புல்லாங்குழலை களவாடியவன் - கவிதை -Pullaguzhal Kalavaadiyavan (Kavithai)- Poetry by Anand Prabhu - புல்லாங்குழலைக் களவாடியவன் அந்தகனிடமிருந்து - https://bookday.in/

புல்லாங்குழலை களவாடியவன் – கவிதை

புல்லாங்குழலை களவாடியவன் – கவிதை

 

புல்லாங்குழலைக் களவாடியவன்.

அந்தகனிடமிருந்து

புல்லாங்குழலைத் திருடியவன்

வெகுநேரம் முயற்சி செய்கிறான்.

விரல் திறந்து விரல் மூடி

ஏதேதோ செய்கிறான்.

அவன் அருந்திய பெருங்கடலில்

சில துளிகளைக்கூடப் பருகவியலாது

அயற்சியடைந்து வீசிவிட

யத்தனிக்கையில்

சிறு மின்னல் வெட்டியது.

கண்களை மூடிக்கொண்டு

இருளின் அந்தகாரத்தில் நீந்தியபடி

குழலிசைக்கையில் சற்று வசப்பட்டது.

கண்கள் மூடினால் குழல் திறக்கும்

வித்தை புலப்பட்டது.

கருமைக்குள் களவாடுவதும்

குழலிசைப்பதும் ஒன்றல்லவென

புரிந்த கணத்தில்

எடுத்தஇடத்தில் வைத்துவிட்டு

நடந்துபோகிறான்.

பின்தொடர்கிறது வாசித்த சிறுதுளி.

 

எழுதியவர்: 

கௌ. ஆனந்தபிரபு

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *