புனல்குளம் காயத்ரி கவிதைகள்
1.
உங்கள் முகங்களை இப்பொழுதுதான் உணர்ந்து கொள்ள முடிகிறது என்னால்
சாமர்த்தியமானவர்கள் தான் நீங்கள்
உங்கள் சடங்குகளுக்கும் சம்பிரதாயத்திற்கும்
சாமானியளான என்னை ஒப்புவித்து
வேறெங்கோ சாட்சி பேசும்போது
விலைக்கு வாங்க இயலாத
முகமூடி உங்களுக்கானது.
2.
என் தனியான மனநிலை வெறுமையை எல்லாம் தொடர்ந்து கைவசம் வைத்துகொண்டு
எனை எவரிடமும்
என் தரப்பு என்னவென்று எதுவும் சொல்லவிடாது
கொல்லும் ஆற்றலுக்கு
நீயென்று பெயர்
3.
யாருடையதோவென விரட்டித் துரத்துகிறாள் வீதிக்கு !
இரண்டுநாள் வராமலிருந்து
காற்றோடு வந்தடைந்தது
வாசலில் கருஞ்சிவப்பு றெக்கை
நேசத்தோடு வளர்த்தவள் நெஞ்சடைக்க விழிக்கிறாள்
நேத்துத்தானே பார்க்க மறந்தேன் என் கொடாப்ப…
கவிதை எழுதியவர்
புனல்குளம் காயத்ரி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

