தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்) நூலிலிருந்து…
மதுரையில் புத்தக வெளியீடு, நானும் இந்திராவும் முன்பே போய்விட்டோம். ஹென்றி டிபைன் மற்றும் பல பேராசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள். புத்தகத்தின் ஆசிரியர் கா. அ. மணிக்குமார் தன்னுடைய குடும்பத்தோடு வந்திருந்தார். அப்போது அரங்கில் பெரிய கூட்டம் இல்லை. நான் அதற்கு முன் பார்த்தது இல்லை. அவராக வந்து நான்தான் தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்) புத்தகத்தின் ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அவருடைய எளிமையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்) புத்தகத்தை பலரும் அறிமுகப்படுத்தும் போது இதை நாம் வாங்கி படிக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த நிகழ்வுக்குப் பின் 2024 டிசம்பர்13ம் தேதி இதனை வாசிக்க எடுத்துக் கொண்டேன். முடிக்க ஒரு மாத காலம் ஆனது. இது என்ன நாவலா அப்படியோ ரசித்துக் கொண்டே போக. இது நம் சமூகத்தின் வரலாறு அப்படியெல்லாம் வேகமாக என்னால் செல்ல முடியவில்லை. ஒவ்வொரு கட்டுரைகளையும் படித்து முடித்தப் பின் அந்த இடங்களை நாம் ஏன் சென்று பார்க கூடாது. எவ்வளவு ரத்தம் தொய்ந்த, வரலாற்றை அந்த இடங்கள் சுமந்து கொண்டு நிற்கின்றன. என அசைப்போடுவதற்கு எனக்கு கொஞ்சம் காலம் தேவைப்பட்டது. அன்பு நண்பன் அமலராஜன், என் மனைவி இந்திராவிடம் இது குறித்து உரையாடிய பிறகு அடுத்த கட்டுரைக்கு செல்வேன். இப்படி செல்வதானல் காலம் கொஞ்சம் அதிகமாக எடுத்துக் கொண்டது. என் மனைவி இந்திரா வரலாற்று துறையிலும், தத்துவத்துறையிலும் படித்திருந்ததால், எனக்கு நிறைய கூடுதல் தகவல்களையும் அதுகுறித்த விரிந்த பார்வையையும் கொடுத்தார்.
தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்) புத்தகத்தில் ஆசிரியர் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஆனால் அவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகளை காலவரிசைப்படி வரலாற்றுத்துறைக்கே உரிய தன்மையோடு தொகுக்கப்பட்டு வரிசைப்படுத்தபட்டிருக்கிறது. இந்த கட்டுரைகளில் பல நம்முயை அறியாமைகளையும், சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளையும் உடைத்தெரியும் உண்மைகளை தெரிவிக்கின்றன.
புத்தர், மகாவீர்க்கு அடுத்து எனக்கு இந்த புத்தகம் கோசலார் என்ற ஒரு சீர்திருத்தவாதியை அறிமுகப்படுத்தியது. அவர் ஒரு வீதி நாடக கலைஞர் என்பதும், மாட்டக்கொட்டத்தில் பிறந்ததால் கோசலார் என்று பெயர் வந்ததாகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் தோற்றுவித்த ஆசிவப் பிரிவு கடவுள் மறுப்பு கொள்கை கொண்டதால் மக்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை புண்படுத்தியதால் அது வழக்கில் இல்லாமல் போய்விட்டதை பதிவு செய்துள்ளார். இது ஆறாம் நூற்றாண்டு என்றால் கடவுள் நம்பிக்க என்பது புத்தர்காலம் தொடங்கி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

வெள்ளையர் ஆட்சி காலத்தில் எவ்வாறு செயற்கையாக பஞ்சங்கள் உருவாக்பட்டன என்பதையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நாம் இந்த நூலில் விரிவாக பார்க்க முடியும். 1815ம் ஆண்டு தஞ்சையிலிருந்து இலங்கைக்கு காப்பித்தோடத்திற்கு ஆட்கள் தேவை என்று கேட்ட போது தஞ்சை மக்கள் யாரும் செல்லுவதற்கு தயாராக இல்லை. அதே சமயத்தில் 20, 30 ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சத்தினால் 1843ம் ஆண்டு இலங்கைக்கு ஒப்பந்த கூலியாக சென்றவர்கள் 14,46,407 பேர். ஒரு வர்த்தக நிறுவனம் நினைத்தால் சாத்திமில்லைதையும் சாத்தியப்படுத்தும் என்பதற்கு ஓர் உதாரணம் இது. இப்போதும் இது பொருந்தும்.
”பேராசிரியர் பிபன் சந்திரா எழுதிய இந்தியாவில் பொருளாதார எழுச்சியும், வளர்ச்சியும் என்ற நூலை படிக்க தூண்டிகிறது.
இன்னும் ஒரு அதிசய தக்க வரலாற்றை இங்கே பதிவு செய்துள்ளார். அதாவது யூசப்கான் படையெடுத்து பல்வேறு பகுதிகளை பிடித்துக்கொண்டு வந்த போது 1760 திருநெல்வேலியில் உள்ள வசுதேவ நல்லூர் கோட்டையை பிடிப்பதற்கு பெரும் வெள்ளையர் படையுடன் முற்றுகையிட்டான். ஆனால் அங்கே கோட்டையைப் பாதுகாப்பதற்கான ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டதால் 20 நாட்கள் காத்திருந்து திரும்பியதாக பதிவு செய்கிறார். ஒரு மக்கள் சக்தி இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.
பாளையர்களின் வெள்ளையர் எதிர்பில் இன்னும் மக்களிடம் நிலவும் நம்பிக்கை ஊமத்துரை காணாமல் போய்விட்டார். அவரை இதுவரை வெள்ளையர்கள் பிடிக்கவே இல்லை. இது போன்ற செய்திகள் பரவலாக பேசப்படுகிறது. நானும் கூட இந்த புத்தகத்தைப் படிக்கும் வரை அப்படிதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில் அவர் மீண்டும் படையை திரட்டி வெள்ளையனை எதிர்த்து பாஞ்சாலங்குறிச்சியில் போரிட்டுள்ளதும், பின்னர் அதில் தோல்வியுற்று தூக்கிலிடப்பட்டதும் இந்த புத்தகத்தின் வழியாக தெரிந்து கொள்ள முடிந்தது.
இந்திய விடுதலைக்காக வியாபாரிகள் ஏன் உதவ வேண்டும் என்று பிர்லா குறிப்பிடுவதை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயம்.
”நம் நாட்டில் தற்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில் அரசை எங்களுடைய கருத்தக்கு மாற்றுவத என்பது முடியாத காரியம் …. ஒரே தீர்வு, இந்திய வணிகர்கள் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபடுபவர்களின் கரங்களை வலுப்படுத்துவதில் தான் உள்ளது.”
இப்போது தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்) புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ள ச. தமிழ்ச்செல்வனின் பேட்டி மிக முக்கியமாக கருதுகிறேன். வரலாற்றை பேசும் பேசு பொருளாதார வரலாற்றை நாம் பேச வேண்டிய அவசியத்தை இங்கே உணர முடிகிறது. அது குறித்த பல்வேறு கேள்விகளைத்தான் ச. தமிழ்ச்செல்வன் முன்வைக்கிறார். மேலும் பொருளாதார வரலாற்றின் அவசியத்தையும் அதன் ஆய்வுகள் எவ்வளவு முக்கியம் என்பதையும் நாம் அறிந்து கொள்ள இந்த நூல் பெரிதும் உதவுகிறது.
ஒரு கட்டுரைய பொத்தாம் பொதுவாக எழுதுவதற்கும், ஆய்வுவோடு எழுதுவதற்கும் எவ்வளவு வேகுறுபாடு இருக்கிறது என்பதை உணரத்தும் நூல் இது. ஆய்வு மாணவர்கள், வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பு மாணவர்கள், ஊர்சுற்றிகள், குறிப்பாக அரசியல் பேசுகிறவர்கள், எழுதுகிறவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய, வீட்டில் இருக்க வேண்டிய நூல்.
நூலின் தகவல்கள் :
நூல்: தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்)
ஆசிரியர்: கா. அ. மணிக்குமார்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.280
பக்கங்கள்: 304
தொடர்புக்கு: 044 24332424
நூல் அறிமுகம் எழுதியவர் :
மொ. பாண்டியராஜன்
மதுரை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

