Pugazhodu Thondruga Book review by Shanthi S

 

தமிழ் இனிது. திருக்குறள் 1330 குறள்கள். முழுமையாக படித்தவர்களை கணக்கு எடுத்தால் மக்கள் தொகையில் சில லட்சங்கள் மட்டுமே இருக்கும்.

ஈரடி என்று உலகமே கொண்டாடினாலும், மனப்பாடம் என்ற ஒரு காரணத்தால் பள்ளி பருவத்திலிருந்தே திருக்குறள் மீது மிகப்பெரிய வெறுப்பே பிள்ளைகளுக்கு மிஞ்சுகின்றன. ஆனால் நாம் வளர வளர நமக்கு திருக்குறள் மீது ஒரு ஈர்ப்பு உருவாகிறது. காரணம் உலகப்பொதுமறையில் சொல்லப்பட்டவை இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

எக்காலத்திற்கும் பொருந்தும் உட்பொருள் கொண்டது. ஆதலால் நாட்டம் நம்முள் எழுகிறது. தெளிவு பிறக்கிறது. அப்படி தெளிவு பெற்றோர் அந்த இன்பத்தை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று சுயநலம் கருதாமல் பொது நலமாக கால சூழலுக்கு ஏற்ப பல வடிவங்களில் கட்டுரை, சிறுகதை என அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதில் பலரின் செயல்பாடுகளாக வெளிப்படுகிறது. அதுபோன்ற நல் உள்ளங்களில் ஒருவரின் வெளிப்பாடு தான் “புகழோடு தோன்றுக”. ஆசிரியர் திரு. கதிர் ராத் ஒவ்வொரு குறளுக்கு தனது புரிதலை சிறுகதைகளுக, கட்டுரையாக, உரையாடல் வழியாக அதன் பொருளை புரிந்துக் கொள்ளும் வகையில் நமக்கு படைப்பாக அளித்துள்ளார். சில குறள் களின் பதிவுகள்:

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம் குறிஎதீர்ப்பை நீரது உடைத்து
எதிர்பார்த்து செய்யும் உதவி ஏமாற்றத்தை தரும். அது உதவி கிடையாது. உதவி செய்வதில் பல வகை உண்டு. எதிர்பாக்காமல் செய்யும் உதவியில் ஏமாற்றாமே வராது. அதற்கு தான் கொடை ஈகை என சொல்கிறோம்.

இல்லாதார்க்கு ஒன்று கொடுப்பதே ஈகை எனப்படும் என்பதை “ஈவதொன்றே ஈகை” என்ற தலைப்பில் ஒரு சிறு உரையாடல் வழியாக தெளிவுபடுத்துகிறார் ஆசிரியர்.

நல்லாறு எனினும் கொளல்தீது மேல் உலகம் இல்லெனினும் ஈதல் நன்று
கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? அம்மாவை பிடிக்குமா? மனைவியை பிடிக்குமா? முடிவிலி. பதில் சொன்னால் ஒரு கேள்வி கேட்கப்படும்.

எ. கா. யாராவது உதவி கேட்டால் கொடு என கற்றுக் கொடுத்த நமக்கு உதவி வேண்டும் என யார் முன்னாடியும் கைய்யேந்தி நிற்காதே என சொல்ல கேட்டு உள்ளோம். அதாவது உடலில் சக்தி இருக்கும் வரை உழைத்து சாப்பிட வேண்டும். உதவி என கேட்பவர்களுக்கு உதவ வேண்டும்.

இவன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையான் கண்ணே உள
நல்ல குடிப்பிறப்பு உள்ளவனிடம் என்ன குணம் இருக்கும் என்பதை ” குலன் உடையான்” தலைப்பில் கணவன் மனைவி உரையாடல் ஊடே தெரியப்படுத்தியுள்ளார்.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு ஒருவர் தம்மிடம் இரந்து நிற்க நேர்ந்தால் அதை பார்பதே மிகவும் துன்பம் தருவதாக இருக்கும். ஒன்றை ஈந்து அவர்கள் முகம் மலர்வதை காணும் போது தான் அத்துன்பம் நீங்கும். ஒரு சிறுகதை ஊடை வலிய சென்று உதவும் நபர் ஊடே நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார் ஆசிரியர்.

இந்த புத்தக வாசிப்பு என்ன செய்யும். பென்னக குவிக் பற்றி ஒரு குழந்தையிடம் எளிதாக கடத்தி விட முடியும்.

பருக சில தேன் துளிகளின் எனது புரிதலை பதிவு செய்து முழுமையாக அந்த பலாசுளையின் சுவையை வாசகர்கள் வாசித்து தெரிந்துக்கொள்ள இத்துடன் எனது பதிவை முடித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர் கதிர்நாத் அவர்களுக்கு எனது மனமார்ந்த லாழ்த்துகளும் நன்றிகளும்.

நன்றி

புத்தகத்தின் பெயர் : புகழோடு தோன்றுக
ஆசிரியர்: திரு. கதிர் ராத்
வெளியீடு:: கலக்கல் ட்ரீம்ஸ்
பக்கங்கள்:95
விலை: Rs. 90/-

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,  கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *