கவிதை : புகைரதம் (Pugairatham) - Tamil Poetry (Tamil Kavithai) - Bookday Kavithaikal - https://bookday.in/

கவிதை : புகைரதம்

கவிதை : புகைரதம்

திடீரென உயிர் பெற்றது நடைமேடை ஒன்று
அடுத்து சில வினாடிகளில் வர இருக்கும்
அதிவிரைவு புகை ரதத்தை வரவேற்க
உரத்த குரல் கொடுத்து நுழைந்தது புகைரதம்
பெருமூச்சுடன் பயணிகளை இறக்கியது.
சுமந்திருந்த பாவங்களை இறக்கிய நிம்மதியில்.
தொடர்ந்து பயணிக்க மீண்டும் முண்டியடிக்கும் மக்கள்.
பிரசவ வேகத்தில் வியாபாரிகளின் வியாபாரம்.
ஆயிரம் முகபாவங்களுடன் வழியனுப்ப வந்தவர்கள்
அனைத்தையும் தாண்டி அறிவிப்பு ஒலித்தது
அடுத்த சில நொடிகளில் புறப்படும் வண்டியென.
சிகப்பு மறைந்து பச்சை விளக்கு கட்டளையிட
மீண்டும் பெருமூச்சுடன் நகர்ந்தது இரயில்
வாழ்க்கைப் பாடத்தை மக்களுக்கு உணர்த்தி.
ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையின் பகுதியென.
அடுத்து சில வினாடிகளில் வர இருக்கும்
அதிவிரைவு புகை ரதத்தை வரவேற்க
உரத்த குரல் குடுத்து நுழைந்தது புகைரதம்
பெருமூச்சுடன் பயணிகளை இறக்கியது.
சுமந்திருந்த பாவங்களை இறக்கிய நிம்மதியில்.
தொடர்ந்து பயணிக்க மீண்டும் முண்டியடிக்கும் மக்கள்.
பிரசவ வேகத்தில் வியாபாரிகளின் வியாபாரம்.
ஆயிரம் முகபாவங்களுடன் வழியனுப்ப வந்தவர்கள்
அனைத்தையும் தாண்டி அறிவிப்பு ஒலித்தது
அடுத்த சில நொடிகளில் புறப்படும் வண்டியென.
சிகப்பு மறைந்து பச்சை விளக்கு கட்டளையிட
மீண்டும் பெருமூச்சுடன் நகர்ந்தது இரயில்
வாழ்க்கைப்பாடத்தை மக்களுக்கு உணர்த்தி.
ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையின் பகுதியென.

எழுதியவர் : 

பாலகிருட்டிணன் வண்ணமுத்து

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *