ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் - பூனாச்சி - செ.புனிதஜோதி
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் - பூனாச்சி - செ.புனிதஜோதி

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – பூனாச்சி – செ.புனிதஜோதி

 

 

 

 

காலச்சுவடின் வெளியீடாய் வந்திருக்கும் பூனாச்சி நாவல் அற்புதமான கதையமைப்பைக் கொண்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் ஆட்டின் வழியாக அசுர வாழ்க்கையைப் பகிர்ந்துள்ளார்.

பசி பாடுகளுக்கிடையே அன்பை விட்டுவிடாமல் போராடும் சம்சாரிகளின் வாழ்வியல், எவ்வளவு துன்பகரமானது,உடல் உழைப்பைக் கொட்டிக்கொடுத்த போதும் எதுவும் மாற்றமடையாமல்,பசிப் போராட்டத்தைத் தூக்கிச்சுமக்கும் அவர்களின் முதுகு அதிகாரத்திற்குக் கீழ் அடிபணிந்தே செல்வதை வார்த்தைக் கோர்வையில்   அழகாக இணைத்திருப்பார் சாட்டையாய்.

மனித உணர்வுகளுக்கு கொஞ்சமும் சலித்தவையல்ல ஆடுகளும் என காதல் வயப்படும் காட்சிகளில் அகநானூற்றுச் சாற்றைப் பிழிந்து தந்திருக்கிறார். பிரிவு என்பது எல்லோருக்குள்ளும்  நிகழ்த்தும் ஒரு துன்பயியல் காப்பியம்  விலங்கு என்ன?மனிதன் என்ன? உயர்வு என்ன? தாழ்வு என்ன? என்பதை நயம்பட நகர்த்தியுள்ளார்.

காமம்  இனம்புரியா உணர்வு அதனை தடுக்க முடியா ஆண் ஆட்டை என்ன செய்கிறார்கள் என்பதை கதையோட்டத்தின் வழியாகக் காட்சிப்படுத்துகையில் கண்ணீர் வராமலில்லை. ஆடுகள் உண்ணும் பலவிதமான பெயர் தெரியாத இலை,தளைகளை  அறிமுகப்படுத்தி அசைபோட வைத்துவிடுகிறார்.

பெண் எங்கே பிறந்தாலும் அவளின் பாடுகள் தீர்வதாகயில்லை என்பதை வெள்ளாட்டின் கதை மூலம் தெளிவுப்படுத்திருக்கிறார்.
பசிக்கும்,பாசத்திற்கும்,அதிகாரத்திற்குமிடையில்  போராடும் எளிய மனிதர்களுக்கு இயற்கையும் சதி செய்கையில் வெற்று உடம்பில் மிஞ்சிக்கிடக்கும் உயிரைத்தவிர
எதனைப் பரிசாகத்தர இயலும் .என்பதை ஆணித்தரமாய் எடுத்து வைத்துள்ளார்.
பறி கொடுத்த ஆளுத்தான் பாவம்.கறி கெடச்ச ஆளுக்கென்ன லாபம் என வட்டார வழக்கில் போகிற போக்கில் சொல்லவும் செய்கிறார்.
வெறும் வெள்ளாட்டின் கதையல்ல எளிய மனிதர்களின் பாடுகளை்ப் பேசும் அற்புதமான கதை.
எந்த இடத்திலும் சலிப்பைத்தராமல் அழகாய்  அனுபவத்தின் வாசலிருந்து நம்மை வரவேற்கிறார்.
படித்துவிட்டு இறங்க முடியாமல் இருக்கிறேன் வளர்த்தவர்களைச் சுற்றி வரும் அவளின் கால்களாய் கிளுவை இலைகளை அசைபோடும் பற்களாய் பூவனைச் சுமந்து அழையும் மனமாய் விருப்பமின்றி ஏற்கும் சில தேவையாய் பிறருக்காய் வாழப்பழகிக்கொண்ட போக்கற்ற மனமாய் பெற்றுப்போடவே வளர்க்கப்படும் உடலாய்

கண்முன்னே  அழியும் தன் இனத்தை முட்டி மோதமுடியா ஈனப்பிறவியாய் பிள்ளைகளைப் பறிகொடுத்து குரலெடுத்து அழமுடியா ஊமையாய் பாசத்திற்கும், பசிக்கும், அதிகாரத்திற்கும் போராடும் உணர்வாய்

மே…மே.. கத்தியபடி

எனக்குள்ளும் மேய்ந்தபடியே இருக்கிறாள் பூனாச்சி.

செ.புனிதஜோதி

நூலின் பெயர் : பூனாச்சி 
ஆசிரியர் : பெருமாள் முருகன்.
பதிப்பகம் : காலசுவடு பதிப்பகம்
பக்கங்கள் :144
விலை : ₹.175

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *