பிரசாந்த் பூஷன் மீதான தண்டனை அரசமைப்புச்சட்ட ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்திடும் -சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச. வீரமணி)

பிரசாந்த் பூஷன் மீதான தண்டனை அரசமைப்புச்சட்ட ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்திடும் -சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச. வீரமணி)

 

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்களின் ட்விட்டர் பதிவுடன் ஒருவர் ஒத்துப்போகிறாரா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் அதற்காக அவர் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருப்பது, பயங்கரமானது. (“alarming”.) அரசமைப்புச்சட்ட அதிகாரக்குழுமம் என்ற விதத்தில் உச்சநீதிமன்றத்தின் பங்களிப்பினை நேர்மையாக விமர்சித்திருப்பதை (bona fide criticism), உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு என்னும் வரம்புக்குள் கொண்டுவந்திருக்கிறது. அது இன்றைய உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளையும் அணுகுமுறையையும் மெய்யாக விமர்சித்திருக்கிறது. இதுவரையில், இத்தகைய அறிக்கைகள் அரசமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின்கீழ் பாதுகாக்கப்பட்ட உரையாக இருந்தது. அவை நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கருதப்படவில்லை. இந்தத் தீர்ப்பு இந்திய ஜனநாயகத்தில் உச்சநீதிமன்றத்தின் பங்களிப்பின் மீது வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விவாதத்தைத் தடுக்கும். இது, இந்திய அரசமைப்புச்சட்ட ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்திடும்.”

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

து. ராஜா

“கருத்து வேறுபாடு கொள்வதும் மற்றும் ஒருவரின் கருத்துக்கு எதிராக நிலை எடுப்பதும் ஜனநாயகத்தின் ஓர் அங்கமாகும். உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கி, நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர் மாநாடு நடத்தினார்கள். இப்போதைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அதுவும் அவமதிப்பு ஆகாதா? இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களை நீர்த்துப்போகச்செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பெரிய அளவில் கிளர்ச்சிகள் நடந்தபோது, அவையும் நீதிமன்றத்தை அவமதித்ததாகாதா?” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா கேள்விகளை அடுக்கியுள்ளார்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *