Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: புலியூர் முருகேசனின் *பாக்களத்தம்மா* – ச. சுப்பாராவ்



நூல்: பாக்களத்தம்மா
ஆசிரியர்: புலியூர் முருகேசன்
வெளியீடு: நந்தி பதிப்பகம்
விலை ரூ160.00
பக்கம் – 160

முன்பே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது தான் என்றாலும், பொருத்தம் கருதி மீண்டும் இங்கே கூறுகிறேன். கூறியது கூறல் என்பது நமது மரபில் ஊறிய ஒன்றுதானே? ஆங்கில நாவல்களில் சரித்திர நாவல், அறிவியல் நாவல், தன் வரலாற்று நாவல் – பயோ ஃபிக்ஷன் – இளையோர் நாவல், த்ரில்லர், போர்கள் குறித்த நாவல், என்று ஏராளமான வகைமைகள் உண்டு. இப்போது டாக்கு ஃபிக்ஷ்ன் என்று தமிழிலும் எழுதுகிறார்கள். டாக்குமெண்டரியாகவும் இல்லாமல், ஃபிக்ஷ்னாகவும் இல்லாமல் ஒரு வகைமை.. ஒரு மூத்த எழுத்தாளர் என்னிடம் சிக்கிரி கலக்காத காப்பியே கிடைக்காதா? என்று இந்த வகைமை பற்றி வருத்தப்பட்டார். இப்படி எத்தனை எத்தனையோ வகைமைகள் இருந்தாலும், வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கதை என்ற வகைமை நம் தமிழ் சூழலுக்கு மட்டுமே உரியது. எல்லா சிறந்த படைப்பாளிகளும் தம் காலத்தில் இந்த வகைமையில் ஒரு அற்புதமான நாவலை எழுதி விடுவார்கள். அந்த வகையில் அருமைத் தோழர் புலியூர் முருகேசன் பாக்களத்தம்மா என்ற ஒரு நாவலைப் படைத்துள்ளார்.

மதுரை, நெல்லை,கரிசல், கொங்கு, தஞ்சை வட்டார இலக்கியங்கள் செல்வாக்கு செலுத்தியிருக்கும், செலுத்தி வரும் நாவல் களத்தில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம் போன்ற நடுநாட்டு இலக்கியங்களும் தலைதூக்குகின்றன. ஆனாலும், படைப்பாளிகள் அதிகம் கண்டுகொள்ளாத ஒரு நிலப்பரப்பு திண்டுக்கலுக்கும், கரூருக்கும் நடுவில் உள்ளது. அது க.சீ.சிவகுமார் படம் பிடித்துக் காட்டிய பகுதி. நண்பர் கீரனூர் ஜாகீர் ராஜா புகுந்து விளையாடும் களம். இவர்களின் வரிசையில் இப்போது தோழர் புலியூரார் களம் புகுந்திருக்கிறார். வாழ்ந்து கெட்ட குடும்பம் – அதுவும் மதுரை மண்ணும் இல்லாமல், கொங்கு மண்ணும் இல்லாமல் இரண்டும்கெட்டான் பகுதியின் வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கதை என்பது நாவலுக்கு ஒரு விசேஷ மதிப்பைத் தருகிறது.

உடன்பிறந்த சகோதரிகளுக்கு சீர் செய்தே ஓய்ந்து போன ஒருவனின் கதை. சீர் செய்யுமளவு வயதும், சம்பாத்தியமும் வரும் வரையில் அக்காக்கள் வீட்டில், மாமாக்களின் கடைகளில் உழைத்து, தன் படிப்பை, தன் எதிர்காலத்தைத் தொலைத்துக் கொள்ளும் ஒரு சிறுவனின் கதை. தமிழிலக்கியத்தில் சிறுவர்களைப் பற்றி கு.அழகிரிசாமி மாதிரி எழுத முடியாது என்பார் தோழர்.ச.தமிழ்ச்செல்வன். அப்படிச் சொன்ன தமிழ்ச்செல்வனும் சிறுவர்கள் மனதில் புகுந்து அற்புதமான கதைகளை எழுதியவர்தான். புலியூராரும் இந்த நாவல் வழியாக அந்த வரிசையில் சேர்ந்து கொள்கிறார் என்றே படுகிறது. சிறுவயதின் வறுமையை, அந்த வேதனையை இந்த நாவலில் பல இடங்களில் மிக அற்புதமாக, அதே சமயம் மிக யதார்த்தமாகக் காட்டுகிறார் புலியூரார். 9வது அத்தியாயம் இப்படி முடிகிறது. ‘ கோவிலுக்கு வந்தவர்கள் , நடந்து கொண்டிருப்பவர்கள் என எல்லார் கையிலெல்லாம் நவ்வாப் பழப் பொட்டலம் இருப்பதை ஏக்கத்துடன் பார்த்தான். கட்டனை வாய்க்கால் பாலத்தின் பக்கத்தில் கயிற்றுக் கட்டில் கடையில் நவ்வாப் பழம் குட்டானாய்க் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதுதான் கடைசிக் கடை. அந்தக் கடையைத் தாண்டுவதற்குள், ‘டேய், நாகையா ! இந்தா! ஒங்க மாமன் ஒர்ரூவா குடுத்து விட்டாக. நவ்வாப் பழம் வாங்கித் தின்னு‘, என யாராவது காசைக் கொண்டு வந்து தர மாட்டார்களா எனத் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான். ஒருத்தரும் வரவில்லை. மாயனுர் ரயில்வே ஸ்டேஷன் வந்து விட்டது.‘ அந்த நவ்வாப் பழத்திற்கு ஏங்கும் நாகையாவாக நான் ரொம்ப நேரம் அந்தப் பக்கத்திலேயே நின்றிருந்தேன்.



ஐடிஐயில் சேரப் போவதைக் கெடுத்து, தன் சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டும் எடுபிடியாக வைத்துக் கொள்ளும் சுயநலமான அக்கா வீட்டுக்காரன், அவன் வீட்டில் சாப்பிடப் போய் படும் அவமானம், என்று சிறுவயதிலேயே வாழ்க்கை நாகையாவை வறுத்தெடுக்கிறது. அக்கா மகள்களுக்கு சீர் செய்த ஓய்ந்து போய், தன் மகனின் படிப்புச் செலவிற்குப் பணம் இல்லாமல் நிற்கிறான் நாகையா. நாகையாவின் வாழ்க்கை போல அவன் மகனது வாழ்க்கையும் கிழிந்து கந்தலாகிறது.
சிறுவயதின் வறுமை ஒரு சிலரை வைராக்கியம் கொள்ள வைக்கும். ஏதேனும் செய்து பணம் சேர்த்துவிட வேண்டும் என்று பேராசை கொள்ள வைக்கும். சரி, தவறு, நியாயம், அநியாயம் பார்க்காமல் உருட்டுப் பிரட்டு செய்து வாழ்வில் வெற்றி பெற வைக்கும். ( அதுதான் வாழ்வின் வெற்றி என்று நாம் ஏற்றால்). மற்றொரு புறம் சிறுவயதின் வறுமை எதிலும் பற்றற்ற ஒரு மனநிலையை உண்டாக்கும். ஆமா, இப்ப காச சேத்து என்னத்த கண்டோம் ! என்பதான ஒரு மனநிலையை ஏற்படுத்தும். அந்த மனநிலை கொண்டோர் கையில் இருக்கும் சொற்பத்தையும் எந்த மன உளைச்சலும் இல்லாமல் ஏமாற்றிப் பறிக்க நினைப்பவருக்கும் மனதாரக் கொடுத்து விட்டு எப்போதும் போல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களது குடும்பமும் விரும்பியோ, விரும்பாமலோ அதை ஏற்றுக் கொள்ளும். பெரிதாக அதில் குற்றம் காணாது. நம் நிஜ வாழ்வில் நாம் இப்படியானவர்களை நிறைய பார்த்திருப்போம். ‘பிழைக்கத் தெரியாதவன்,‘ ‘குடும்பம், குடும்பம் னே இருந்துட்டான்‘ என்று எதாவது சொல்லிக் கொண்டே அவர்களைக் கடந்து செல்வோம். புலியூர் முருகேசன் காட்டும் நாகையா அத்தகையவன். ஒருவேளை புலியூராரே அப்படிப்பட்டவர் தானோ என்று கூட எனக்கு திடீரென்று தோன்றியது. அப்படித் தோன்றும் படியான எளிமையான, நேரான, அதே சமயம் மனதைத் தொடும்படியான வார்த்தைகளில் சொல்லப்பட்ட கதை.

நாவலில் ஒரு ஒப்பாரியில் ஆறு செத்த ஊரானேன்…. ஆறு செத்த ஊரானேன் …. என்று ஒரு வரி வரும். நம் ஊர்கள் அத்தனையும் ஆறு செத்த ஊர்கள்தான்.. சாக்கடையும், சகதியுமாக குற்றுயிரும், குலையுயிருமாக ஓடும் ஆறுகள் உள்ள ஊர்கள்தான்…. நம் மக்கள் பலரும் அந்த ஒப்பாரி சொல்வது போல, ஒத்த எலையாயும், ஒடிஞ்சு போன கிளையாயும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள்தான்…

நமக்கிருக்கும் ஒரே ஆறுதல் அந்த ஊர்களையும், அந்த மனிதர்களையும் பற்றி மனதில் கரிசனத்தோடும், கண்ணில் கண்ணீரோடும் , கவலையோடும் எழுத புலியூர் முருகேசன் போன்ற படைப்பாளிகள் நம்மிடையே இருப்பதுதான்.

நான் வேண்டுமென்றே தான் நாவல் பற்றி விரிவாக எழுதாமல் பொதுவாகவே எழுதியிருக்கிறேன். நாவலைப் படித்தால்தான் அதன் உண்மைத் தன்மை, நாமறிந்த வாழ்க்கைக்கு அது மிக அருகில் இருப்பது தெரியும்.

வாழ்த்துகள் தோழர் புலியூர் முருகேசன்!



Latest

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து...

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை  ...

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ் தமிழில்:...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து ஆடுகிறார்.

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என் அம்மா வீடு நாளை என் வீடாக இருக்குமோ? அல்லது வேறு யாருடைய வீடாக இருக்குமோ? தெரியாது. நல்ல விலைக்கு விற்கப்படுமா? யாரின் கைக்காவது மாறிடுமா? தெரியாது வீடு என்பது எப்போதும் நிரந்தர குடியிருப்பும்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை          (2) வெள்ளையும் ஒன்று கொள்ளையும் ஒன்று கொடி நிறம் வேறு          (3) தாளமிசைக்கும்  கால்கள் தலையசைக்கும் பயிர் களை பறிப்பவள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here