கவிதை சூர்யநிலா ( Sooryanila Kavithai )

கவிதை: புரிதல் – சூர்யநிலா

புரிதல்

கழிவறையில் அமரும் போது
கிருஷ்ணா என்றாள்
ஊத்தப் பல்லை விளக்கும் போது
ஈஸ்வரா என்று எச்சில் உமிழ்ந்தாள்
உதிரத்துணிகளை அலசும் போது
அட ராமா என்று அக்குளைத் தேய்த்தாள்
மழலையின் மலத்துணிகளை
துவைக்கும் போது
படைத்தவனே
என்று பிரம்மனைச் சபித்தாள்
பூசையறையில் தனது
அப்பா அம்மாவை
கும்பிடும்போது மட்டும்
திருவாசகப் பாடலைப் பாடி
நெக்குருகினாள்
யாரும் உபதேசிக்க வேண்டாம்
கடவுள்களை
எங்கே வைக்க வேண்டுமென்று
நம்மவர்களுக்கு
நன்றாகவே தெரிந்திருக்கிறது.

– சூர்ய நிலா




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *