“அழகு சுந்தரி” – நூல் அறிமுகம்
வாய்மொழிக் கதைகள் – வாழ்ந்துகொண்டே இருக்கும்
முத்தழகு கவியரசன்
ஒருவரிடமிருந்து சொல்லப்படும் கதைகள் பலரின் காதுகளுக்கு சென்று திரும்பவும் முதல் சொன்ன நபரிடமே அக்கதை வரும்போது பல மாற்றங்களைக் கொண்டிருக்கும். மருவி செல்லுதல் இங்கே கவனத்தில் கொள்ள வைக்கிறது. மனிதனுடைய வாழ்க்கையில் தொடக்கக்கால கதைகளெல்லாம் ஏதோ ஒரு காரணத்தைத் தொடர்பு கொண்டே கடத்தப் பட்டிருக்கிறது. அது பிறருக்கான எச்சரிக்கையாகவும் இருக்கலாம். அந்த எச்சரிக்கையில் பல உட்கூறுகளும் பொதிந்து கிடக்கலாம். வாழ்வின் அறத்தைப் பற்றியோ அல்லது பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வழிபாட்டு களன்களின் தொடர்ச்சியையோ கொண்டிருக்கலாம். சில நேரங்களில் கதையாகவும் அல்லாமல் தெம்மாங்கு பாட்டின் வடிவங்களோடும் கதை சொல்லும் முறையில் அமையலாம். இவையெல்லாம் வட்டார மொழிகளுக்கும், அவ்வட்டார வழக்கில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையும் வெவ்வேறான அர்த்தப் பதிவுகளில் பதிவாகி இருப்பதைக் காணமுடிகிறது.
அந்த வகையில் கன்னியாகுமரியிலிருக்கும் பேராசிரியர் சா.லிட்டில் பிளவர் அவர்களின் அழகு சந்தரி புத்தகம் வாய்மொழிக் கதைகளாக வாசிக்கக் கிடைக்கிறது. 40 கதைகள் இடம் பெற்றிருக்கிறது. எந்தக் கதைகளும் வாசிப்பவரை சோர்வடைய வைக்கவில்லை. பல்சுவை கலந்த கதைகளைக் காணலாம். கன்னியாகுமரி வட்டார எழுத்துகள் புதுமையான உணர்வைக் கொடுக்கிறது. அக்கறைக் கொண்ட, நகைச்சுவை கொண்ட, விழிப்புணர்வு கொண்ட இப்படி பல வகைகளில் விரவி எழுதப்பட்டிருக்கிறது. போட்டி, பொறாமை, கசப்பான அனுபவங்களைச் சொல்லும் போது, சுருக்கமான குறுங்கதைகளாகவே வெளிப்படுவது சுவாரஸ்யத்தை இயல்பாகவே தந்து விடுகிறது. குடும்ப உறவுக்குள் இருக்கக்கூடிய விருப்பு வெறுப்புகளையும், ஏமாளித் தனங்களும் கூட நம்மை அறியாமலேயே சிரிக்க வைத்து விடுகிறது.
இருந்த போதிலும் இங்கே சிலவற்றைக் குறிப்பிடலாம். மனைவியின் தன் விருப்பத்தின் தீராத எண்ணங்கள் கொண்டவள், எதுவும் தெரியாமல் இடைஞ்சலாக வரும் கணவனை பிறரிடம் எப்படி மாட்டிவிடுகிறாள். எதுவும் தெரியாமல் அவர்களிடத்தில் தப்பிப் பிழைத்தோம் என்று சாதூர்யமாக தன்னிலையை வெளிப்படுத்தி, தகுந்த பரிசினைப் பெற்று வரும் கதை ஒருபக்கமிருந்தாலும், முட்டாள் தனமான பிள்ளைகளின் சேட்டைகளும், பெற்றோர்களின் பொறுமையை சோதித்துப் பார்க்கும் எண்ணங்களும், முடிவில் நீ இங்க இருக்குறதுக்குப் பதிலா ஆத்தோடையை போவென்று மூங்கிலோடு கட்டி அனுப்பியது தான் சிறப்பான சம்பவமாக தோன்றுகிறது.
மனதை இலகுவாக்கும் கதைகள் இருப்பது போல சிந்திக்கும் படியான சூழலையும் மனதிற்குள் உண்டாக்க மறுப்பதில்லை. உறவுகளுக்குள் இருக்கக் கூடிய பிணைப்பு மிகவும் முக்கியமானது. அற்றுப்போக்கும் போது மிகுந்த வேதனைகளை வாழ்வின் அடுத்த நகர்தல்கூட சங்கடத்தோடே கடக்க வேண்டியதாக இருக்கும். தாயை பறிகொடுத்த இரண்டு குழந்தைகளை சரியான உணவுக் கொடுக்காமல் அவர்களைத் தவிக்க விடும் இரண்டாம் தாரத்தின் செயல்பாடுகள் கவலை அளிக்கிறது. அவர்களுக்கான ஒரு வாய்ப்பு வரும்போது அதையும் பறித்துக் கொள்ளும் மனநிலை கோபத்தைத் தூண்டி விடுகிறது.
இந்தத் தூண்டலைச் சற்றுத் தணித்திருக்கும் கதையும் வாசிக்கும் போது ஆறுதலடைகிறது மனம். இதைப் போன்று தாயை இழந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்ள இரண்டாவதாக வந்தவள் சரியாக அக்குழந்தையைக் கவனிக்க விருப்பம் இல்லாதவளாக இருக்கிறாள். வளர்ந்து பெரியவளானாள் திருமணச் செலவு என்று தேவையில்லாத வேலையென அம்மியில் போட்டு கொல்ல முடிவு செய்கிறாள். இதை அறிந்தவர்கள் அவளுக்குத் தகுந்த பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் என்ன, அப்பாடத்தைக் கேட்பதற்கு அவளின் தங்கைகளும், அம்மாவும் மட்டும்தான் இருப்பார்கள் என்று நினைக்கும் போது ஆறுதலாக படுகிறது.
இந்த வாய்மொழிக் கதைகளில் எதிரும் புதிருமான மனநிலைகளின் மனிதர்களை மிகவும் எளிதாக அடையாளம் கண்டுவிடலாம். பட்டப் பெயர்களும், அதற்கான காரணங்களும், அதன் வழியாக கதை சொல்லுதலும், பிறருக்கு உதவி செய்யும் போது நன்கு தெரிந்து செய்ய வேண்டும் என்ற அக்கறையும் கதையினில் காணமுடிகிறது. இவையெல்லாம் ஒருபக்கம் என்றாலும், இறுதியாக பேய் – பிசாசுகளின் கதைகளும் மனிதர்களின் வாழ்விலிருந்து நீங்கிவிடுவதில்லை. அமானுஷ்யங்கள் காலங்காலமாக வந்துகொண்டே இருக்கிறது. மாந்திரீகம் – தாந்திரீகம் என வேதங்களில் இடம்பெற்றாலும், கிராமப்புறங்களில் திகைப்புக்கான நிகழ்வுகள் வலம்வந்துகொண்டே இருக்கின்றன. மாயப்பெண், எச்சிப்பிசாசு, ஈனாசெத்த இப்படியான கதைகளும் இருக்கின்றன. சின்ன வயதில் இரவு நேர்த்தில் சாப்பிட்டு விட்டு சரியாக வாய் கழுவவில்லை என்றால், எச்சிப்பேய் பரண்டிவிடும் என்று அம்மாக்கள் சொல்வார்கள். மறுநாள் வாயின் அருகினில் யாரோ பரண்டி வைத்தாற் போன்று காயங்கள் இருக்கும். இம்மாதிரியான நிகழ்வுகளும் நடக்கிறது. இதொருபக்கம் இருந்தாலும், புதிருக்கான சம்பவங்களும் இன்னும் பரவலான இடங்களிலும், வரலாற்றிலும் ஒளிந்திருப்பதைத் தரவுகளும் தர மறுப்பதில்லை.
இப்புத்தகத்தில் பதிவாகியிருக்கும் கதைகள் வெறும் கதைகளல்ல. ஆவணப் படுத்துதல். இதுபோன்ற பல கதைகள் பதிவாக வேண்டிய காலகட்ட சூழலில் இருக்கிறோம் என்பது உண்மை. இன்றைய தலைமுறைகளுக்கு இப்படியான வட்டார வழக்கு கதைகள் அவர்களின் எழுத்தின் வளர்ச்சிக்கும் பக்ககலமாக இருக்கும். இருபது வருடங்கள் கழித்து வருவது என்பது பெரிய தாமதம். இன்னும் பல விசயங்களை இப்படி எதார்த்தமாக உள்ளடக்கி கொண்டு வந்தால் வாய்மொழிக் கதைகள் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருக்கும். சிறப்பாக வந்திருக்கிறது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | அழகு சுந்தரி |
| ஆசிரியர்: | பேராசிரியர் சா.லிட்டில் பிளவர் |
| வெளியீடு: |
வேரல் பதிப்பகம்
|
| விலை: | ₹.110 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 முத்தழகு கவியரசன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
