பிரியா(ன்) : சிறுகதை
எப்போதும் போல ஞாயிற்றுக்கிழமை லேட்டா எழுந்திரிச்சு வந்தாள் மீனு சூரியன் பல்லைக்காட்டின பின்னும் தூக்கம் வருதுனா நான் எங்க போக நீ பொட்டபுள்ள தான…
ஏன்மா… காலங்காத்தால ஆரம்பிக்காத.
சரியில்லை டி…நீ ரொம்ப சரியில்லை.
ஆமா ஆமா நான் பேசுனா உனக்கு இப்படித்தான் தெரியும் டீ போட்டு தா அதெல்லாம் டீ போட்டு ரொம்ப நேரம் ஆச்சு. சுட வைச்சு குடி. உங்கப்பா கறி எடுக்கப்போனார்.இன்னும் யார்கிட்ட கதை அளந்துட்டுஇருக்காரோ…எல்லாம் இந்த வீட்ல நான் தான் செய்ய வேண்டிருக்கு.
ஹாஸ்டல்ல துவைக்காத டிரெஸ்லாம் எடுத்துப் போடு துவைக்கனும் பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்குதா பாரு ஒரு ட்ரெஸ் கூட பொண்ணுங்க போடுறது இல்ல. எல்லாம் குழாய் பேண்ட் சட்டையும் தான். ஏன் மா பொம்பள புள்ளனா இப்படித்தான் இருக்கனும்னு எதும் இருக்கா என்ன. நீ பேசுவ ஏன் பேசமாட்ட மீனு குட்டிமா…எழுந்திரிச்சுட்டியா…அப்பா உனக்கு ஆட்டுக்கறி குடல் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்.
சாப்பிட வேண்டியது மட்டும் தான் உன் வேலை ஆமா பா ஆமா நீ இப்படி சொல்லு உன் பொண்டாட்டி உனக்கு முன்னாடி எல்லா வேலையையும் அடுக்கி சொல்லியாச்சு.
அவ கெடக்கா கழுதை நீ ரெஸ்ட் எடு நல்லா..காலேஜ்ல என்ன சாப்பாடு போடுறாங்களோ எம்புள்ள இப்படி இளைச்சு போச்சு.நீங்க ஒருத்தர் போதும் அவளைக்கெடுக்க வாய் பேசாத போய் கறியை குழம்பு வைச்சி குடலை வறட்டி கொண்டு வா சீக்கிரம் அப்பா பாரு அம்மா மொறைச்சுட்டே போறா சிரிப்பும் கிண்டலுமாய் கழிந்த ஞாயிறு.ராகவ் மனசுல ஏதோ உணர்வைத் தட்டி எழுப்பியது.
விழியிரண்டும் நீர் வழிய ராஜி ராஜி எழுந்திரி அழுது…அழுது என்னத்த கண்டோம்…
சாப்பிட்டு ரெண்டு நாள் மேல் ஆச்சு.தெருமுனையில உள்ள ருஜம் ஹோட்டல்ல இட்லி வாங்கிட்டு வாறேன் சாப்பிடுவோம்.
என்னங்க… இப்படி சாதாரணமா சொல்றீங்க.
என்ன பண்ண சொல்ற எல்லா இடமும் தேடியாச்சு.போலீஸ்ல புகார் கொடுத்தாச்சு இதுக்கு மேல…ம்ம்… நாட்கள் ஓடிக்கிட்டே இருக்கு இப்படி சாப்பிடாம இருந்தா எனக்கு பயமா இருக்கு நீயும் என்னை விட்டு போயிடாத ஒரு பொண்ணு பார்த்து பார்த்து வளர்த்தோம்.இப்படி ஆயிடுச்சு அழாத சீக்கிரமே பதில் கிடைக்கும்..
ராகவ்…ராகவ்…
வா மணி ஆபிஸ் வந்து ஒரு வாரம் மேல் ஆகுது போன் பண்ணாலும் எடுக்கல அதான்.
உனக்கு தான் என் நிலைமை முடியுமேஇதே தெருவுல தான் நீயும் இருக்க புதுசா கேட்குற…
எல்லாம் எனக்கு புரியுது டா.ஆனா வேலை.. வாழ்க்கை…பசி… இதெல்லாம் இருக்கேடா. நானும் எதும் கேட்க கூடாதுனு இருந்தேன்.ஆனா நீ இப்படியே இருந்தா எல்லாருக்கும் கஷ்டம் வா வெளியில நடந்துட்டு வரலாம்.
வெளியில முகத்தைக்காட்டவே பயமா இருக்குடா.ஊர் உலகத்துல பண்ணாததயா உன் பொண்ணு பண்ணீட்டா மனச குழப்பாத மீனு ஒருநாள் கண்டிப்பாஉன்னைத்தேடி வருவா…டீ குடிச்சிட்டு உன் மனைவி ராஜிக்கு ஏதாவது சாப்பிட வாங்கி வருவோம்.
ஏன் ராகவ்… ஹாஸ்டல்ல…காலேஜ்ல நடக்குறதெல்லாம் உன் பொண்ணு உங்கிட்ட சொல்வாளா. என்னடா இப்படி கேட்குற ஒரு நல்ல ப்ரண்ட் ஆ தான் இருந்தேன்.
சாரி… தெரியும் டா… இருந்தாலும்…
சரி…இந்தா…டீ
ஏன் மணி இந்த பேப்பர் ல வர்ற மாதிரி எதும் என் பெண்ணுக்கு ஆயிடுமோ.
அப்படியெல்லாம் எதும் ஆகாது.நீயா எதும் யோசிக்காத…
போலீஸ்ல சொல்லிருக்குல.அவங்க பார்த்துப்பாங்க…
அவ ப்ரண்ட் ஜோதி பார்த்து கேட்டா எதும் தெரியுமா…?
எல்லாம் கேட்டாச்சு யாருக்கும் தெரியலை.
அது எல்லார் முன்னாடியும் கேட்டிருப்பீங்க தனியா கேட்டா வேற எதும் தெரிய வாய்ப்பிருக்கே. சினிமபாணில யோசிக்கிறீயா மணி அப்படினு சொல்ல முடியலை ஆனா மீனு கடைசியா வீட்டுக்கு வந்தப்போ..ஏதோ குழப்பம் தனிமைனு அவள அவளாகவே ஒதுக்கி வைச்சுக்கிட்டா சரியாக்கூட பேசலை. இதெல்லாம் என்ன ரொம்ப சிந்திக்க வைக்குது. என்ன சொல்ற…எப்போதும் போலத்தான் இருந்தா…
அது உனக்கு அப்படி தெரிஞ்சிருக்கும்.
அங்க பாருடா…ஜோதி..
ஜோதி…ஜோதி…
என்னம்மா… அப்பா பார்த்தும் பார்க்காதது போல இருக்க.
மீனு எதும் போன் பண்ணலாமா
எதும் விவரம் தெரிஞ்சதா
தலையை மட்டும் வேகமாக இல்லையென்று ஆட்டினாள். ஏன் மா… வாயைத் திறந்து பேச மாட்டிக்குற. எதும் பிரச்சினை இருந்ததாமா யாரும் வம்பு பண்ணாங்களா கண்ணீரே விடையாய் மீண்டும் தலையசைத்தாள்.
மணி அவள் கையைப்பிடித்து…
இங்க பாரு ஜோதி நீயும் பொண்ணு தான் எங்களுக்கு சொல்லுமா
அங்கிள்…அங்கிள்…
அழாத ஜோதி…உனக்கு தெரிஞ்சதை சொல்லு ஸ்கூல் படிக்கும் போது ஒருநாள் மீனு பையன் கேரக்டர்ல டான்ஸ் பண்ணா அதனால எதும் பிரச்சனை வந்ததா.
அன்னிக்குல இருந்து தான் அவ பையன் போல தன்னை கற்பனை பண்ணிக்கிட்டா அவ பண்றதெல்லாம் புதுசா இருந்தாலும் ஏதோ ஒரு மாதிரிதான் இருந்தது எங்களுக்கு.
எந்த பிரச்சனை வந்தாலும் அது.இதுனு எல்லாத்துக்கும் முன்னாடி போய் நின்னு சமாளிச்சு வைச்சா.ஷாப்பிங் போனா கூட பையன் டிரெஸ் மட்டும் எடுத்துக்கிட்டா.
தன்னுடைய முடியைக்கூட பையனைப் போல வெட்டிக்கிட்டா. எல்லாரும் ஸ்டைல்னு யோசிச்சோம்…அப்போ அவளுக்கு ஹார்மோன் ப்ராப்ளம் இருந்தது…
மீனு பிரியா பெயரைக் கூட மீனு பிரியன் னு மாத்திக்கிட்டா…
இப்படி பல விஷயங்கள் அங்க நடந்தது.ஆனா உங்கட்ட எதும் சொல்ல நினைப்பு வரல.
என்னம்மா….இப்படி சொல்ற…ஆனா இங்க வந்தப்ப இதெல்லாம் எதும் தெரியலையே…
இங்க வந்தா ரெண்டு நாள் மேல அவ இருந்திருக்காளா கண்டிப்பா இருக்க மாட்டா விஷயத்தைக் கேட்ட ராகவ் மயங்கி கீழே விழ.
ராகவ்…ராகவ் தண்ணீர் முகத்தில் தெளித்து எழுப்பினர்.என் உலகமே…அவதான்.அவளுக்கு ஒண்ணுணா நான் தாங்க மாட்டேன்…
பொறுமையா இருடா முழுசா தெரிஞ்சுப்போம்.அப்போ தான் என்ன பண்ணனு முடிவு பண்ண முடியும்.
அங்கிள்…அவ தான் பையனா வாழனும்னு ஆசைப்படுறா அத உங்ககிட்ட சொல்ல தயங்குனா…அதனால கூட சொல்லாம வெளியில போயிருக்கலாம். வெளியிலனா புரியலை நீ சொல்றது.
அது வந்து…அது…இந்த மாதிரி பாலின மாற்றத்தில் விருப்பமுள்ளவங்க வாழ்ற இடத்துக்கு போயிருக்கலாம்.
மணி…இவ என்ன சொல்றா…என்னால இந்த வார்த்தையைக் கேட்க முடியலை.
எந்த இடம்னு உனக்குத்தெரியுமா…தெரியலை அங்கிள்.ஆனா எனக்கு சந்தேகம் இல்லை. இந்த சமூகம் இதை ஏத்துக்காதுனு அடிக்கடி சொல்லீட்டே இருப்பா…அதான் சொல்றேன். இப்படி நடந்துருக்கலாம்னு சரிமா…நீ போயிட்டு வா.எதும் தெரிஞ்சா சொல்லு.கண்டிப்பா சொல்றேன் அங்கிள்.
ராகவ்…வா வீட்டுக்குப் போகலாம்.
இல்ல மணி…என் பொண்ணு இல்லாம அங்க நான் வரல.
அவ எங்க இருக்கானு தேடப்போறேன்.
பொறுமையா இரு. இத மட்டும் வைச்சு முடிவு பண்ணாத வீட்ல ராஜிக்கு இதெல்லாம் தெரியாது. தீர விசாரிச்சுட்டு சொல்வோம்.
என்னங்க…இவ்வளோ…நேரம்…வர…நான் பயந்துட்டேன்.
ஏன் அழுறீங்க…என்னாச்சு…
எதும் இல்லம்மா…நீ உள்ள போ…
இந்தா இட்டிலி சாப்பிடு என்றான்.
இல்ல அண்ணா… சொல்லுங்க. கடையில யாரும் எதும் சொன்னாங்களா…
அப்படிலாம் இல்லப்பா…நீ உள்ள போ…
ராகவ் நீசாப்பிட்டு ராஜியை பார்த்துக்கோ…நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்.
வெளியில் சென்று போன் எடுத்து பேசினான்.
உங்களுக்கு போட்டோ அனுப்பியிருக்கேன்.பாருங்க…இருந்தா எனக்கு கால் பண்ணி சொல்லுங்க.
சற்று நேரத்தில் ரிங்டோன் உயிரைத்துளைத்தது.
ஹலோ…சார் நீங்க கேட்ட பொண்ணு இங்க தான் இருக்காங்க.
நீங்க வந்து கூப்பிட வாறீங்களா. ஆமா சார்.வாரேன் இதோ எங்கையும் விட்றாதீங்க.
மணி அங்கிள்…
மீனு மா…இங்க என்ன பண்ற…
அங்கிள்…என் நிலைமையை புரிஞ்சுக்கோங்க…
புரிஞ்சதுனால தான் தேடி வந்துருக்கேன் மா.
இந்த சமூகம் என்னைஏத்துக்காது அங்கிள்.என் உலகம் இது தான்.இங்க இருக்க எனக்கு பிடிச்சிருக்கு. உனக்கு அப்பா அம்மா இருக்காங்க. அவங்க உலகம் நீ தான் அது புரியுமா உனக்கு.சரி ஒரே ஒருமுறை சொல்லு…உன் நிலைமையை எடுத்து சொல்லு.அப்புறம் அவங்க உன்னை வேண்டாம் சொன்னா நானே இங்க வந்து விடுறேன்.
ராகவ்…ராகவ்…யார் வந்துருக்காங்க பாரு.
வற்றிய கண்ணில் வதங்கிய பார்வையில் வெளியே வந்தான்.
எம்மாடி…எம்மாடி…என் தங்கமே…
எங்க போன…
என் உலகம் நீ டா…உன் பிரச்சினை எனக்கும் பிரச்சினை தான்.புரிஞ்சுக்கோ…
கண்ணீரே விடையாய் மௌனமானாள். இனி இப்படி நடக்காதமா குளிச்சிட்டு வா…சாப்பிட…
ராஜி…பொண்ணுக்கு பிடிச்சதை சமைச்சு வை.
இதோ பண்றேன்…என் தங்கம் எத்தனை நாள் கழிச்சு வந்துருக்கு. குளிச்சிட்டு வாரதுக்குள்ள சமைச்சிடுறேன்.சற்று நேரத்தில் குளித்து விட்டு வந்தாள். புது டிரெஸ் வாங்கிருக்கேன்.போட்டுக்கோடா.
ம்ம்…என்றே தலையாட்டினாள்.
பேண்ட்…சட்டை நல்லாருக்காப்பா…
ரொம்ப நல்லாருக்குடா உனக்காகவே எடுத்தது போல் இருக்கு…
என்னை…பிடிச்சிருக்கா ப்பா…
உன்னை எப்போதும் பிடிக்கும் …பிரியன்…
சக்தி ராணி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.