“புத்தக தேவதையின் கதை”
கதையின் தலைப்பே என்னை வசீகரித்தது…
புத்தக தேவதையின் பெயர் ஆலியா முகம்மது பேக்.
ஒரு இஸ்லாமிய பெண் ஈராக்கை சேர்ந்தவள்…
அரபு நாட்டு கதைகளை கேட்டே வளர்ந்தாள், அதனால் அவளுக்கு
தன் கனவில் அரபு கதாபாத்திரங்களே அதிகமாய் தோன்றும்…
கதைகள் கேட்பது மட்டுமில்லாமல் வாசிக்கவும் செய்தாள்.
தன் அப்பா ஒரு தீர்க்கதரிசியின் கதையை சொல்கிறார். அவர் யார் என்றால்
அல்லாவின் இறுதி தூதர் முகம்மது நபி. அவரின் கதையைத் தான் அவர்
சொல்கிறார். அவர் வளர்ந்த விதம், குடும்ப சூழ்நிலை, அவரின் உன்னத பிரார்த்தனை,
அவர் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள், அவற்றில் இருந்து வெளி வந்தததை பற்றியும் ,
அவருக்கு அல்லாவின் பரிபூரண பக்தி கிடைத்ததைப் பற்றியும் கூறுகிறார்..
ஒரு முறை மலக்கு ஜிப்ரல் அவர்கள் அவரிடம் ‘படிப்பீராக’ என்று கூறினார் …”குர்ஆன்”
என்றால் வாசிப்பீராக என்று அர்த்தம்….
இதனை ஆலியா உற்று நோக்கினாள். வாசிப்பீராக என்ற வார்த்தை அவளுக்குள்
மெருகேறியது… அந்த கதைக்குப் பின் அவள் அப்பா குர் ஆன் பரிசளித்தார்…
அன்றிலிருந்து அவள் வாசிப்பை மிக நேர்த்தியாக தொடங்கினாள்..
புத்தக+தேவதையின்+கதை
சிறு வயதிலேயே ஆலியாவின் அப்பா அவளுக்குப் புத்தகங்களை
தேர்ந்தெடுத்துக் கொடுப்பார். ஏன் என்றால் வாசிப்பிற்கு ஒரு தனி சக்தி உண்டு,
நமக்கு சரி எது, தவறு எது என்று சுட்டி காட்டுகிறது.
நமக்கு அறிவை புகட்டுகிறது..
வாசிப்பு நம் உள் உணர்வுகளை திறக்கிறது,
மனதை பரிசுத்தமாக்குகிறது, நற்பண்புகளை உருவாக்குகிறது…
ஆலியா புத்தக வாசிப்பிலிருந்து ஒரு முக தன்மையை கற்றுக்கொண்டாள். அதனால் எப்படிப்பட்ட புத்தகமாயினும் உடனே படித்து முடிக்கக் கூடிய திறன் அவளிடம் வந்தது..
படிக்கும் புத்தகங்களில் உள்ள கதாபாத்திரங்களை பற்றி விவரிப்பதில் ஒரு பயனும்
இல்லை என்றும், அதில் அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும்
அவள் அம்மா உணர்த்தினாள்..
இன்னும் ஆலியா பற்றி சுருக்கமாக சொன்னால் அவள் ஒரு வீரப் பெண். அவளுக்கு
பிடித்தமான வேலையே அவளுக்கு கிடைத்தது. ஆம், நூலகர் வேலை. பின் அவள் திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகள், ட்வின்ஸ்..
தன்னை மணம் முடித்தவரும் புத்தகம் வாசிப்பவரே..
தன் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எல்லாம் தன் குழந்தையைப் போல பாவித்தாள். … அவற்றை தொடும் பொழுதும் குழந்தையைப் போல மென்மையாகத் தொடுவாள்…
இவள் புத்தகங்களின் மீது வைத்த பிரியத்தை பார்த்து அவளின் கணவர் அவளுக்கு “புத்தக தேவதை “என்று பெயர் சூட்டினார் …
இவள் நிஜத்திலும் தேவதையே , ஈராக்கில் நடந்த யுத்தத்தில் ஊர் முழுக்க குண்டு வெடிப்புகள், தனது நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களையும் பாதுக்காக்க போராடினாள். அலைந்து திரிந்தாள், அதிகாரிகளைச் சந்தித்தாள். ஆனால் அவர்கள் அலட்சியமாய் பதில் சொன்னார்கள், ஒரு வழியாக சில நண்பர்களின் உதவியோடு மீட்டெடுத்தாள்…
முழுமையாக பாதுகாத்து விட்டாள்… அலைந்து திரிந்ததில் அவளுக்கு நெஞ்சு வலி வந்து அறுவை சிகிச்சை செய்தார்கள்… மயக்கமானாள், மயக்கத்தில் தூங்கினாள். தூக்கத்தில் அல்லாவின் கைகளைப் பிடித்து நடப்பது போன்று கனவு…
இவள் அல்லாவை முழுமையாக நம்பினாள்.. இறைவனின் அருள் கிடைத்தால் அனைத்து காரியங்களிலும் நமக்கு துணையாக இருப்பார் என்று…
புத்தகம் வெறும் எழுத்தல்ல, உயிர் வாழவைக்கும் மூச்சை போன்று….
படிப்போம், வாசிப்போம், பகிருவோம்…!
எனக்கு தேவதையைப் பிடித்திருக்கிறது!உங்களுக்கு...?
நூல்: புத்தக தேவதையின் கதை
ஆசிரியர்: பேரா.எஸ்.சிவதாஸ் (தமிழில் யூமா வாசுகி)
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை: ரூ.70
R. சாஹிதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *