பூஜ்ஜிய நேரம்
வெளியீடு.. பாரதி புத்தகலாயம்..
விலை ரூ 150..
ஆசிரியர்: மு.ஆனந்தன்.. 
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/boojiya-neram_anandham/

குற்றப்பரம்பரையில் சிக்கிய சாதிகள்…. 
பிரிட்டிஷ் இந்தியாவில் வெள்ளைப் போலீசுக்குப் பெரும் சவாலாக விளங்கிய பஞ்சாப், தக்காணப் பகுதிகளில் சுழன்று திரிந்த நாடோடி கொள்ளைக்குழுக்களை அடக்குவதற்காக 1871ம் ஆண்டு ஆங்கில அரசு கொண்டு வந்த கொடுஞ்சட்டம் தான் #குற்றப்பரம்பரைச்சட்டம்.
இதில் 213சாதிகள் சிக்கியது. 1911ல் இச்சட்டம் தமிழகத்துக்கு வந்தது. அந்த வலையில் 89சாதிகள் சிக்கிச் சீரழிந்தன.
குறவர் முதல் கள்ளர், மறவர், அகமுடையார்,முத்தரையர், வன்னியர், போயர், வேட்டுவக் கவுண்டர், ஊராளிக்கவுண்டர்,தொட்டிய நாயக்கர், தெலுங்கம்பட்டிச் செட்டியார், பறையர் வரை என நீளும்.
இதில் பிரன்மனைக்கள்ளர்  சமூகத்தினர் மீது பிரிட்டிஷ் போலீசார் குற்றப் பரம்பரை உறைதுணி போர்த்தப்பட்டு, சுருட்டப்பட்டு நையப்புடைத்த கதையை எல்லோரும் அறிந்ததே.
தேசிய அளவில் அண்ணல் அம்பேத்கர்,தமிழகத்தில் பெரியார், ரோசாப்பூ துரை ஜார்ஜ் ஜோசப்,
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பாராவ், அரிசன சேவா சங்கத் தலைவர் கி.சி.தக்கா.. கம்யூனிசத் தலைவர்கள் ப. ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்கம், உள்ளிட்ட தலைவர்கள் இந்த சட்டத்திலிருந்து சில சாதிகளை நீக்க போராடினார்கள்.
1949ல் சுதந்திர இந்தியாவில் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது.
குற்றப்பரம்பரை என்றழைப்பது நின்றது. இவர்களை சீர்மரபினர் என்றழைக்கப்பட்டனர்.
ஆவணங்களில் இன்னும் அப்படியே தான் இருக்கிறது.
மேற்சொன்னவை மு.ஆனந்தன் அவர்களின் பூஜ்ஜிய நேரம் கட்டுரைத் தொகுப்பிலுள்ள கட்டுரையின் ஒரு பகுதி….
பொதுவெளியில் சீர்மரபினர் என்று பொதுவெளியில் புழக்கத்தில் இல்லாததால் இன்று அவர்களே அவர்களை மன்னர் பரம்பரை என்று அழைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் நாளைக்கு இந்த சமூகங்கள் எல்லாம் கடந்த காலத்தைப் போலவே படிப்பு என்பதே மறுக்கப்பட்டு மீண்டும் கை நாட்டாகவோ அல்லது மறுபடியும் குலத்தொழிலுக்கே தள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் மேலே உள்ள பார்ப்பணீயவாதிகள் செய்து வருகின்றனர். நாங்கள் எல்லாம் மன்னர் பரம்பரை என்று சொல்லிக்கொடுக்கும் சிறு குறு சாதீய சங்கத்தின் தலைவர்கள் எல்லாம் இதைப்பற்றியும் கொஞ்சம் சொல்லிக்கொடுக்க வேண்டுகிறேன். இதர சமூகங்கள் மீதான வன்மங்களை மாற்றி சமூக உறவை பேணிக்காக்க வேண்டுகிறேன்.
மேலே உள்ளவை எல்லாம் என் மரியாதைக்குரிய தோழர் எழுத்தாளரும், கவிஞரும், வழக்கறிஞருமான மு. ஆனந்தன் #தமுஎகச மாவட்டச் செயலாளர் அவர்கள்
 திருநங்கைகளை குறித்தான சட்டங்களுக்காக எழுதியதை நான் சற்று மாற்றிக்கொண்டேன்.


சுயநலம் மிக்க ஆண். ..
இங்கே மனைவிக்கு சொத்தில் பங்கு கொடுப்பதை எதிர்ப்பவர்கள் விவாகரத்து பெறுவதை எளிதாக மாற்றும் சட்டப்பிரிவை எதிர்ப்பதில்லை.
விடிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து சுடு தண்ணீர் போட்டு கொடுப்பதில் இருந்து கணவனுக்கு, மாமனார், மாமியாருக்கு, குழந்தைகளுக்கு, என தனித்தனி சமையல் வீட்டு வேலைகள் மதிய உணவு, இரவு உணவு, குழந்தை வளர்ப்பு, குடும்ப பராமரிப்பு என இரவு 11 மணி வரை தன் குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும் #மனைவியை யாராவது உங்க மனைவி என்ன செய்கிறார்கள்? என்று கேட்டால் நம் வாயிலிருந்து என்ன வருகிறது தெரியுமா?
 “அவள் வீட்டில் சும்மாதான் இருக்கிறாள்” என்று ஆணாதிக்க சமூகம் சொல்கிற ஒரே பதில் இதுதான் இப்படிப்பட்ட பொதுபுத்தி தான் சொத்தில் பாகம் கொடுப்பதை எதிர்க்கிறது.
 மனைவி செய்கிற சும்மா இருக்கிற வேலைக்கெல்லாம் என்ன பணமதிப்பு? அவள் செய்கிற ஒவ்வொரு வேலைக்கும் வெளியிலிருந்து ஆள் வைத்தால் என்ன சம்பளம் கொடுக்க வேண்டும் என்று ஒரு நாள் நாம் யோசித்து இருப்போமா?
ஒரு நாளைக்கு ஒருவருக்கு காலையில் ஐந்து தோசை, இரவில் ஐந்து, என ஒரு நாளைக்கு
#10தோசை,  இட்லி சப்பாத்தி என ஒரு குடும்பத்தில் சராசரியாக ஐந்து உறுப்பினர்களுக்கு மொத்தம் #50தோசை சுடுகிறார் ஒரு மாதத்திற்கு  #1500தோசை ஒரு ஆண்டிற்கு #18000தோசை இப்படி #10ஆண்டுகளுக்கு பல லட்சம் தோசை சுடுகிறார்; சாப்பாடு, கூட்டு, பொரியல், சாம்பார், ரசம் மற்றவைகள் எல்லாம் தனி.
தொழிலாளர் சட்டங்களை பாதிக்கும் கார்ப்பரேட் வைரஸ்கள்.... - மு.ஆனந்தன் -  Bookday
மு. ஆனந்தன்
இதற்கெல்லாம் என்ன பணமதிப்பு?
இதை கூட கணக்கு போட்டு விடலாம் ஆனால்  அன்பு, பாசம், காதல், காமம்
குடும்ப கட்டமைப்பு நிர்வாகம் குழந்தை பெற்றெடுத்த வளர்த்தல் இதற்கெல்லாம் என்ன பண மதிப்பு? எந்த கணினியில் கணக்கிட முடியும்? எல்லா வகையிலும் கணவனின் வருமானத்தை விட பல மடங்கு அதிகமானது மனைவியின் உழைப்பும் பங்கும் பாத்திரமும் மதிப்பீடுகளின் எல்லையை தாண்டியது என்பது தான் உண்மை.
நான் உழைத்து சம்பாதித்த காசில் சொத்து வாங்கினேன் என்று ஒரு ஆண் சொல்வானேயானால்
மனைவியின் உழைப்பு அந்த சொத்தில் ஒரு முதலீடு இல்லையா?
ஆக ஒரு குடும்பத்தில் கணவர் வேலைக்கு சென்று சொத்து சேர்க்கிறார் அதே நேரத்தில் மனைவி தனது குடும்பத்தை கவனித்து தனது முதலீட்டை அதிலே போடுகிறாள்.
இந்த கேள்விளையும் கருத்துக்களையும் தோழர் மு.ஆனந்தன் தனது பூஜ்ஜிய நேரம் என்ற கட்டுரைத் தொகுப்பில் “.சும்மா இருக்கிற மனைவிக்குத் திருமணச் சொத்தில் பங்கு வேண்டுமா”  என்ற கட்டுரையில் எழுதியுள்ளார்…
குறிப்பாக தென்மாவட்டங்களில் மனைவி சமைத்த சோறு சரியாக வேகவில்லை,  நான் அழைக்கும் போது இல்லற சுகத்தை தரவில்லை,
பெண் என்பவள் “கட்டினவன் அழைத்தால் அது மாதவிடாய் நாட்களாக இருந்தாலும் கூட படுக்க வரணும் அதுதான் பத்தினி தர்மம்” என்று பேசியவர்களை என் வாழ்க்கையில் நிறைய ஆணாதிக்க குரலை கேட்டிருக்கிறேன்.
அப்படிப்பட்ட வறட்டு ஆணாதிக்கவாதிகளுக்கான அவசியமான புத்தகம் இது.
‘கட்டுரையின் முடிவில்……
தந்தை பெரியார் சொன்னதைப்போல ‘
ஒருவர் தன் மனைவியை நினைத்துக்கொண்டு பெண்களுக்கான உரிமைகளையும் சட்டங்களையும் எதிர்க்கக் கூடாது. தன் தாய், சகோதரிகள், மகள்களின் எதிர்காலத்தை நினைத்துக்கொண்டு இந்த சட்டங்களுக்கு குரல் கொடுக்க வேண்டும்” என்று நூலாசிரியர் கட்டுரையை முடித்திருப்பது வெகு சிறப்பு….
பூஜ்ஜிய நேரம் புத்தகத்தின் ஆசிரியர் தோழர் மு. ஆனந்தன் அவர்கள்
ஆணாதிக்க குரலின் சங்கை தனது புத்தகத்தின் வாயிலாக மிதித்துள்ளார்.
வாழ்த்துக்கள் தோழர்.
வாய்ப்புள்ள தோழர்கள் அவசியம் இந்த புத்தகத்தை வாசியுங்கள்.
வாழ்த்துகளுடன்.. 
தங்கராசு தமிழ்ப்பிரியன்….



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *