time, and Where to Watch the Much-Awaited  Series Online | Herzindagi

வெளிநாட்டில் நல்ல வேலை என்று ஆசைகாட்டி பணத்தைப் பறிக்கும் முகவர்களின் சதியை திரைப்படம் காட்டுகிறது. அதை பாராட்ட வேண்டும். ஆனால் வெளிநாட்டில் மொழிதெரியாத ஒரு பெண்ணின் கஷ்டங்களை படம் காட்டவில்லை. மாறாக அவளுக்கு பலரின் உதவி எளிதாக கிடைப்பதாகவும் எல்லாமே சுமுகமாக போவதாக காட்டுவது பெரிய பலவீனம். ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படத்தில் இப்படிப்பட்ட விஷயங்கள் எதிர்பார்க்கக்கூடியதே.

அதே சமயம் இந்த படத்தில் பல நல்ல கருத்துக்களையும் பார்க்க முடிகிறது. வயதான காலத்திலும் தன்  விருப்பப்படி வாழ வேண்டும் என்று நினைக்கும் கொரிய மூதாட்டி; அவருக்கும் செண்பகத்திற்கும் ஏற்படும் நெருக்கம்; தன் விருப்பத்தை மீறி காதலனுடன் சென்றுவிட்ட மகளை வெறுக்காமல் வருந்தும் தந்தை; இறுதியில் அவளுடைய விருப்பத்தின்படி போகுமாறு கூறும் அவரது முதிர்ச்சி. மனம் திருந்திவிட்டதாக கூறும் பழைய காதலனை நிராகரிக்கும்போது பெண்களை பலவீனமானவர்களாக அல்லாமல் முடிவு எடுக்கக்கூடியவர்களாக காட்டுவது.

வெளிநாட்டில் பரிதவிக்கும் செண்பகம், அதிகமாக மது அருந்தி சாலையில் ஒரு இளைஞனை அடிக்கும் காட்சி எதார்த்தமாக இல்லாமல் மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது. தன்னை கைவிட்ட காதலன் மணியின்மீதுள்ள கோபத்தை அந்த இளைஞன் மீது காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் தந்தையிடம் கொடுப்பதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை இசைக்குழுவிடம் கொடுப்பதும் சற்று நெருடலாக உள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குனர் கொரியாவை மய்யமாக வைத்து அங்குள்ள நடிகர்களைக் கொண்டு படம் செய்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.

📚 எழுதியவர்:

இரா.இரமணன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *