“உடல் உறுப்புக்கள்” – நூல் அறிமுகம்
“நமது உடலமைப்பும் உடல் இயக்கமும்”
மாட்சிமை நிறைந்த மானிட உடல் அமைப்பிலே மறைந்து கிடக்கும் ரகசியங்களும், அதிசயங்களும் ஆய்வுக்கு அடங்காதவையாகும்.
ஒரு மணல் கேணியை தோண்ட தோண்ட சுரக்கும் சுவை நீர் போல மானிட உடல் அமைப்பினை ஆய்வு செய்யும் பொழுதெல்லாம் அதன் அற்புதமான அமைப்பானது அரிய பெரிய உண்மைகளையும் அளப்பரிய தத்துவங்களையும் புதிது புதிதாக நமக்கு காட்டி வருகின்றது.
அப்படிப்பட்ட அருமையான உடல் அமைப்பு அந்த உடலிலே உறைந்து கிடக்கும் உள்ளுறுப்புகளின் அமைப்பு, அவைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு, ஒருங்கிணைத்து ஒன்றிணைத்தும் உறுதுணையாகும் இருந்து செயல்படுகின்ற தன்மைகள், அவற்றின் இயல்புகள், இதமான இடங்கள் பற்றி மிக அருமையாகவும் எளிமையாகவும் விளக்கிக் கூறுகிறது இந்த நூல்.
எல்லா உயிர்களையும் இறைவனே படைத்தான் என்ற கொள்கையானது காலம் காலமாக நம் மத்தியில் மாறாத கொள்கையாக இருந்து வந்தது.
ஆனால் அறிவியலாளர் டார்வின் ஆராய்ச்சியின் விளைவாக, புதிய கொள்கையை உலகிற்கு அறிவித்தார்.
உயிர்கள் எல்லாம் ஒவ்வொன்றின் உதவியால் தாமே உருவாகிக்கொண்டன.
அந்த அற்புதமான பரிணாம வளர்ச்சியால் தான் பல்வேறுபட்ட பல்லாயிரக்கணக்கான புதிய உடல் அமைப்பு கொண்ட உயிர்கள் உருக் கொண்டன என்பதுதான் டார்வின் புதிய கொள்கை ஆகும்.
எண்ணற்ற கோடி உயிர்கள் இந்த உலகில் இருக்கின்றன. அவை நீந்துவன, ஊர்வன, நடப்பன, பரப்பன என்று பிரித்து வகைப்படுத்தி விஞ்ஞானிகள் நமக்கு ஆராய்ந்து வழங்கி உள்ளார்கள்.
இப்படிப்பட்ட எல்லா உயிரினங்களும் ஒரு செல் உயிர அமைப்பிலிருந்து தான் படிப்படியாக வளர்ந்தேன் என்றும் அதற்கான கால அளவு பல கோடி கணக்கான ஆண்டுகள் ஆயிருக்கலாம். என்பதாகும் டார்வின் தன் ஆராய்ச்சி மூலம் விளக்கம் அளித்தார் என்பதே உண்மை.
உயிருள்ளவைகளுக்கு வளர்ச்சி உண்டு. பிறப்பது, வளர்வது, வாழ்வது, இறந்து போவது போன்ற தன்மைகளை பெற்றிருக்கின்றன.
இப்படிப்பட்ட நமது உடல் அமைப்பை
சுவை உணரும் உறுப்பு, நுரையீரல் எனும் என் சுவாசமே, ரத்தக்குழாய்கள், உயிர் வாழ முக்கியமானது சிறுநீரகம், தசைகள், நம்பிக்கை அளிக்கும் நமது கை, நாம் இடம் விட்டு இடம் நகர காரணமான கால்கள், மனித கம்ப்யூட்டரான மூளை, நமது அற்புதக் கண்ணாடி கண், அயராது உழைக்கும் உழைப்பாளி இதயம், ஒளியை உணரச் செய்யும் நம் காது, நமது உடலின் உடை தோல், முத்து பல்லழகி பல், இதுபோன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் எவ்வாறு பாதுகாப்பது என்ற வழிமுறைகளையும் விரிவாக ஒவ்வொரு தலைப்பிலும் மிக அருமையாக, குறிப்பாக குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.
பேராசிரியர் எஸ். மோகனா விலங்கியல் துறை பேராசிரியர் ஆவார். பள்ளியில், கல்லூரியில் மாணவர்களுக்கு எப்படி எளிமையாக பாடம் நடத்துவாரோ அப்படிப்பட்ட வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
பெற்றோர்களும் குழந்தைகளும் கல்லூரியில் பயில்வர்களும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூலாகும்.
நூலின் விவரங்கள்:
நூல் : “உடல் உறுப்புக்கள்”
நூலாசிரியர் : பேராசிரியர் சோ.மோகனா
நூல் வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன், சென்னை – 600018
பக்கங்கள் : 216
நூலின் விலை : ரூ. 230/-
நூல் வாங்க : 7904509437
எழுதியவர் :
✍️ MJ. பிரபாகர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


மிகச்சிறப்பானதொரு புத்ததகத்தை வாசிக்கத்தூண்டிடும் நூல் அறிமுகம் தோழருக்கு வாழ்த்துக்கள்.