PT Sir (2024) – திரைப்பட விமர்சனம்
எவ்வளவுதான் இந்த சமுதாயம் முன்னேற்றம் அடைந்தாலும் இன்றும் பெண்களுக்கென பாதுகாப்பு என்ற ஒன்று முழுமையாக கிடைக்கப்படாத ஒன்றாக தான் இருக்கிறது.
சமுதாயத்தில் பெண் குழந்தை என்று பிறந்து விட்டாலே அவர்களை பாதுகாத்து பத்திரப்படுத்தி தான் வைக்கப் பார்க்கிறோம். ஒரு குழந்தையை பெற்றோர் மட்டும் வளர்ப்பதில்லை இந்த சமுதாயமும் சேர்ந்து தான் வளர்க்கிறது. அப்போது பெண்ணாக பிறந்த பாதிக்கப்படுவதும் சமுதாயத்தில் குற்றவாளியாக நிறுத்தப்படுவதும் பெண்ணே ஆவாள்.
ஒரு ஆண் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முற்படுகிறான் என்றால் தவறு அந்த ஆணின் மீது கிடையாதாம். இந்தப் பெண்ணின் மீதுதான் என்று கூறுகிறார்கள் காரணம் அவளின் ’உடை’. தவறு செய்த அந்த ஆணை கண்டிப்பதற்கும் காவல்துறை மூலம் தண்டிப்பதற்கும் அவள் வீட்டிலே முற்படவில்லை. ஏனென்றால் வெளியே தெரிந்தால் பெண்ணைத்தான் காரணம் கூறுவார்கள்.
நடக்காத விஷயங்கள் கூட நடந்ததாய் சித்தரிக்கப்படும். இந்த படத்தில் நந்தினி என்ற ஒரு பெண் கல்லூரிக்கு Cultural சென்று வரும்போது மூன்று ஆண்கள் தவறுதலாக நடக்க பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து வந்து வீட்டில் நடந்ததைப் பற்றி சொல்லி ‘நான் அவர்களிடமிருந்து தப்பித்து வந்து விட்டேன்.
அவர்கள் இன்னும் அங்கே தான் இருக்கிறார்கள் அவர்களை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும்’ என்று வீட்டில் கூறுவாள். ஆனால் வீட்டில் உள்ளவர்களோ அந்தப் பெண்ணின் சார்பாக எதுவும் அவளுக்கு சொல்லவில்லை எதுவும் வேண்டாம் காவல்துறையிடமும் சொல்ல வேண்டாம் என்று மறுத்துவிடுவார்கள்.

சொன்னால் நம் மீது தான் குற்றம் சொல்வார்கள் சுற்றத்தார் அக்கம் பக்கத்தில் உள்ளோர் என்ன சொல்வார்களோ என்ற பயம். பெற்றோர்கள் சமுதாயத்தில் மீது கொண்ட பயத்தை அந்த பெண்ணின் மீதும் திணிக்கிறார்கள்.
தைரியமாக நடந்ததை கூறவும் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்கவும் தயக்கமின்றி முடிவுகள் எடுக்கும் ஒரு சில பெண்களின் நிலையும் மாறிவிடுகிறது. ஒரு பெண் உடுத்திய ஆடை தான் தவறு என்றால் ஒரு பெண் உடுத்திய ஆடையால் தான் அந்தப் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிறாள் என்றால் பச்சிளம் குழந்தைகள் சில அரக்கர்களால் ஏன் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிறார்கள்.…
தவறை செய்யாத பெண்கள் சில சமயங்களில் இந்த சமுதாயத்திற்கு பயந்து மறைத்து வைப்பதன் மூலம் இந்த பெண்ணின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதன் மூலமாக தற்கொலை முயற்சிக்கு தூண்டப்படுகிறார்கள்.
தவறு செய்தவர்களை தண்டிப்பதற்கும் நியாயம் கேட்பதற்கும் இறந்த பெண்களே வந்து சாட்சி சொல்ல வேண்டிய நிலைதான் வருகிறது….
PT Sir (2024) – திரைப்படத்தில் வரும் நந்தினியின் கதாப்பாத்திரம் ஒரு எடுத்துக்காட்டான பாத்திரம்.
நன்றி…!
எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

